உலக மக்கள் தொகை தினம் கட்டுரை

ulaga makkal thogai thinam katturai in tamil

உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் காரணிகளுள் மிக முக்கியமானதாகவே மக்கள் தொகை காணப்படுகின்றது. எனவே இந்த மக்கள் தொகை பற்றி அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

இதன் அடிப்படையிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக மக்கள் தொகை தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உலக மக்கள் தொகை தினத்தின் முக்கியத்துவம்
  • வரலாறு
  • 36 ஆவது உலக மக்கள் தொகை தினம்
  • மக்கள் தொகை அதிகரிப்புக்கான காரணங்கள்
  • சமகாலத்தில் மக்கள் தொகை
  • முடிவுரை

முன்னுரை

தற்கால உலகில் நாளுக்கு நாள் மக்கள் தொகையானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.

எனவே இதற்காக விழிப்புணர்வவினை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 11ஆம் திகதி இந்த உலக மக்கள் தொகை தினம் கொண்ட நினைவூட்டப்படுகின்றது.

உலக மக்கள் தொகை தினத்தின் முக்கியத்துவம்

ஒவ்வொரு வருடமும் மக்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி அறியப்படுத்தவும், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு, தாய்மார்களின் ஆரோக்கியம்,

பாலின சமத்துவம் மேலும் வறுமை போன்றன பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உலக மக்கள் தொகை தினம் அனுஷ்டிக்கப்படுவதனால் முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.

வரலாறு

கி.பி ஆயிரமாம் ஆண்டு உலக மக்கள் தொகை வெறுமனே 400 மில்லியன் காணப்பட்டது. பின்னர் 1804 இல் ஒரு மில்லியனையும் 1960 ஆம் ஆண்டு மூன்று பில்லியனையும் எட்டியது.

இவ்வாறாக 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி கணக்கீட்டின் படி உலக மக்கள் தொகையானது 500 கோடியாக அதிகரித்தது. அந்த நாளே அன்று முதல் இன்று வரைக்கும் உலக மக்கள் தொகை தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதுவரையும் 36 உலக மக்கள் தொகை தினங்கள் நினைவூட்டப்பட்டுள்ளன. அதில் கடந்த 36 ஆண்டுகளுக்குள் 200 கோடிக்கும் மேலாக மக்கள் தொகை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

36 ஆவது உலக மக்கள் தொகை தினம்

கடந்த வருடம் அதாவது 2022 ஜூலை மாதம் 11-ம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட உலக மக்கள் தொகை தினமே 36 ஆவது ஆண்டிக்கான உலக மக்கள் தொகை தினமாகும். இந்த உலக மக்கள் தொகை தினத்தில் சுமார் 800 கோடிக்கு கிட்டத்தட்ட மக்கள் தொகை அதிகரித்துள்ளமையாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

“8 பில்லியன் மக்களின் உலகம்: அனைவருக்கும் ஒரு நெகிழ்வான எதிர்காலத்தை நோக்கி வாய்ப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல்” என்பதுவே இந்த 36 ஆவது உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருளாகும்.

மக்கள் தொகை அதிகரிப்புக்கான காரணங்கள்

தற்காலங்களில் மக்கள் தொகையானது வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை முன் வைக்கலாம்.

அதாவது இள வயது திருமணம், பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள், அதிகமான குழந்தைகள் பிறத்தல் போன்ற காரணிகளால் பிறப்பு வீதம் அதிகமாகுதல்.

சத்துள்ள உணவு, தூய குடிநீர், மருத்துவ வசதிகள், நோய் ஒழிப்பு திட்டங்கள் போன்றவற்றின் காரணமாக இறப்பு வீதம் குறைவடைதல். உள்நாட்டு குடிப்பெயர்ச்சி போன்ற காரணங்களின் விளைவாக மக்கள் தொகை அதிகரிக்கின்றன.

சமகாலத்தில் மக்கள் தொகை

ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 8024,000,000 பேர் என ஒரு அறிக்கையை வெளியிட்டது. அடிப்படையில் தற்பொழுது உலக மக்கள் தொகை 8024,000,000 என அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் மதிப்பிட்டுள்ளது.

முடிவுரை

கொவிட் தொற்று காலத்தில் மக்கள் தொகை குறைவடைந்த போதும், தற்காலங்களில் மீண்டும் அதிகரித்துக் கொண்டு செல்வதனைக் காணலாம்.

எனவே இந்த மக்கள் தொகை பெருக்கத்தினால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால், மக்கள் தொகையை குறைப்பதற்கு ஒவ்வொரு அரசும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பரவலாகவே கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read More: அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள்

உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகையின் பங்கு