வாரிசு சான்றிதழானது இறந்த நபருக்கும், சட்டபூர்வ வாரிசுகளுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான மிக முக்கிய ஆவணமாகும்.
தாசில்தார் வழங்கக்கூடிய வாரிசு சான்றிதழ் அனைத்து மதத்திற்கும் பொதுவானதாகவும், அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும்.
மதத்தை வைத்தோ அல்லது பால்நிலையை வைத்தோ வேறுபடுத்திக் காட்டக் கூடாது. விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
இறந்தவர் திருமணமானவராக இருந்தால் தாய், தந்தை, வாழ்க்கைத் துணை (கணவன் அல்லது மனைவி) மகன் மற்றும் மகள் வாரிசாக வருவார்கள்.
இறந்தவர் திருமணமாகாதவராக இருந்தால் தாய், தந்தை, அண்ணன், தங்கை ஆகியவர்கள் வாரிசாக வருவார்கள். ஒரு நபர் மட்டும் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் போதுமானதாகும்.
Table of Contents
வாரிசு சான்றிதழ் என்றால் என்ன
ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது அவரின் பணப் பலன்களையோ வருவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ் என்று அழைக்கப்படுகின்றது.
வாரிசு சான்றிதழின் அவசியம்
ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினைகள் இல்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசு சான்றிதழ் அவசியமாகும்.
நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளிலுள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப் பெற கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு பெற என பல விதங்களில் பயன்படுகிறது.
இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசு சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசு பணியில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்பம் ஓய்வூதியம் மற்றும் பணியின் பலன்களைப் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசு சான்றிதழ் அவசியமானதாகும்.
வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்
இறந்தவர்கள் எந்தப் பகுதியில் இருந்தார்களோ அந்தப் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
குறித்த நபர் அதாவது இறந்தவர் இறந்த பகுதியில் ஆறு மாத காலத்திற்கும் குறைவாக இருந்து இறந்து இருந்தால் அதற்கு முன் ஒரு வருட காலம் எந்தப் பகுதியில் இருந்தாரோ அப்பகுதி தாசில்தாரிடம் இருந்து அறிக்கை வாங்க வேண்டும்.
இறப்பு சான்று அல்லது இறப்பு பதிவு செய்ய ஆர்.டி.ஓ வழங்கிய உத்தரவுடன் இறந்த நபரின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட, வங்கிப் புத்தகம், அஞ்சல் சேமிப்பு புத்தகம், டிரைவிங் லைசன்ஸ், ஓய்வூதிய ஆணை ஆகிய ஏதேனும் ஒரு ஆவண நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அதே நேரம் இறந்த ஒருவருக்காக வேறொருவர் சான்றிதழ் பெற வேண்டுமானால், இறப்புச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் காணாத வகையில் இறந்துவிட்டதாக சம்மந்தப்பட்ட நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு மேற்குறிப்பிடப்பட்ட ஆவணங்களில் ஏதேனுமொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இறந்தவர்களுடனான உறவு முறையைக் குறிக்கும் அடையாள ஆவணங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்று, வாரிசுகள் குறித்த மனுதாரரின் சுயவாக்கமூலம் இணைக்கப்பட வேண்டும்.
பெற்றோர் இருவரும் இறந்திருந்தால் பெற்றோரின் இறப்புச் சான்று அனைத்து வாரிசுதாரர்களின் அடையாள சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மனுதாரர் மைனராக இருந்தால் கோர்ட்டில் பெற்ற ஆணையுடன் அவரது பாதுகாவலர் விண்ணப்பிக்கலாம்.
- ஒரு சுய உறுதிமொழிப் பத்திரம்.
- விண்ணப்பதாரரின் அடையாளச் சான்று.
- அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் முகவரிச் சான்று.
- அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பிறந்த தேதி சான்று.
- இறந்த நபரின் இறப்பு சான்றிதழ்.
- இறந்த நேரடி சட்ட வாரிசின் இறப்புச் சான்றிதழ்.
- இறந்தவரின் இருப்பிடச் சான்று.
வாரிசு சான்றிதழுக்கு யார் விண்ணப்பிக்கலாம்
- இறந்தவரின் மனைவி.
- இறந்தவரின் குழந்தைகள் (மகன் மற்றும் மகள்).
- இறந்தவரின் உடன்பிறப்புகள் (சகோதர சகோதரிகள்).
- இறந்தவரின் பெற்றோர்.
இறந்தவர் திருமணம் ஆகாதவராய் இருந்தால் பெற்றோர் அல்லது தாய் வழிப் பிறப்பாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
Read more: மன அழுத்தத்தை குறைப்பது எப்படி