கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள்

good food for liver in tamil

கல்லீரலே நமது உடலில் இருக்கும் மிகப்பெரிய உறுப்பாகும். இது நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு தேவையான சுரப்பியைச் சுரக்கின்றது. அதுமட்டுமில்லாது உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு போன்ற சத்துக்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் இது இருக்கின்றது.

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை சேகரித்து வைப்பது, ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, இரத்தத்ததைச் சுத்திகரிக்கவும், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யவும், இரத்தம் உறைதல் மற்றும், காயங்களை ஆற்றுவது, பித்தநீர் சுரப்பு, உணவில் உள்ள கொழுப்புகள் மற்றும், விட்டமின்களை உறிஞ்சிதல், செறிக்கச் செய்தல், நஞ்சுக்களையும் தேவையற்ற கொழுப்புக்களையும் நீக்க உதவி செய்தல், உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரம்பிரித்து அனுப்புவது போன்ற ஏராளமான பணிகளைக் கல்லீரல் செய்கின்றது.

தன்னைத் தானே புதிப்பித்து மறுசீரமைப்புச் செய்யக்கூடிய தன்மை நமது உடலில் கல்லீரல் செல்களுக்கு மட்டுமே உண்டு. இவ்வாறான இன்றியமையாத உறுப்பினை நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறைப் பழக்கவழக்கங்களால் கெடுத்துக் கொள்கின்றோம்.

இந்தக் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அது பாரிய ஆபத்தை உடலுக்கு ஏற்படுத்தி விடும். முக்கியமாக கல்லீரலானது மாறிவரும் உணவு பழக்கம் மற்றும், வாழ்க்கை முறை காரணமாக அதிக கழிவுகள் சேர்ந்து மிக எளிதில் பாதிப்படைகின்றது.

இதன் விளைவாக கல்லீரல் வீக்கம், கல்லீரல் கட்டிகள், கொழுப்புகள் படிவது, கல்லீரலில் கிருமித் தொற்று எனப் பல பிரச்சினைகள் ஏற்படுவதுடன் கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக உள்ளது.

கல்லீரலைப் பாதிக்கும் மதுப்பழக்கம் நெறுக்குத் தீனிகள் போன்றவற்றை தவிர்த்து விட்டு கல்லீரலைப் பலப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது முக்கியமாகும்.

கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள்

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்தில் சிற்றிக்கமிலம், வைட்டமின் சி போன்றன அதிகம் உள்ளன. எனவே இதன் சாற்றை தினமும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் உள்ள கொழுப்புகளை நீக்கலாம். இதன் அமிலத்தன்மை கல்லீரலைப் பாதுகாக்கின்றது.

முலாம்பழம் மற்றும், பப்பாளி விதைகள்

தினமும் இரண்டு துண்டுகள் முலாம்பழம் மற்றும் இரண்டு பப்பாளி விதைகள் இரண்டுடனும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டாமல் பருகி வந்தால் கல்லீரல் சுத்தமாகிவிடும்.

ஸ்ட்ராபெரி

இதிலுள்ள நார்ச்சத்து மற்றும், ஆன்டிஆக்சிடென்கள் உடலை பாதுகாப்பதுடன் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலிமையாக்குகின்றது. கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவுகின்றது.

புளி

புளியில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும், ஆன்சென்சிடென்ட் கொழுப்புகள் போன்றவை கொழுப்பு கல்லீரல் நோயைப் போக்கச் சிறந்தது. புளியில் உள்ள நற்பண்புகள் கல்லீரலின் செயற்பாட்டிற்கு உதவுகின்றது.

மஞ்சள் தூள் கசாயம்

பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கலக்கி குடிக்கலாம். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது, மாதம் ஒரு முறை குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம் கல்லீரல் பாதுகாக்கப்படும்.

பீட்ரூட்

பீட்ரூட்டை யூஸ் ஆகவோ அல்லது Half Boil ஆகவோ உண்ணலாம். வாரத்திற்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை எடுத்துக் கொண்டால் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

கீரைகள்

கீரைகளில் நிறைந்திருக்கும் பச்சையம் மற்றும், நார்ச்சத்துக்கள் ஆன்டிஆக்சிடன் குணங்கள் கல்லீரலுக்கு மிகச் சிறந்தது. குறிப்பாக முருங்கைக் கீரை மற்றும், கரிசலாங்கண்ணி கீரைப் பொடி இரண்டையும் ஒன்றாகக் சேர்த்து தினமும் ஒரு தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தலாம்.

Read More: கீழாநெல்லி பயன்கள்

மருதாணி இலையின் பயன்கள்