பழந்தமிழர் வாழ்வில் பனை மரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டத்தில் அதிகளவில் பனை மரங்கள் வளர்கின்றன.
பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என இரு வகை உண்டு. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும். பனைமரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன்தரக்கூடியது. பனை மரத்தின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
பனை மரத்தின் சிறப்புகள்
பனை ஓலையில் ஆயுட்காலம் 400 ஆண்டுகள்
தற்போது பயன்படுத்தப்படும் காகிதங்களின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் பனை ஓலையின் ஆயுட்காலம் 400 ஆண்டுகள். இதனால்தான் பண்டைய கால இலக்கியங்கள் எல்லாம் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன.
பல ஆண்டுகள் வரை பயன் தரும்.
பனை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன் தரக்கூடியவையாகும் இவற்றின் பயனை ஏறத்தாழ மனிதன் பல ஆண்டு காலம் அனுபவிக்க முடியும். பல தலைமுறைகளைக் கடந்தும் பயன் தரக் கூடியது.
மிகவும் உறுதி வாய்ந்தது.
கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர்கள் பனை மரத்தின் உதவியுடன் தான் கட்டினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும் பயன்படுகிறது.
உடலுக்கு வலிமை தரக்கூடிய இயற்கை பானத்தை கொண்டுள்ளது.
பனை மரத்தில் இருந்து இறக்கும்கள், பதநீர் உடலுக்கு மிகவும் பயன்தரக்கூடியது. அதனால் தான் முந்தை காலத்தில் விருந்தோம்பலில் கள் உணவு வகைகளில் ஒன்றாக வைக்கபட்டு இருக்கிறது
தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்துள்ள மரங்களில் பனை மரமும் ஒன்றாகும்.
சங்க கால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர்களின் உணவிலும், உணர்விலும், கூட பனை மரம் இணைந்தே உள்ளது.
மருத்துவ குணம் நிறைந்தவை
பனங்கருப்பட்டியும் பனங்கற்கண்டும் சாப்பிட்டால் வாத, பித்தம் நீங்கும். பசியைத் தூண்டும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது. தொண்டைப்புண், வலி மற்றும் சளி பிரச்சினைக்கு பனங்கற்கண்டு பால் நல்ல மருந்தாகும். கருப்பட்டி நுரையீரல் பிரச்சினையை தடுக்கக்கூடியது.
வழிபாடு
சைவ சமயத்தில் பனை மரத்தை இன்று வரை தெய்வமாக வழிபடும் கோவில்களும் உண்டு.
கைவினைப் பொருள்கள் தயாரிக்க முடியும்
பனையோலைகளில் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, மிட்டாய் பெட்டி, பர்ஸ், விசிறி, முறம், தட்டு, கிலுகிலுப்பை, தொப்பி என விதம்விதமான கைவினைப் பொருட்களைச் செய்யலாம்.
சீர்வரிசை
பனை ஓலை பெட்டிகள் மணப் பெண்ணுக்கான திருமண சீர்வரிசையில் சீதனமாகக் கொடுக்கப்படும் பலகாரங்களை ஓலைப் பெட்டிகளில் வைத்துக் கொடுப்பது முன்பு சமூக அந்தஸ்தாகக் கருதப்பட்டது.
வெளிநாடுகளில் வரவேற்பு
பனையோலையால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கம்போடியா நாட்டு மக்கள் பனை மரத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.
You May Also Like : |
---|
மழைநீர் சேகரிப்பின் பயன்கள் |
வில்வம் மருத்துவ பயன்கள் |