ஊழியம் என்றால் என்ன

ஊழியம்

கிறிஸ்தவ மதத்தில் தேவனது வழியைப் பின்பற்றி நடப்பதே நாம் முதலாவது அவருக்கு செய்கிற ஊழியமாகும். இயேசுகிறிஸ்து தம் வார்த்தையில் “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” என்று சொல்லுகிறார்.

ஊழியம் என்றால் என்ன

‘ஊழியம்’ என்ற சொல் “diákonos” (“ministry”) என்கிற கிரேக்க மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. அதன் அர்த்தம் “வேலைக்காரன்” என்பதாகும்.

மேலும், “Servant” and “Slave” என்கிற ஆங்கில வார்த்தைகள் doulos’ என்று கிரேக்க மொழியில் ஒரே வார்த்தையாகக் கூட கூறிவந்தனர். அதன் ஆழ அர்த்தம் என்னவெனில் வேலைக்காரனாக அல்லது அடிமையாக சேவை செய்தல் என்பதாகும்.

அதாவது ஊழியம் என்பது சேவை செய்தல் அல்லது வேலை செய்தல் என பொருள் கொள்ளலாம்.

ஊழியம் குறித்து கூறப்படும் விடயங்கள்

ஊழியத்தைக் குறித்து நான்கு காரியங்கள் சொல்லப்படுகின்றது. அவையாவன,

  • கிறிஸ்துவின் ஊழியகாரராக ஊழியஞ்செய்யுங்கள்.
  • மனபூர்வமாய் ஊழியஞ் செய்யுங்கள்.
  • தேவனுடைய சித்தத்தின்படி ஊழியஞ் செய்யுங்கள்.
  • நல் மனதோடே ஊழியஞ் செய்யுங்கள்.

எனவே கர்த்தருடைய ஊழியத்தை அவர் வார்த்தை சொல்லுகிறபடி செய்ய வேண்டும்.

ஆதிகாலங்களில் அப்போஸ்தலரின் தீவிரமான ஊழியத்தில் வளர்ந்த விசுவாசிகள் எதையும் தாங்கும் வைராக்கியமுள்ளவர்களாக இருந்தனர். அற்புதங்கள் அடையாளங்கள் தங்கு தடையின்றி நடைபெற்றது.

ஆனால் இன்றைக்குத் தம்மைத் தாமே அப்போஸ்தலர்கள் என்றுகூட நாம் அழைக்கத் தயங்குவதில்லை. ஆனால் ஆவியின் வைராக்கியம் உண்டா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!

இன்றைய காலகட்டத்தில் நம்மைச் சுற்றியுள்ள “தேவையினால் ஆட்கொள்ளப்பட்டு” தேவனிடம் ஐக்கியம் கொள்ளுவதற்கோ நேரம் இல்லாது போகும் பரிதாபம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏராளமான தேவைகள் நம்மைச் சுற்றியிருக்க, தேவனோடு ஐக்கியப்பட காத்திருக்கும் நேரம் வீணான நேரமாகக்கூட நமக்குத் தோன்றலாம். ஆனால் ஊழியம் செய்வதை ஒருபோதும் ஒதுக்கி வைத்திடலாகாது.

இன்றைக்கு தேவனோடு தேவனை சார்ந்து நாம் ஊழியம் செய்யும் போது தேவன் கிரியை செய்வார். அப்படிப்பட்ட ஊழியங்களில் தான் தேவ மகிமை காணப்படும்.

இன்றைக்கு பல ஊழியக்காரர்கள் தெரிந்தோ தெரியாமலோ மனித புகழ்சிக்காகவும், பணத்துக்காகவும் மனிதர்கள் மூலமாக சாத்தான் கொடுக்கும் ஆலோசனைகளையும், திட்டங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால்தான் இன்றைக்கு அநேக ஊழியங்களில் கர்த்தர் இல்லவே இல்லை. எனவே தான் அந்த ஊழியங்கள் உலகத்துக்கு ஒத்த வேஷமாகவும், வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாகவும் இருக்கிறது.

அநேக ஊழியக்காரர்களுக்கு அவர்களே எஜமானர்களாக இருக்கிறார்கள் எனவே தேவ சித்தம் அவர்கள் வாழ்க்கையிலும் ஊழியங்களிலும் இல்லை.

தேவனுக்கு ஊழியம் செய்வதினால் வரும் ஆசீர்வாதங்கள்

தேவனுக்காய் முழு இதயத்தோடும் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் ஊழியப்பணியாகும். ஊழியர்கள் அனைவரும் கத்தருடைய சம்பத்துக்கள் அதாவது விலையேறப்பெற்ற பொக்கிஷங்கள் என்று வேதம் அங்கீகரிக்கின்றது.

சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகா மூவரையும் சோதனை வேளைகளில் தப்புவித்து உயர்த்தி இவர்களின் தேவனே உண்மையான தேவன் என்று ஜனங்களை கத்தர் சொல்ல வைத்தார்.

உண்மையோடும், உத்தமத்தோடும் அவர் கட்டளைகளை நாம் நிறைவேற்றும் போது அதற்காக ஒரு காலமும் நாம் வெட்கப்பட்டுப் போவதில்லை. ஊழியம் மிகப்பெரிய பாக்கியம் ஆகும்.

ஊழியத்தின் மூலம் செய்யப்பட்ட நன்மைகள், அதன் நிமிர்த்தம் அனுபவித்த அலைச்சல்கள், வேதனைகள் என எதையும் கத்தர் மறப்பதில்லை. அவர் எல்லாவற்றையும் குறித்து வைத்துள்ளார்.

எந்த ஊழியமாக இருந்தாலும் அது கர்த்தருக்காககச் செய்யப்படும் போது அது நிச்சயம் அவரால் கனப்படுத்தப்படும்.

Read more: சொடக்கு தக்காளி நன்மைகள்

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி