ஏனைய சுவைகளை காட்டிலும் நாம் அதிகம் விரும்பி உண்ணாத சுவை துவர்ப்பு சுவையாகும்.
இதனை நாம் தினமும் உணவில் சேர்க்காததுதான் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் கருப்பை நோய் போன்ற பல நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால் எண்ணற்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை நாம் உட்கொண்டால் BP, சக்கரை நோய், காச நோய், இதய நோய், சளி, காய்ச்சல், சரும நோய், கருப்பை, கல்லீரல் நோய், புற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
Table of Contents
துவர்ப்பு சுவையின் நன்மைகள்
உடலில் ரத்தம் அதிகரிக்க துவர்ப்பு சுவையே முக்கிய பங்காற்றுகின்றது. துவர்ப்பு சுவை உள்ள உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தைச் சுத்திகரிக்கும். கெட்ட கொழுப்பை குறைத்து இதய அடைப்பு வராமல் தடுக்கவும், இதயக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்து, இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது.
பெண்களது கருப்பை நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது. துவர்ப்பு சுவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் கருப்பை கட்டிகள், மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
சிறுநீரகவத் செயல்பாட்டிற்கு முக்கியமானது துவர்ப்பு சுவையாகும். சிறுநீரகம் நன்கு வேலை செய்யவும், கழிவுகளை முறையாக வெளியேற்றவும் துவர்ப்பு சுவை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தொண்டைப்புண், குடல் புண், வயிற்றுப்புண் போன்றவற்றை அகற்றும் தன்மை துவர்ப்பு சுவைக்கு உண்டு.
கல்லீரலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கவும், கல்லீரலின் செயற்பாட்டை அதிகரிக்கவும் உடலில் உள்ள அதிக பித்தத்தை குறைக்கவும் துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது ரத்தத்தில் உள்ள அதிகளவான சக்கரையை கட்டுப்படுத்தப்பட்டு உடல் ஆரோக்கியம் பேணப்படும்.
மலச்சிக்கல், அஜீரணம், வாய்வுத் தொல்லை நீங்கும். நரம்புகள் பலம் பெறவும், நரம்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருப்பதற்கு துவர்ப்பு சுவையே முக்கியமானதாகும்.
துவர்ப்பு சுவை உணவுகள்
கறிவேப்பிலை – தினமும் 10 கருவேப்பிலை உண்டால் உடலில் கெட்ட கொழுப்பு, சர்க்கரை நோய், இரத்த சோகை, கல்லீரல் நோய்கள் போன்றவை குறைக்கும்.
வாழைக்காய் – வாழைக்காயை வாரத்தில் இரண்டு அல்லது, மூன்று தடவை உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் பலம் பெறும்.
நாவல் பழம் – ரத்தத்தை சுத்திகரிக்கவும், சர்க்கரை நோய், கருப்பை நோய்களை குறைக்கவும் பயன்படுகின்றது.
புதினா – வாரத்திற்கு இரண்டு நாட்கள் புதினா இலைகளைச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும், உள்ளுறுப்புகள் பலம் பெறும், சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமடையும்.
நெல்லிக்காய் – ரத்தத்தைச் சுத்திகரிக்கின்றது, உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவற்றையும் குறைக்கின்றது.
மணத்தக்காளி – கருப்பை நோய்களைக் குறைக்கின்றது. வாய்ப்புண் மற்றும், வயிற்றுப் புண்களையும் குணமாக்குகின்றது.
Read More: மஞ்சள் கரிசலாங்கண்ணி பயன்கள்