வாழ்வில் முறையான வழிகாட்டுதல் மற்றும் விடாமுயற்சி இருந்தால் எப்படிப்பட்ட தேர்வாக இருந்தாலும் வெற்றி பெற்று விட்டுவிடலாம். இன்றைய நவீன உலகில் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள பல்வேறு செய்திகளும், இணையத்தளங்களும் போதுமானதாக உள்ளன.
ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் இணையத்தளம், விண்ணப்பிக்கும் கடைசி நாள் என அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கிடைக்கின்றது. இவற்றைப் பயன்படுத்தி தேர்வுக்கு முகம் கொடுக்க முடியும்.
எப்போதும் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு அல்லது வாரங்களுக்கு முன்பு தயாராவது தவறானதாகும். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறையை தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.
தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நாட்களிலேயே பயின்றவற்றைத் தேர்வாக எழுதிப் பார்ப்பது சிறந்ததாகும். மேலும் முந்தைய ஆண்டு கல்வித் தாள்களையும், அதற்கான விடைகளையும் சேகரித்துக் கொள்வதன் மூலம் தேர்வில் வெற்றி பெற முடியும்.
தொடர்ந்து நீண்ட நேரமாக மணிக்கணக்கில் படித்துக் கொண்டிருக்காமல் இடையிடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்வது அவசியமானதாகும்.
மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை மட்டும் (பெயர்கள், ஆண்டுகள்) மனப்பாடம் செய்து கொண்டு, மற்றவற்றை நன்கு விளங்கிப் படிக்க வேண்டும். நேரத்தைத் திட்டமிட்டு கால அட்டவணை ஒன்றைத் தயாரித்து அதன் அடிப்படையில் தவறாமல் படிக்க வேண்டும்.
எப்போதும் நாம் பயத்தினை போக்கி தெளிவான மனநிலையுடன் செயற்படும் போதும், கடினமாக முயற்சியுடன் செயற்படும் போதும் வெற்றி நிச்சயம் என்பதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Table of Contents
தேர்வு என்றால் என்ன
ஒருவரின் அறிவுத்திறன், நாட்டம், உடல் தகுதியை மதிப்பிடுவது தேர்வு எனலாம். அறிவத் திறனை மதிப்பிடும் தேர்வினை பலவழிகளில் நடத்தலாம். அதாவது வாய்மொழியாகவோ, தாள் வழியாகவோ (பரீட்சையாக), கணினி மூலமாகவோ நடத்தலாம்.
வாய்மொழி தேர்வு என்றால் என்ன
வாய்மொழித் தேர்வு என்ற சொல் பல வரையறைகளை உள்ளடக்கியுள்ளது. வாய்வழி தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது தலைப்பைப் பற்றி தங்கள் அறிவை பேச்சு வடிவத்தில் மதிப்பிட அனுமதிப்பது ஆகும்.
கேள்விகள் கேட்கும் போது தேர்வில் தேர்ச்சி பெற போதுமான அறிவை இருப்பதைக் காட்டும் விதத்தில் பதிலளிக்க வேண்டும். வாய்மொழி தேர்வானது பல நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
வாய்மொழி தேர்வின் நோக்கம் விண்ணப்பதாரிகளின் விழிப்புநிலை, திறன்கள், மனப்பாங்கு, ஒழுக்கநெறிப் பண்புகள் மற்றும் தகுதியுடைமை ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும்.
Read more: இலக்கு என்றால் என்ன