இந்த வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள் உங்கள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க உதவியாக இருக்கும்.
வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள் (Motivation)
உனக்கு கிடைத்தை அனுபவிக்க கற்றுக் கொள். உனக்கு கிடைக்காததை ரசிக்க கற்றுக் கொள். வாழ்க்கை துன்பம் இல்லாமல் நகரும்.
உழைத்து பெற வேண்டியது வருமானம். உணர்ந்து பெற வேண்டியது தன்மானம்.
உன் கவனமே உனக்கான வெற்றியை தக்க வைக்கும். கர்வம் உனக்கான தோல்வியை ஆரம்பித்து வைக்கும்.
உன்னிடம் பணம் இருந்தால் நான்கு பேரையாவது சிரிக்க வை. உன்னிடம் கல்வி இருந்தால் பத்து பேரையாவது சிந்திக்க வை.. அதுவே நீ பெற்ற செல்வத்தின் பயன்.
உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட. உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே வாழ்வில் சிறந்தது.
நீ பேசும் போது பயப்படாமல் பேசு. நீ பயப்படும் போது எதுவுமே பேசாதே.
ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால். சில நேரங்களில் முட்டாளைப் போல ஆனால் அறிவோடு இருக்க வேண்டும்.
நீங்கள் ஓடுவதாக இருந்தால் வெறி கொண்டு துரதிக் கொண்டு ஓடுங்கள். நிற்பதாக இருந்தால் தைரியமாக எதிர்த்து நில்லுங்கள்.
நல்லவைகள் ஆரம்பத்தில் நரமாகத் தோன்றும் முடிவில் சொர்க்கமாக மாறும். தீயவைகள் முதலில் சொர்க்கமாக தோன்றும் இறுதியில் நரகமாக மாறி விடும்.
பார்க்க கண்களை கொடுத்த இறைவன். சிலவற்றை பாரதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான நேரத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி.
சோதனைகள் எந்த அளவிற்கு கடினமாக இருக்கின்றதோ அதற்குரிய பலனும் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும்.
எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்.
அறியாமையுடன் நூறு நாட்கள் வாழ்வதை விட. அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல்.
தெளிவான மனங்களை கலங்க வைப்பது எளிது கலங்கிய மனதை தெளிவு படுத்துவது மிக கடினம்.
புகழ்ச்சி சிலருக்கு ஒரு ஆபத்தான கருவி. நல்லவனை மேலும் நல்லவனாக மாற்றும். கெட்டவனை மேலும் கெட்டவனாக மாற்றும்.
அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை இல்லை. அமைவதை எல்லாம் அழகாய் மாற்றுவதே வாழ்க்கை.
கடந்து சென்றவை எல்லாம் பாதைகள் அல்ல. நாம் கற்றுக் கொண்ட பாடங்கள்.
உங்கள் மனதை காயப்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
- அழுவதால் கண்கள் சுத்தம் ஆகும்.
- கண் பார்வை தெளிவாகும்.
- மன அழுத்தம் குறையும்.
அவமானத்தின் வலி. அழகிய வாழ்க்கைக்கான வழி.
எந்த இடத்திலும் எப்பொழுதும் நீ யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை. எப்போதும் உன்னை உயர்ந்த இடத்திலேயே வைத்துக் கொள்.