சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை

samuga valaithalam katturai in tamil

இந்த பதிவில் “சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இன்று சமூக வலைத்தளங்களின் பாவனை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றது.

இவை பல ஆரோக்கியமான விடயங்களுக்கு பயன்பட்டாலும் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன.

சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சமூக வலைத்தளங்கள் எனப்படுபவை
  3. சமூக வலைத்தளங்களின் உருவாக்கம்
  4. அன்றாட வாழ்வும் சமூக வலைத்தளங்களும்
  5. சமூக வலைத்தளங்களின் நன்மைகள்
  6. சமூக வலைத்தளங்களின் தீமைகள்
  7. முடிவுரை

முன்னுரை

இன்றைய மனிதர்களுடைய வாழ்வு வெகுவாக மாறியுள்ளது. மிகவிரைவான தகவல் தொழிநுட்ப சாதனங்கள் இதனை சாத்தியமாக்கியுள்ளன.

உலகில் உள்ள மனிதர்களில் இந்த தொழில்நுட்பங்களை பாவிக்காமல் இருப்பவர்கள் விதிவிலக்கு என்று கூறுமளவிற்கு இதன் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

உலகமெங்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனோடு இணைந்த சமூக வலைத்தளங்களினுடைய பாவனை மனிதனை அடிமைபடுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல நாம் அனைவரும் இந்த மாற்றத்தை ஏற்றாகி விட்டு பல வருடங்களாகின்றது.

இக்கட்டுரையில் சமூக வலைத்தளங்கள் எனப்படுவது, அதனுடைய தோற்றம், அதனுடைய அனுகூலங்கள், பிரதிகூலங்கள் என்பன தொடர்பாக நோக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள் எனப்படுபவை

சமூக வலைத்தளங்கள் எனப்படுவவை தூரமாய் இருக்கும் மனிதர்களையும் சமூகங்களையும் அருகாமையில் உணர வைக்கின்றது. இது உலகளாவிய கோடிக் கணக்கான பயனர்களை கொண்ட வலையமைப்பாகும்.

இது உலகமயமாதலின் பரிநாமம் என்றே கூறலாம். 1987களில் முதன் முறையாக இதற்கான அடித்தளம் இடப்படுகின்றது. இணையம் என்ற அத்திவாரம் இதற்கு வித்திட்டது.

உலகத்தின் எந்த பாகத்தில் இருந்தாலும் எவ்வாறான மொழி கலாச்சாரம் என்பவற்றை பின்பற்றினாலும் அவர்களை ஒன்றிணைப்பது சமூக வலைத்தளங்களின் பெருவெற்றி எனலாம்.

வேறுபட்டு கிடந்த மக்களை சமூக வலைத்தளங்கள் இணைக்க துவங்கின. நீண்ட தூரங்களில் இருந்த உறவுகளையும் இவை நெருக்கமாக்கின.

சமூக வலைத்தளங்களின் உருவாக்கம்

ஆரம்பகாலங்களில் மனிதர்களுடைய தொடர்பாடல் கடிதங்கள் வாயிலாக இருந்தன பின்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைபேசிகள் உருவாகின. அதன் பின்னர் கணினிகள் உருவாகின.

கணினிகள் வாயிலாக மின்னஞ்சல் போன்ற ஊடகங்கள் வாயிலாக ஆரம்பித்த தொடர்பாடல் முதன் முதலில் 1997 இல் Six Degree என்ற சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2005 இல் You Tube எனும் Video Sharing செயலி உருவாகி பிரபல்யம் அடைந்தது. அதனை தொடர்ந்தே Facebook, Yahoo ஆகியன உருவாக்கம் பெற்றன.

2006 களில் இன்றை உலகின் பிரபல்யமான Facebook, Twiter போன்ற வலைத்தளங்கள் உருவாகி உலகளவில் அதிக பயனர்களை ஈர்த்தது. இன்று இவற்றின் வளர்ச்சி உச்சம் தொட்டுள்ளது.

மேலும் Instagram, Messenger, Viber, Whatsapp என பல்வகையான வலைத்தளங்கள் உருவாகி மனித சமூகத்தை வேறொரு பரிநாமத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றது.

அன்றாட வாழ்வும் சமூக வலைத்தளங்களும்

அன்றாட வாழ்வில் நாம் உணவு தண்ணீரை தவிர்க்க முடியாததை போலவே சமூக வலைத்தளங்களது பாவனையும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

நண்பர்கள், உறவுகள் எவ்வளவு துரமாக இருந்தாலும் அவற்றினை மனதுக்கு நெருக்கமாக மாற்றுகின்றது சமூக வலைத்தளங்கள்.

