நந்தவனம் வேறு சொல்

நந்தவனம் வேறு பெயர்கள்

நந்தவனம் வேறு சொல்

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

எனக் கடுவெளிச்சித்தர் பாடுகிறார். அதாவது அவர் இங்கு நந்தவனம் என உலகையும் அதில் வாழும் உயிர்களை படைத்த இறைவனை குயவன் எனவும் வர்ணிக்கின்றார்.

இவ்வாறு அவர் உலகை சித்தரிப்பதற்கு காரணம் நந்தவனத்தில் பூக்கள் நிறைந்து காணப்படுவதைப் போல உலகில் உயிர்கள் நிறைந்து இருப்பதனாலேயே நந்தவனம் என உலகை வர்ணிக்கின்றார் கடுவெளிச்சித்தர்.

எனவே, நந்தவனம் என்பது பூக்கள் நிறைந்த தோட்டம். இங்கு பலவகையான வாசனையைக் கொண்ட பல வகையான பூக்களும் பல வகையான மர வகைகளும் காணப்படும்.

வீடுகளில் அமைக்கப்படும் சிறிய தோட்டங்கள் நந்தவனம் என அழைக்கப்படல் ஆகாது. கோயில்கள் அரண்மனைகள் ஆகியவற்றில் அமைக்கப்படும் பெரிய அளவிலான பூந்தோட்டமே நந்தவனம் ஆகும்.

ஆரம்ப கால அரசர்கள் நந்தவனத்தை மனதை அமைதிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர். அப்பழக்கம் இன்றும் காணப்படுகின்றது.

சிலர் அதிக மன அழுத்தம் ஏற்படும் போது தனிமையாக நந்தவனங்களை தேடிச் சென்று அங்கு தன் நேரத்தை கழித்து மன நிறைவடைகின்றனர்.

மேலும் வயது முதிர்வடைந்தவர்கள் நந்தவனங்களிள் வாசம் செய்து மன நிறைவடைகின்றனர். இவ்வாறு நந்தவனம் என்பது மன நிறைவை தரும் விடயமாகக் காணப்படுகின்றது.

மேலும் இறைவன் விரும்பி வாசம் கொள்ளும் இடமாகவும் நந்தவனம் காணப்படுகின்றது. அதனாலேயை பெரிய அளவில் நந்தவனங்கள் ஆலயங்களில் அமைக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்ல நான்கு நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் உழவாரப்படை கொண்டு பணியைத் தொண்டு செய்வதோடு ஆலயங்களில் நந்தவனம் அமைப்பையும் தொழிலாக மேற்கொண்டார்.

நந்தவனம் என்பது அனைவராலும் விரும்பக்கூடிய அழகை தன்னகத்தே கொண்டதாகும்.

நந்தவனம் வேறு சொல்

  • பூஞ்சோலை
  • பூங்கா
  • பூந்தோட்டம்
  • மலர்த்தோட்டம்
  • மலர்வனம்
  • பூங்காவனம்
  • சோலை

Read more: பற்களில் மஞ்சள் கறை நீங்க

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்