நன்கொடை என்பது ஒரு நற்செயலுக்காக ஒருவர் வழங்கும் பொருள் அல்லது பணம் ஆகும். ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் மன்னர்களே நன்கொடை வழங்கி சமூக சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்களாக காணப்பட்டனர்.
ஆதாரமாக பாரி மன்னன் முல்லை கொடிக்கு தேர் கொடுத்தான். இவ்வாறு முன்னைய காலத்தில் பல மன்னர்கள் பலவகையான கொடைகளை கொடுத்தனர்.
அதுமட்டுமன்றி பல்லவ மன்னர்கள் அவர்களுடைய காலத்தில் மக்கள் நலமாக வாழ வேண்டும் என பல நன்கொடைகளை மக்களுக்காக வழங்கினர். இவ்வாறு அன்று மட்டும் அன்றி இன்றுவரையும் பலர் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
எனவே இவ்வாறு மானிடரின் உன்னதமான செயலான நன்கொடைக்கு பல வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
நன்கொடை வேறு சொல்
- கொடை
- தானம்
- பரிசு
- அன்பளிப்பு
- சன்மானம்
- வெகுமதி
- இனாம்
Read more: நீர் வேறு பெயர்கள்