மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகளில் விருப்பம் என்ற உணர்வும் ஒன்றாகும். விருப்பம் என்பது ஒரு பொருளின் மீது அளவில்லாத ஈடுபாடு வரும் போது அங்கு விருப்பம் உண்டாகின்றது.
ஒருவர் ஒன்றில் விருப்பம் கொண்டால் அதனை நாடியே அடிக்கடி செல்வார். விருப்பம் என்பது ஏன் வருகின்றது எதற்காக வருகின்றது என்று கூற முடியாது. ஏனெனில் அது ஒருவருக்கு ஏற்படும் உள்ளத்து உணர்வே விருப்பம் ஆகும்.
இந்த விருப்பம் என்ற சொல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் நிலையில் விருப்பம் வரும் போது அது ஆர்வம் எனப்படுகின்றது.
விருப்பமானது ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வாக வரும் போது அது அன்பாகின்றது.
மேலும் விருப்பமானது தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வாக வரும் போது அது அவா ஆகின்றது.
இவ்வாறு விருப்பம் என்ற சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.
விருப்பம் வேறு சொல்
- ஆர்வம்
- அவா
- ஈடுபாடு
- நாட்டம்
- பிடித்தம்
- காதல்
- அன்பு
- ஆசை
- நேசம்
- ஆவல்
- பாசம்
- பிரியம்
- பிடிப்பு
- இஷ்டம்
- பற்று
- வாஞ்சை
- வேட்கை
- மனோரம்
Read more: பல் கூச்சம் குணமாக