கரிகாலன் இயற்பெயர் என்ன | வளவன் |
சங்ககாலத்தை சேர்ந்த ஒரு சோழ மன்னனே கரிகால மன்னன் ஆவார். இம் மன்னன் புகழ்பெற்று விளங்குகின்ற சோழ மன்னனாக காணப்படுகின்றான்.
Table of Contents
கரிகாலன் இயற்பெயர் என்ன
சோழர்குலத்தின் மிக முக்கியமானதொரு மன்னனாகவே கரிகால மன்னன் காணப்படுகின்றான். இம் மன்னனானவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.
இவரது இயற்பெயர் வளவன் ஆகும். மேலும் பெருவளத்தான், திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான், மாவளத்தான், இயல் நேர்வளவன், கரிகாலன் போன்ற பெயர்களும் காணப்படுகின்றன.
கரிகாலனின் வாழ்க்கை வரலாறு
சோழ மன்னனான இளஞ்சேட்சென்னியுடைய மகனே கரிகாலன் ஆவான். சிறு வயதில் இருந்தே தன் அரசினை இழந்து தன் மாமனான இரும்பிடர்த்தலையார் பாதுகாப்பிலே மறைந்து வாழ்ந்து வந்தான்.
இளமைக் காலப்பகுதியிலேயே இவனை இவரது உறவினர்கள் சிறையிலிட்டு தீ வைத்தனர். அந்த நெருப்பிலிருந்து தப்பியோடும் சந்தர்ப்பத்தில் மன்னனுடைய காலானது கருகிவிட்டது. இதனாலேயே கரிகாலன் என்று அழைக்கப்படுகின்றார்.
கரிகாலன் பிறக்கும் முன்பே அரசுரிமையை பெற்றவனாக காணப்படுகின்றான். சோழர்களுக்கெள்லாம் ஒரு சிறந்த மன்னனாகவே கரிகால சோழ மன்னன் திகழ்கின்றார். இம் மன்னனானவர் பல்வேறுபட்ட சிறப்புக்களைப் பெற்று காணப்படுகின்றார்.
கரிகால மன்னனுடைய சிறப்புக்கள்
கரிகால மன்னன் முதல் தடவையாக போர் செய்து வெற்றி பெற்றமை மன்னனுடைய சிறப்பினை எடுத்தக்காட்டுகின்றது. அதாவது வெண்ணிப்போரில் வெற்றியீட்டியமையாகும்.
கரிகால மன்னன் உழவுத் தொழில்களுக்கு மக்களை ஊக்குவித்தது போன்று கைத்தொழில்களை மேற்கொள்ளவும் உறுதுணையாக காணப்பட்டமை மன்னனின் சிறப்பினை எடுத்தியம்புகின்றது.
கரிகால மன்னனானவன் காவிரி ஆற்றின் கரைகளை உயர்த்திக் கட்டியமை இவருடைய பெருமையினை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் நீதி நேர்மை மிக்க ஒரு சிறந்த ஆட்சியை நிறுவியதோடு சோழ நாட்டை சிறப்பான வளமிக்க ஒரு நாடாக மாற்றினார்.
கரிகால மன்னனானவர் நீரை தேக்கும் கல்லாணை எனும் கற்கட்டுமானமொன்றை நிர்மாணித்தார். இதனூடாக விவசாய பொருளாதாரமானது சிறந்து விளங்குகின்றது.
கரிகால மன்னன் இரக்கத்தின் வடிவாகி இரவலர்களுக்கு தர்மம் செய்வதில் சிறந்து விளங்கும் மன்னனாவான். வறுமை என்ற ஒன்றே இல்லாத நிலையினை ஏற்படுத்த பாடுபட்ட ஒரு சோழ மன்னனாவான்.
கரிகாலனும் வெண்ணிப்போரும்
கரிகால மன்னனுடைய ஆட்சியில் இடம்பெற்ற முதல் பெரும் போரே வெண்ணிப்போராகும். அதாவது இப்போரில் வெற்றி ஈட்டியதை அடுத்து பல புகழாரங்கள் இம் மன்னனை வந்து சேர்ந்தது.
இப் போரில் முதுகில் புண்பட்ட சேர மன்னன் தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாக கருதி தற்கொலை செய்து கொண்டான். இது தொடர்பாக புறநானூற்று புலவர் தனது பாடலில் விளக்குகின்றார்.
பல்லாயிரக்கணக்கான வீரர்களை முறியடித்த ஒரு போராகவே வெண்ணிப்போர் காணப்படுகிறது. காவிரியாற்று பகுதியில் ஓர் அணையினை கட்டியதோடு அதற்கு வெண்ணிப்போரின் அடையாளமாக வெண்ணியாறு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கரிகாலனின் கொடைச்சிறப்பு
கரிகால மன்னனுடைய கொடைச்சிறப்பு பற்றி பொருநராற்றுபடையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது வறுமையால் வாடுபவர்கள் மன்னனிடம் செல்லும் போது புத்தாடையளித்து, இனிய பானங்கள் வழங்கி ஓய்வு பெற்றக் கொள்ள இடமும் வழங்கப்படுகின்றது. மேலும் கவலைக்கு இடமில்லாது அனைவரையும் உபசரிப்பு செய்தார் என்று புலவர் பொருநராற்று படையில் பாடியுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
கரிகால மன்னனானவன் ஏனைய மன்னர்களை போலல்லாமல் நாட்டையும் தனது நாட்டிலுள்ள மக்களையும் சிறந்த முறையில் பாதுகாத்தது மாத்திரமன்றி போர்களிலும் பல வெற்றிகளை சந்தித்த ஒரு மன்னனாக காணப்படுகின்றான்.
Read More: நெறிமுறை என்றால் என்ன