மனிதன் கட்டுக்கோப்புடன் வாழ்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளான். அப்படி மனிதனுக்கு மனிதனே சொல்லும் அறக் கருத்துகள் நிறைய உள்ளன.
அவ்வாறு ஒரு விதியை பிரம்மனே வழங்கியதாக நம்பப்படுவது மனு ஆகும். மனு தர்மம் எழுதப்பட்ட காலம் கி.பி முதல் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
ஸ்மிருதிகள் என்பவை இந்திய வைதீக மரபில் தகுதியில் ஸ்ம்ருதி எனப்படும் வேதங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவை. மனுஸ்மிருதி தவிர இன்னும் ஏராளமான ஸ்ம்ருதி உள்ளன. அவை ஒவ்வொன்றும் எழுதியவர் பெயராலேயே அறியப்படுகின்றன.
Table of Contents
மனுதர்மம் என்றால் என்ன
மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும்.
பண்டைய காலத்தில் சமூகத்தை நிர்வகிப்பதற்காக சமூக அடுக்குகளை நிர்வகிப்பதற்காக வகுக்கப்பட்டதே மனுஸ்மிருதி என்று அறியப்படும் மனு தர்மமாகும்.
மனு நீதி கூறும் தர்மம்
எந்தவொரு உயிரினத்தையும் காயப்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் நாம் தர்மத்தைச் சேகரிக்க வேண்டும். நாம் செய்த தர்மம் தான் நமக்குத் துணையாக இருக்கும்.
ஓர் உயிர் தனியாக பிறந்து தனியாகவே இறந்தும் விடுகிறது. அதனால் அந்த உயிர் செய்த நற்செயல்களின் பலன்களையும் அதன் தீய செயல்களின் பலன்களையும் அந்த உயிர் மட்டுமே அனுபவிக்கிறது.
ஒருவர் மற்றவருக்குத் தானம் செய்கிறார். பெறுபவரும் அதே முறையில் அடுத்த பிறவியிலும் தானம் செய்ய வேண்டும்.
அனைத்து வர்ணங்களுக்கும் (பிராமண, க்ஷத்ரிய, வைசியா மற்றும் சூத்திரர்) பொதுவான தர்மம் யாதெனில் அகிம்சை, நேர்மை, தூய்மை, களவில்லாதது மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகும்.
மனு நீதி என்பது வர்ணங்களுக்கு இடையில் கலப்பு ஏற்படுவதை தண்டனைக்குரியதாக்கியது. வீட்டில் உழைப்பது, நிலத்தில் உழைப்பது, நெய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்த மிகப்பெரிய உழைக்கும் பிரிவான பெண்களை கட்டுப்படுத்தும் விதிகளையும் மனு தர்மம் வகுத்தது.
பெண்களுக்கு வர்ணம் இல்லை, உரிமையும் இல்லை, பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமையும் இல்லை, பெண்களுக்கு திருமணம் தான் உபநயனம்.
பூப்பெய்துவதற்கு முன்னே கன்னியாதானம் என்ற முறையில் திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று வரையறுக்கும் மனுதர்மம் பெண்கள் தனியாக வாழும் உரிமையை மறுக்கின்றது.
அவர்கள் தந்தை, சகோதரன், கணவன், மகன் என யாரோ ஒரு ஆணின் பாதுகாப்பில் வாழ வேண்டியவர்கள் என்று வகுத்துள்ளது.
குழந்தைகள் பெற்றுத்தருவது பெண்களின் கடமை என்கிறது மனு நீதி. குழந்தை பெற்றுத் தரும் தகுதியில்லாத, நோய்வாய்ப்பட்ட, தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றுத் தரும் பெண்களை விலக்கலாம் என்றும் மனு நீதி வகுத்துள்ளது.
இதைப்போலவே சூத்திரருக்கு உடமைகளோ, உரிமைகளோ இல்லை எனவும் வகுத்துள்ளது.
Read more: இதிகாசம் என்றால் என்ன