விஞ்ஞானம் என்றால் என்ன

விஞ்ஞானம் என்பது என்ன

அறிமுகம்

வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இன்று விஞ்ஞானம் ஊடுருவியுள்ளது. மனிதன் கருவில் தோன்றிய காலத்திலிருந்து அவனது ஆயுள் முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி தொடர்கின்றது என்பதே நிதர்சன உண்மையாகும்.

மனிதன் இயற்கை மீது தனது உழைப்பை கையாளத் தொடங்கிய முதல் வடிவமே, விஞ்ஞானத்தின் ஆதி மூலமாகும்.

இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சி இல்லாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மேலோங்கியுள்ளது. விஞ்ஞானம் மக்களின் வாழ்வியல் அனுபவங்களில் இருந்தும், தற்செயல் நிகழ்வுகளிலும், இயற்கை அவதானிப்பில் இருந்துமே உருவாகின்றது.

விஞ்ஞானத்தை நிராகரித்த மனித வாழ்வு என்பது, இயற்கையை மட்டும் சார்ந்து வாழும் சிரமமான வாழ்க்கை ஆகும்.

மனித வாழ்க்கையை வளமாக வாழ விஞ்ஞானத்தின் தேவை இன்றியமையாததாகும். விஞ்ஞானத்தைத் தினசரி வாழ்வில் கடமையுணர்வோடு பயன்படுத்த ஆரம்பித்தால் நாம் வளமோடு வாழ முடியும்.

விஞ்ஞானம் என்றால் என்ன

விஞ்ஞானம் என்றால் என்ன

விண் என்ற அறிவை வைத்துக்கொண்டு அதிலிருந்து வளர்வது விஞ்ஞனம் எனலாம். விஞ்ஞானம் “அறிவியல்” என்றும் அழைக்கப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் Science என்று அமைக்கப்படுகின்றது. Science என்ற ஆங்கில வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து உருவானதாகும்.

அறிவியல் என்பது அறிந்து கொள்ளுதலாகும். ஏன், எதற்கு, எப்படி என்ற அடிப்படையில் அறிய முற்படுதலாகும். ஒரு கருத்தை முன்வைத்து நிகழ்வுகளை ஆராய்ந்து தரவுகளை பெற்று பரிசோதனையைச் செய்தலே அறிவியல் எனலாம்.

அதாவது நாம் காணும் அல்லது உணரும் அனைத்தையும் நம் அறிவுக்கான எல்லைக்குள் கொண்டு வருவதே விஞ்ஞானம் ஆகும்.

தமிழர்களும் விஞ்ஞானமும்

நம்முன்னோர்கள் அறிவிலுக்கு முன்னரே விஞ்ஞானம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களின் விஞ்ஞானம் பிரம்மிக்கத்தக்கதாக இருந்துள்ளது.

முன்னோர்களால் அறிவியலில் நிலம், நீர், காற்று, நெருப்பு இவற்றை எளிதாக அறிந்து கொள்ள முடிந்தது. நம் முன்னோர்கள் விண்னைப் பற்றிய ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். விண்ணின் அளவைப் பற்றிய கணக்குக் கூட அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதித் தமிழர்கள் வாழ்வியலானது மெஞ்ஞானத்தின் வழியே விஞ்ஞான வாழ்வு முறையாகும். இவற்றை வரலாற்றுச் சின்னங்களும் வாழ்க்கை முறைகளும் எடுத்தியம்புகின்றன.

இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுக்களில் ஒன்றாக சிதம்பரம், காலகஸ்தி, காஞ்சிபுரம் போன்ற கோவில்களைக் குறிப்பிடலாம். இக் கோவில்கள் புவியில் ஒரே நேர்கோட்டில் அமையப்பெற்றுள்ளன.

அதாவது Longtitudinal line Seventy nine degree forty one minutes என்ற ஒரே நேர் கோட்டில் அமையப் பெற்றுள்ளன. நவீன செயற்கைக் கோள்கள் இல்லாத காலத்தில் ஒரே நேர்கோட்டில் இக் கோவில்கள் கட்டப்பட்டமை வியப்பின் உச்சக்கட்டம் எனலாம்.

சிதம்பரம் கோவிலில் 21600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இவை ஒரு நாளில் மனிதன் சராசரியாகச் சுவாசிக்கக் கூடிய எண்ணிக்கையைக் குறிக்கின்றது.

இவ்வேடுகள் 65000 ஆணிகளைக் கொண்டு பதிக்கப்பட்டுள்ளன. இது மனித உடலில் இருக்கக் கூடிய நாடிகளைக் குறிக்கின்றது.

மேலும் இக்கோவில் அமைந்துள்ள இடமானது காந்த சக்தியின் மையப்பகுதி என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like :
அறிவியல் வளர்ச்சி கட்டுரை
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை