மின்னோட்டம் என்றால் என்ன

minnottam in tamil

இயற்கையில் மின்னல், நிலை மின்சாரம் (Static electricity), சூரியக் காற்று, துருவ ஒளி போன்றவற்றில் மின்னோட்டம் காணப்படுகிறது.

செயற்கையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு செல்லும் உலோகக் கம்பிகளில் இலத்திரன்களின் ஓட்டமாக மின்சாரம் காணப்படுகிறது.

மேலும், மின்னணுவியலில் பயனாகும் வெற்றிடக்குழாய், குறைக்கடத்திகள், மின்கலங்கள் போன்றவற்றிலும் மின்னோட்டம் காணப்படுகிறது.

மின்னோட்டத்தை அளவிடும் கருவி மின்னோட்டமானி எனப்படும். மின்னோட்டத்தில் நகரும் மின்னூட்டமானது மின் சுமைகள் என்று அழைக்கப்படுகின்றன.

மின்னோட்ட விதி ஒரு மின்சுற்றில் எந்தவொரு சந்திப்பிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை சுழி ஆகும்.

ஒரு நொடிக்கு எவ்வளவு மின்னூட்டம் ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை கடக்கின்றது என்பதை பொறுத்து மின்னோட்டம் கணிக்கப்படும்.

மின்னோட்டத்தின் அளவு மற்றும் தர மதிப்பீடுகளுக்கு நவீன அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சில சட்டங்களையும், அளவுகளையும் பயன்படுத்துகின்றது. அந்த வகையில் முக்கிய சட்டங்களாக கூலம்பின் சட்டம், ஓம் விதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

18 ஆம் நூற்றாண்டின் 80களில் சார்லஸ் கூலம்ப் மின்னழுத்தத்தின் தோற்றத்தைத் தீர்மானித்தார். மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் 20 களில் ஜார்ஜ் ஓம் மின்சாரத்தின் தோற்றத்தைத் தீர்மானித்தார்.

இயற்கையிலும், மனித நாகரீகத்திலும் இது முக்கியமாக ஆற்றல் மற்றும் தகவல்களின் கோரியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

மின்னோட்டம் என்றால் என்ன

மின் சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும்.

அதாவது கடத்தி ஒன்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வழியே மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் ஆகும். அதிக மின்னழுத்தம் கொண்ட இடத்திலிருந்து மின்னழுத்தம் குறைவான பகுதிக்கு மின்னோட்டம் பாய்கின்றது.

மின்னோட்டத்தின் அலகு

மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் ஆகும். (ஆம்பியர் என்பது ஒரு நொடிக்கு ஒரு குளம் அளவு மின்மம் மின்னூட்டம் ஒரு தளத்தைக் கடக்கும் ஓட்டம் ஆகும்.)

கடத்தியின் ஒரு பகுதியை t காலத்தில் கடந்து செல்லும் மொத்த மின்னூட்டம் q என்றால், மின்னோட்டம் I = q / t என்றாகும்.

மின்னோட்டத்தின் வகைகள்

மாறுதிசை மின்னோட்டம், நேர்திசை மின்னோட்டம் என இருவகையாக மின்னோட்டத்தின் வகைகள் பிரிக்கப்படுகின்றன.

மாறுதிசை மின்னோட்டம் – மின் தடையத்திலோ அல்லது மின் பொருளிலோ மின்னோட்டத்தின் திசை மாறி மாறி இயங்கினால் அது மாறுதிசை மின்னோட்டம் எனப்படும்.

வீடுகளில் பொதுவாகப் பயன்படும் மின்னாற்றல் மாறுமின்னோட்டமே. இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீட்டு மின்னோட்டம் நொடிக்கு 50 முறை முன்னும் பின்னுமாய் அலையும்.

நேர்திசை மின்னோட்டம் – நேர்திசை மின்னோட்டம் அதன் திசையை மாற்றாது. கைபேசி, வானொலி, மின்விசைப் பலகை, மின்சார வாகனங்கள் போன்றவை நேர்திசை மின்னோட்டத்தைப் பயன்படுத்தி வேலை செய்யும் கருவிகள் ஆகும்.

Read more: மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு

மின்சார சிக்கனம் கட்டுரை