தொடர் ஓட்டம் என்றால் என்ன

thodar ottam in tamil

உடலின் தன்மைக்கேற்ப பொருத்தமான ஓட்டங்களை வீரர்கள் தெரிவு செய்கின்றார்கள். அந்த வகையில் ஓட்டங்களின் ஒரு வகையாகவே தொடர் ஓட்டத்தினை கொள்ளலாம். இதனை அஞ்சல் ஓட்டம் எனவும் அழைப்பர்.

தொடர் ஓட்டம் என்றால் என்ன

தொடர் ஓட்டம் என்பது யாதெனில் ஓர் அணியினர் பொதுவாக ஒரு பேட்டனை (கோலினை) கை மாற்றி ஓடும் ஓர் போட்டியே தொடர் ஓட்டம் எனலாம்.

இதில் நான்கு பேர் ஓர் அணியில் இடம் பெறுவார். அதாவது ஒவ்வொருவராக கோலினைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து ஓடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அடுத்தவரிடம் ஒப்படைப்பர். அணியின் கடைசி ஓட்டக்காரர் கோலினை பிடித்துக் கொண்டு விரைந்து ஓடி இறுதி கோட்டை தொடுவார் இதனையே தொடர் அல்லது அஞ்சல் ஓட்டம் என குறிப்பிடுவர்.

தொடர் ஓட்டத்தில் கோல் மாற்றும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள்

  • கோலை விழவிடாது பரிமாற்ற வேண்டும்.
  • கோலின் வேகம் குறையலாகாது.
  • கோல் கொடுபட 2-3 சுவடுகள் இருக்கும் பட்சத்தில் சமிஞ்சை அளித்தல் வேண்டும்.
  • முறையாகக் கை நீட்ட வேண்டும்.
  • முறையாக கொடுத்தல் வேண்டும்.
  • தோளிற்கு மேலால் அல்லது கீழால் Check Mark கைப் பார்க்க வேண்டும்.
  • Check Mark கோல் மாற்றும் இடம் என்பவற்றை நன்றாக பயிற்சி பெற வேண்டும்.

தொடர் ஓட்டத்தின் சில வகைகள்

4×100 தொடர் ஓட்டம்

4×100 மீற்றர் தொடர் ஓட்டம் என்பது நான்கு உறுப்பினர்களை கொண்ட தொடர் ஓட்ட குழுக்களானது ஒவ்வொன்றும் 100 அடி தூரம் நியமிக்கப்பட்ட பாதையில் ஓடும் நிகழ்வாகும்.

4×400 மீற்றர் தொடர் ஓட்டம்

அதாவது இது 4×400 மீற்றர் தொடர் ஓட்டமாகும். இதில் பொதுவாக 400 மீற்றர் ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் போட்டியில் பின்பற்ற கூடிய ஒரு ஓட்டமாகும்.

நீச்சல் தொடர் ஓட்டம்

இது ஒரு தொடரோட்ட வகைகளில் ஒன்றாகும். அதாவது ஒவ்வொரு நீச்சல் வீரரும் ஒரு ஸ்ட்ரோக்கை பயன்படுத்துகின்றார்கள். அதாவது நீச்சலின் போது இந்த தொடர் ஓட்டமானது பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர் ஓட்டத்தின் விதிமுறைகள்

அஞ்சல் கோலானது மாற்றும் போது அதற்குரிய பிரதேசத்திலேயே மாற்றுதல் வேண்டும்.

போட்டி முடியும் வரை அஞ்சல் கோலானது போட்டியில் ஈடுபடும் வீரருடைய கையிலிருத்தல் வேண்டும்.

கோலை மாற்றம் செய்யும் போது அதனை பெறுபவருக்கு வீசாது உரிய விதிமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றல் வேண்டும்.

அஞ்சல் கோலினை மற்றைய வீரருக்கு கொடுக்கும் சந்தர்ப்பத்தில் கோல் கீழே விழுந்தால் விழுத்திய வீரரே கோலை எடுத்துக் கொடுக்க வேண்டுமே தவிர பெற்றுக் கொள்பவர் எடுத்துக் கொள்வது தவறாகும்.

மேற்குறிப்பிட்ட வகையில் விதிமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக சிறந்த முறையில் இந்த போட்டியில் பங்குபற்றி கொள்வதோடு சிறப்பாக போட்டியில் வெற்றி ஈட்டவும் இந்த முறைமையானது துணை புரிகின்றது.

பல்வேறு ஓட்ட வகைகள் காணப்பட்டாலும் தொடர் ஓட்டமானது சிறந்த முறைமையில் காணப்படும் ஓர் ஓட்டமாகும். தொடர் ஓட்டமானது இன்று பல சந்தர்ப்பங்களில் இடம் பெறுவதனை காணக் கூடியதாக உள்ளது.

மேலும் இந்த தொடர் ஓட்டமானது இன்று பல விதிமுறைகளை உள்ளடக்கிக் கொண்டு வருகின்ற ஒரு போட்டியாகும்.

Read More: கருங்காலி மாலை யார் அணியலாம்

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்