மனிதன், பூமி, நிலவு, கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள்.
இந்த விண்வெளிப் பயணத்தில் செயற்கைக்கோள் என்பதும் முதன்மை வகிக்கின்றது. செயற்கை செயற்கைக்கோள் என்பது விஞ்ஞானம், இராணுவம் அல்லது தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக பூமியைச் சுற்றியுள்ள ஒரு சாதனமாகும்.
செயற்கைக்கோள்களின் பயன்கள் பலவாகும். செயற்கைக்கோள் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
செயற்கைக்கோள் பயன்கள்
இராணுவக் கண்காணிப்புக்கு பயன்படுகின்றது.
இராணுவ நோக்கிலான கண்காணிப்பில் ஈடுபட்டு, தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் மேற்கொண்டு வருகின்றன.
விண்வெளி ஆராய்ச்சி.
செயற்கைக்கோள்கள் வான்வெளியில் உள்ள கதிர்வீச்சு, வெப்பம் போன்றவற்றை ஆய்வு செய்ய பயன்படுகின்றது. நிலவை ஆராய்வதற்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் சந்திரயான் ஆகும்.
நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்த உதவுகின்றது.
மொபைல் போன், இணையதளம், அகண்ட அலைவரிசை உள்ளிட்ட தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சி ஏற்படுத்துவதற்கு செயற்கைகோள்கள் உதவியாக இருந்துள்ளன.
வானிலை அவதானிப்புகளை மேற்கொள்ள முடிகின்றது.
செயற்கைக்கோள்கள் வானிலை அவதானிப்புக்களை மேற்கொள்ளவும் பெரும் உதவியாக இருந்து வருகின்றன. இதனால் பேரிடர்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடிகின்றது.
நில வரைபடம் தயாரித்தல்.
பூமியைக் கண்காணித்து அதன் பரப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை புகைப்படங்கள், வரைபடம் வழியே அறிய உதவுகின்றன. வரைபடமாக்கல் மற்றும் ஆய்வுப் பணிகளில் இந்த விவரங்கள் பேருதவியாக இருக்கின்றன.
போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலை மேற்கொள்ள உதவுகின்றது.
கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
புவி கண்காணிப்பிற்கான செயற்கைக்கோள்கள் வான்வழி போக்குவரத்து, கடல் போக்குவரத்து மற்றும் கிராமம், நகரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் அதன் பண்பாடுகளைத் துல்லியமாக படம் எடுத்து அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர்களை முன்கூட்டியே அறியலாம்.
செயற்கைக்கோள் மூலம் பருவகாலம் மற்றும் பேரிடர் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகின்றது. மழைக்காலங்களில் புயல் மையம் கொள்வதையும், சூறாவளி சீறி வருவதையும் உரிய நேரத்தில் எச்சரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றது.
விண்ணில் இருந்து புவியைக் கண்காணித்துக் கொண்டிருக்க உதவுகின்றது.
கடல் பகுதிகளின் பாதுகாப்பு, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார் ஆராய்ச்சி பணிகளை செயற்கை கோள்கள் மேற்கொள்ளும்.
புதிய வசதிகள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன.
செயற்கைக்கோள்களின் மூலம் நவீன தொடர்பாடல் வசதிகளை அனுபவிக்கக் கூடியதாகவுள்ளது. தொலைபேசி பயன்பாடு, தொலைக்காட்சி பார்த்தல், விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிப்பது போன்றவையெல்லாம் செயற்கைக்கோள்கள் மூலமே வினைத்திறன் மிக்கதாக மாறியுள்ளது.
மீன் பிடித்தலுக்கு உதவுகின்றது.
ஆழ்கடல் மீன்வளத்தை அறிந்து மீன்பிடித்தலில் ஈடுபடவும் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன. கடந்த ஆண்டுகளில் செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் மீன்பிடி தொழில் மற்றும் விவசாயத்தில் பல கோடி அளவுக்கு நன்மை கிடைத்துள்ளதாகத் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
You May Also Like : |
---|
அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை |
கணினியின் பயன்கள் |