இந்த பதிவில் “நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை” எனும் தலைப்பில் இரண்டு (02) கட்டுரை பதிவை காணலாம்.
கைக்கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் நான் ஒரு கைக்கடிகாரமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று என் மனதுக்குள் எழும் எண்ணமே இந்த இரண்டு கட்டுரைகளும்.
Table of Contents
நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை – 1
மனிதர்கள் தமது வாழ்நாளில் நேரம் என்பதை மிக முக்கியமானதாக கொள்வார்கள் நேரம் பொன்னானது என்பார்கள். அதனை காட்டும் கடிகாரம் நானாவேன்.
எல்லோரும் தினம் தோறும் வேலைகளை ஆற்றவும், வேலைகளை முடிக்கவும், விளையாடவும், பாடங்களை படிக்கவும், உணவு உண்ணவும், தூங்குவதற்கும், மனிதர்கள் என்னை பார்த்து தான் முடிவுகளை எடுப்பார்கள். ஏனென்னறால் அன்றாட வாழ்வில் நேரம் மிகவும் முக்கியமானதாகும்.
சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கின்ற ஒவ்வொருவர்களுடைய கைகளிலும் நான் இருப்பேன். ஏன் என்றால் நேரம் பயனுடையதாக பயன்படுத்தப்பட வேண்டியதாக இருப்பதனால் என்னை அடிக்கடி பார்த்து கொள்வது மனிதர்களின் பழக்கம்.
நேரத்தை விரயமாக்குவது தவறான பழக்கம் என்பதனால் நான் நேரத்தை துல்லியமாக மனிதர்களுக்கு ஞாபகமூட்டியவாறு எப்போதும் அவர்கள் கைகளில் இருப்பேன்.
அதிகாலையில் தூக்கத்தில் இருந்து அவர்களை நானே எனது அலாரத்தின் மூலம் எழுப்புவேன். அவர்களது அன்றாட கடமைகளை ஆற்ற நானே ஞாபகப்படுத்துகிறேன்.
அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெற அவர்களது கடின உழைப்புக்கள், பயிற்சிகள், பொன்னான நேரங்கள், அழகான நினைவுகள் என்று ஒவ்வொரு நாளையும் நான் உடனிருந்து அவர்களுக்கு காண்பித்து கொண்டிருப்பேன்.
பாடசாலைகளில் தொடர்ச்சியாக கல்வி கற்று சலித்து போகின்ற மாணவர்களுக்கு இடைவேளை நேரம், பாடசாலை முடிந்து மணி ஒலித்து வீடு செல்லும் நேரம், சக நண்பர்களோடு மைதானத்தில் விளையாடுகின்ற நேரம், அன்பான உறவுகளோடு செலவிடுகின்ற நேரம், மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் உறவுகளோடு பேசி கொள்கின்ற நேரம், கடினமாக உழைத்தவர்கள் வெற்றி பெறும் நேரம் இவையெல்லாம் நான் காண்பித்தவற்றில் மிகச்சிறந்த மணித்துளிகளாக இருக்கும்.
மகிழ்ச்சியோ கவலையோ எல்லாம் கடந்து சென்றுவிடும் என்பதை நான் எப்போதும் காட்டிக்கொண்டிருப்பேன்.
நான் ஒரு கைக்கடிகாரம் கட்டுரை – 2
ஒரு கைக்கடிகாரம் என்றவகையில் நான் என்னை அணிந்திருப்பவர்களை ஒரு வசீகரமானவர்களாக காண்பிப்பேன். மற்றும் சிறந்த நேர முகாமைத்துவம் உடையவர்களுடைய கைகளில் என்னை காணலாம்.
அவர்களுடைய அழகான தோற்றத்தை தீர்மானிப்பவனாகவும் நான் இருப்பேன். சிறந்த மாணவர்கள், தொழில் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள் என்னை விரும்பி அணிந்திருப்பார்கள்.
நான் விலைகளுக்கு ஏற்றாற்போல் விலை உயர்ந்ததாகவும் எளிமையானதாகவும் கிடைப்பேன் ஆனால் பாரபட்சமின்றி ஒரே நேரத்தை தான் எல்லோருக்கும் காட்டுவேன்.
அந்த நேரத்தை சரியாக பயன்படுத்துபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். என்னை சரியாக பயன்படுத்தாதவர்கள் வாழ்க்கையை தவற விடுவார்கள்.
சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏதாவது பரிசு கொடுக்க விரும்பினால் அதிகமானோர் என்னை தான் பரிசாக கொடுப்பார்கள் ஏனென்றால் சிறந்த ஞாபகார்த்தமாகவும் சிறுவயதில் இருந்தே நேரத்திற்கு ஏற்ப வேலை செய்யயவும் அவர்கள் என்னை பயன்படுத்துவார்கள்.
நான் மனிதர்களது உற்ற நண்பனாக எப்போதும் அவர்களோடு உடனிருப்பேன் சோர்வடையாது உற்சாகமாய் முன்னேறி செல்ல நான் அவர்களுக்கு உந்துதலாய் இருப்பேன்.
நேரத்தை காண்பிப்பது என்னுடைய வேலை அதை பயனுடையதாகவும் பயனற்றதாகவும் மாற்றிகொள்வதும் அவர்களுடைய கைகளில் தான் உள்ளது.
இரவு பகல் ஓய்வின்றி நான் அவர்களுக்கு நேரத்தை காட்டுவேன் நிற்காமல் நான் ஓடி ஓடி களைத்துவிட்டதற்கு ஓய்வாக இன்று இலக்க முறையில் நவீன கடிகாரங்களை உருவாக்கியுள்ளனர்.
எல்லோரும் ஓய்வெடுத்து கொண்டாலும் நான் ஓய்வெடுத்து கொள்வதாயில்லை என்னை போலவே நீங்களும் ஓடிக்கொண்டே இருங்கள் நிச்சயம் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.
முன்னேறி செல்வது மட்டும் தான் என்னுடைய வேலை நீங்களும் என்னை பின்பற்றுங்கள்.
You May Also Like :