பொதுவாக பழங்கள் என்றாலே பல நன்மைகளை கொடுக்கக் கூடியவையாகும். இந்த வகையில் அதிக நன்மை தரக்கூடிய பழங்களில் ஒன்றாக அன்னாசிப்பழம் காணப்படுகின்றது.
பார்ப்பதற்கு கரடுமுரடாக இருக்கும். தோல் சீவி கொள்வதிலும் கஷ்டம் இருக்கும். ஆனால் பழத்தின் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
அன்னாசிப்பழம் பல பூக்களில் மகரந்தங்களால் இணைந்து உருவாகும் பழமாகும். வெப்ப மண்டலத்தில் நன்கு விளையக்கூடியது.
இதன் தாயகம் பிரேசிலின் தென்பகுதி மற்றும் பராகுவே என்று கருதப்படுகின்றது. தற்போது பிரேசில், பிலிப்பைன்ஸ், கோஸ்ட்டா ரிக்கா போன்ற இடங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
அன்னாசி பழம் நன்மைகள்
#1. கீல்வாதம் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.
கீல்வாதத்தினால் ஏற்படும் மூட்டுக்கள் மற்றும் சதைகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. இதில் காணப்படும் புரோமலைன் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி கீல்வாதம் ஏற்படுவதை தடுக்கிறது.
#2. புற்றுநோயை தடுக்கிறது.
அன்னாசி பழத்தில் உள்ள விட்டமின்-C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறன. மார்பகப் புற்று நோய், தொண்டை புற்று நோய்களை குணப்படுத்த சிறந்தது.
#3. செரிமான பிரச்சனையை தீர்க்கிறது.
அன்னாசிப் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உண்ணும் உணவை நன்கு செரிமான படுத்த உதவுகின்றன.
#4. எலும்பு உறுதிக்குச் சிறந்தது.
அன்னாசிப் பழத்தில் உள்ள மாங்கனீசு எலும்புகளின் உறுதித் தன்மைகளுக்கும், பலத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
#5. மாதவிடாய் நின்ற பெண்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
#6. கண்கள் ஆரோக்கியம் பெற உதவுகின்றது.
அன்னாசிப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின்கள் வயோதிபத்தில் ஏற்படும் கண் பார்வை குறைவு மற்றும் தசைச்சிதைவு நோய் போன்றன ஏற்படாமல் இருக்க உதவுகின்றது.
தசைகள் பலவீனம், தோல் சுருக்கம் முதலானவற்றை தடுக்கவும் உதவுகின்றது. அன்னாசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதற்கு துணை புரிகின்றன.
#7. கூந்தல் உதிர்வை தடுத்து புதிய முடிகள் வளர உதவுகின்றது.
#8. அன்னாசியில் உள்ள விட்டமின்-C உடலில் ஏற்படும் காயங்களை தொற்றுகளில் இருந்து காப்பாற்றி விரைவாக குணப்படுத்துகின்றது.
#9. இருமல், சளித் தொல்லையிலிருந்து பாதுகாக்கும்.
#10. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவுகின்றது. 80 சதவீதமான விட்டமின்-C சத்துக்களை கொண்டுள்ள அன்னாசிப் பழத்தை தினமும் அளவோடு உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.
#11. தேகத்தில் போதுமான இரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தை உற்பத்தி செய்ய அன்னாசிப் பழம் சிறந்த மருந்தாகும்.
#12. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதலை தடுக்க உதவுகின்றது. அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
#13. பித்தக் கோளாறை விரைவில் குணமாக்கும்.
#14. தொப்பையைக் குறைக்க உதவுகின்றது.
அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பத்து நாட்களில் தொப்பை குறையும்.
You May Also Like: |
---|
பூண்டு மருத்துவ பயன்கள் |
ஆளி விதை பயன்கள் |