விரைவான தொடர்பாடல், விரைவான தகவல்கள், அனர்த்த முன்னறிவிப்புக்கள், உலக செய்திகள், சுவாரஸ்யமான தகவல்கள் இவை அனைத்தையும் மிக விரைவாக அறிந்து கொள்ள முடிகிறது.

உலகம் உள்ளங்கைக்குள் அடக்கம் என்ற விடயத்தை சமூக வலைத்தளங்களே சாத்தியமாக்கின.

அன்றாடம் எமது இன்பமோ துன்பமோ அனைத்திலும் இந்த வலைத்தளங்கள் கலந்து விட்டன.

வாழ்த்துக்களும் அனுதாபங்களும் இரங்கல்களும் இங்கே தான் பகிரப்படுகின்றன. பலரது திறமைகளுக்கும் சமூக வலைத்தளங்களே களம் அமைத்து கொடுக்கின்றன.

சமூக வலைத்தளங்களின் நன்மைகள்

குறுகி கிடந்த மனிதனின் உணர்வுகளை கனவுகளை விலாசப்படுத்திவை இவை தான் மனிதர்கள் வாழ்வினை கொண்டாட காரணமானவையும் இவைதான் புகைப்படங்கள், காணொளிகள் வாயிலாகவும் அழகான நினைவுகளை பகிர்ந்து கொள்ள இவை உதவின.

கடல் கடந்து, தேசம் கடந்து, மனிதம் என்ற உணர்வில் பல நண்பர்களை இது உருவாக்கி இருக்கின்றது.

செல்ல முடியாத நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பார்க்க முடிகிறது.

நல்ல கலை வடிவங்கள், படைப்புக்கள், புத்தகங்களை இருந்த இடத்தில் இருந்தே பார்க்க முடிகிறது.

இணைய வழியில் வீட்டில் இருந்தபடியே விரும்பியவர்களிடம் கல்வி கற்கமுடிகிறது. தேவையான தகவல்களை தேடவும் முடிகிறது.

இந்த அசாதாரணமான காலகட்டங்களில் வீட்டில் இருந்தே வேலை பார்க்கவும் முடிகிறது.

உலகமெங்கும் நடைபெறும் வன்முறைகள் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் முடிகிறது. அது போல பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான உதவிகள் வாய்ப்புகள் கிடைக்கவும் இந்த வலைத்தளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றது.

உலகமெங்கும் விளம்பரங்கள், செய்திகள், தகவல்கள், வியாபாரங்கள் சமூக வலைத்தளங்களை அடிப்படையாக கொண்டே இடம் பெறுகின்றன.

சமூக வலைத்தளங்களின் தீமைகள்

சமூக வலைத்தளங்கள் பல நன்மைகளை தந்தாலும் பல தீமைகளையும் தருகின்றது. ஒரே வீட்டில் வாழ்பவர்கள் கூட உறவுகளிடையே பேசமுடியாத ஒரு தூரத்தை இவை உருவாக்கியிருக்கின்றன.

அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் பலரும் பொழுது போக்குவதனால் கண், தலை, கை, மூளை போன்ற உடலியல் சார்ந்த நோய்கள் உருவாக இது காரணமாக இருக்கின்றது.

மற்றும் சமூக வலைத்தள பாவனையால் அவர்களது தனிப்பட்ட முயற்சி, வேலை, கல்வி போன்றன பாதிக்கப்படுகின்றன.

இன்றைய சூழலில் சிறுவர்கள் அதிகம் வலைத்தளங்களை பாவிப்பதனால் தவறான பக்கங்கள் அவர்களை தவறான வழியில் இட்டு செல்வதனால் பல குற்ற செயல்களில் சிறுவர்களை ஈடுபட தூண்டுகிறது.

சமூக வலைத்தளங்களின் பாவனையால் பத்திரிகை வாசிக்கும் பழக்கம், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் போன்றன வெகுவாக குறைந்துவிட்டமை வருத்தத்துக்குரியதாகும்.

முடிவுரை

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பது போல சமூக வலைத்தளங்களை அளவோடு பாவிப்பது நன்மை தரும்.

சமூக வலைத்தளங்களை உருவாக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளை பார்த்தால் சமூக வலைத்தளங்களை பாவிக்க குறைவான நேரத்தையே செலவிடுகின்றன.

ஆனால் எமது நாடுகளில் உள்ள இளம் சமுதாயம் அதிகளவான நேரத்தை சமூக வலைத்தளத்தில் செலவழிக்கின்றனர். இது ஆரோக்கியமானதல்ல ஆகவே சமூக வலைத்தளங்களை ஒரு அளவோடு பாவிப்பது எப்போதும் நன்மை கொடுக்கும்.

You May Also Like :

சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

போதைப்பொருள் பாவனை கட்டுரை