அழிந்து வரும் உயிரினங்கள் யாவை

alinthu varum uyirinangal in tamil

இப்பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களும் என்றோ ஒரு நாள் அழிந்து போகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அழிவு என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. பூமியில் வாழ்ந்த மொத்த உயிரினங்களில் 90% அதிகமானவை இன்று உயிருடன் இல்லை.

அதுமட்டுமல்லாது இன்றுவரை உலகில் வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன.

இயற்கைச் சூழலில் சமநிலை இருக்க வேண்டுமாயின், அழிந்து வரும் உயிரினங்களை காக்க வேண்டியது ஒவ்வொரு மனிதருக்கும் உரிய கடமையாகும்.

அழிவுக்கான பிரதான காரணங்கள்

மனிதனானவன் எக்காலத்திலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விடயம் தான் இயற்கையாகும். இயற்கையில் எப்போதும் எந்த மாற்றம் நிகழும் என யாராலும் துல்லியமாகக் கூற முடியாது.

ஆனால் சில மனிதர்களின் செயற்பாட்டால் இயற்கையும் அதனை சார்ந்துள்ள விலங்குகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக சில உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு செல்கின்றன.

அதுமட்டுமல்லாது வாழ்விட இழப்பு மற்றும், மரபணு மாறுபாடு காரணமாகவும் அழிந்து வருகின்றன. வீட்டு வசதி, தொழில் மற்றும் விவசாயத்திற்காக உயிரினங்களின் வாழ்விடம் அழிக்கப்படுகின்றன.

அழிவின் விழிம்பிலுள்ள உயிரினங்கள்

WWF இன் சமீபத்திய அறிக்கையானது அழிந்துவரும் உயிரினங்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடல் ஆமை, தேனீ, துருவ கரடி, புலி மற்றும், சிறுததை இனம், டால்பின், போலார் கரடி போன்ற பல விலங்குகள் அதில் அடங்குகின்றன. இவை தவிர நாற்காண்டம் இருவாட்சி, நீலத்திமிங்கலம் போன்றனவும் அழிந்துவரும் உயிரினங்களாகவே உள்ளன.

தேனீ

தொடர்ச்சியாக வெப்பமடைந்துவரும் பூமியின் காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தேனீக்களும் அழிவை நோக்கிச் செல்கின்றன.

நாற்காண்டம் இருவாச்சி

உலகம் முழுவதும் 54 வகையான இருவாட்சிகள் காணப்படுகின்றன. வடக்கு அந்தமானில் உள்ள நாற்காண்டம் தீவு இவற்றினுடைய இருப்பிடம் ஆகும். இதன் வாழ்விடமான அத்தீவானது 6.8 சதுர கிலோமீட்டர் ஆகும் இவை 30 – 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியனவாகும் இப்போது மொத்தமாக 300 – 400 இருவாச்சிகளே உள்ளன.

நீலத்திமிங்கலம்

பூமியின் மிகப்பெரிய உயிரினங்களில் ஒன்றே நீலத்திமிங்கலமாகும். இந்த உயிரினத்திடம் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதேவேளை இவ் உயிரினமானது அழிவின் விளிம்பில் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி நமது பூமியில் மொத்தமாக 25000 நீலத்திமிங்கலம் மட்டுமே உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது அதிகப்படியானதாக தெரிந்தாலும் கூட பூமியின் மூன்றில் இரண்டு பங்காக இருக்கக்கூடிய கடலில் 25000 திமிங்கலம் என்பது மிகவும் குறைவான அளவாகும்.

நீலத்திமிங்கலத்தின் அழிவிற்கு பூமியின் பருவநிலை மாற்றமும், மனிதர்கள் கடலின் கலக்கும் கழிவுகளுமே காரணமாகும்.

கடல் ஆமை

நமது பூமியின் மொத்தம் ஏழு இனங்களைச் சார்ந்த கடல் ஆமைகள் வாழ்கின்றன. இந்த ஏழு இனங்களில் இரண்டு இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அதில் ஒரு இனமே ஆஸ்பில் ஆகும் இந்த இனத்தைச் சார்ந்த ஆமைகளில் 80 சதவீதம் ஆமைகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாமல் போய் உள்ளன. அதேபோல் லெதர்பர்க் ஆமையினமும் அழிவின் விளிம்பில் உள்ளன.

Read More: விவசாயம் அழிவதற்கான காரணங்கள்

தர்பூசணி பழம் பயன்கள்