ஒரு மாவட்டமானது பல நிர்வாக பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்து காணப்படும். அந்தவகையில் தாலுகா என்பது ஓர் நிர்வாக பிரிவாகும். இதனை வட்டாட்சி முறைமை என்றும் அழைப்பர்.
Table of Contents
தாலுகா என்றால் என்ன
தாலுகா என்பது இந்தியாவின் மாவட்ட வருவாய் துறையில் காணப்படும் ஒரு நிர்வாக பிரிவே தாலுகா ஆகும். அதாவது நிர்வாக வசதிக்கேற்றாற் போல் சில பிரிவுகளை ஏற்படுத்தி காணப்படும் ஓர் அமைப்பாகும்.
ஒரு மாவட்டத்தில் காணப்படும் துணை மாவட்டத்தினையே தாலுகா என்பர். இந்த தாலுகாவின் தலைவரை தாசில்தார் என்று அழைக்கின்றனர்.
தாலுகாவின் பணிகள்
தாலுகா பிரிவிற்குற்பட்ட வகையில் அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை விசாரித்தல் தாலுகாவின் பணிகளில் ஒன்றாகும். மேலும் கட்டுப்படுத்தும் அதிகாரிகளை கொண்டும் தாலுகாவானது செயற்படும்.
தாலுகாவின் ஊடாக கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள் போன்றோரின் பரிந்துரைகளின் பேரில் வருவாய் சான்றிதழ் மற்றும் நில உடமைச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் போன்றன வழங்கப்படுகின்றன.
மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்ற பட்சத்தில் அப்பிரச்சினைகளுக்கு முன்பதாகவே செயல்படுவதற்குரிய வாய்ப்பினை தருகின்றது.
நிர்வாக வசதியினை கருத்திற் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் ஒரு அமைப்பாக தாலுகாவானது காணப்படுகின்றது. அதாவது தனது நிர்வாக பிரிவிற்கு உட்பட்ட வகையில் நிதி மற்றும் நிர்வாக அதிகாரத்தை தாலுகாவானது பிரயோகிக்கின்றது.
நிர்வாகத்தை எளிதாக்குவதற்கும் பொது மக்களுக்கு வசதிகளை வழங்குவற்கும் பொதுவாக தாலுகாவானது துணை புரிகின்றது.
தாசில் தாரர்
தாசில் தாரரினை வட்டாட்சியர் என்றும் குறிப்பிடலாம். இவர் அனைத்து தாலுகாவிற்கு உட்பட்டு கிராம வருவாய் வட்டங்களை பார்த்துக் கொள்ள கூடியவராவார். இவரை மாவட்ட ஆட்சியர் என்றும் அழைப்பர்.
தாசில் தாரரின் அதிகாரங்கள்
தாலுகாவின் தலைவரான இவருடைய பணியானது பல்வேறுபட்ட வகையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சாதி சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ், குடியிருப்பு மற்றும் மதிப்பீட்டு சான்றிதழ் போன்றவற்றை வழங்குபவராக தாசில்தாரர் காணப்படுவார்.
பொது நிறுவனம் மற்றும் அரச நிறுவனங்களுடைய வரிகளை வசூலித்தல், பட்டா மாற்றுதலை பராமரித்தல், பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்களை வழங்குதல்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது பணிகளை மேற்கொள்தல் போன்ற பணிகளை தாசில்தார் மேற்கொள்வார். தாசில்தாரருக்கு அனுபவம் மற்றும் பதவியுயர்வு என்பன இடம்பெறக் கூடியதாக காணப்படும்.
தாசில்தாரருக்கு தனி அலுவலகம் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள். இவர்கள் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்றோர் நில அளவை பணிக்காக காணப்படுகின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திற்கும் அக்கிராம நிர்வாக அலுவலகர் காணப்படுவார். மேலும் ஒரு தாசில்தார் ஆனவர் தப்பு செய்யுமிடத்து கோட்டாட்சியாரிடம் முறையிட முடியும். மேலும் மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாக கொண்டு நிர்வாக வசதிக்கேற்றாற் போல் தாலுகாவானது அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தாலுக்காவின் தலைவரான தாசில்தாரருக்கு உதவி புரிவதற்காகவே மண்டல துணை வட்டாச்சியாளர்களும், வருவாய் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் போன்றோர் நியமிக்கப்படுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட வகையிலேயே தாலுக்காவானது காணப்படுவதோடு இவர்களுக்காக வட்டாட்சியாளர் அலுவலகம் என்றதொன்றும் காணப்படுகின்றது. மேலும் இதனூடாக சிறந்த முறையில் அரசாங்கத்தின் பணியினை இலகுவாக்கி கிராம மட்டங்களில் சேவையாற்றுவதனை காணக்கூடியதாக உள்ளது.
Read More: வாகைத் திணை என்றால் என்ன