இந்த பதிவில் “தமிழ் மொழியின் வரிவடிவ வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.
மொழிகளில் எழுத்துக்கள் தோன்றிய காலம் தொடங்கி இன்றுவரை வளர்ச்சி கொண்டே தான் இருக்கின்றன.
Table of Contents
தமிழ் மொழியின் வரிவடிவ வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- எழுத்துக்களின் தோற்றம்
- தமிழ் எழுத்துக்கள்
- வரிவடிவ வளர்ச்சி
- புள்ளிகளும் எழுத்துக்களும்
- உருவ மாற்றம்
- முடிவுரை
முன்னுரை
மனித சமுதாயம் வளர்ச்சி அடைவதற்கு மொழியானது முக்கியமானதாகும். தமிழ் மொழி “தொன்மை⸴ இயன்மை⸴ தூய்மை⸴ தாய்மை⸴ முதன்மை⸴ வியன்மை⸴ வளமை⸴ மறைமை⸴ எண்மை⸴ இளமை⸴ இனிமை⸴ தனிமை⸴ ஏண்மை⸴ இறைமை⸴ அம்மை⸴ செம்மை என வரும் பதினாறு செவ்வியல் தன்மையைக் கொண்டது.
ஒரு மொழியினுடைய செம்மையான வளர்ச்சியே வரிவடிவ கண்டுபிடிப்பாகும். எழுத்துக்களின் வரி வடிவமானது மொழிக்கு மொழி வேறுபடுகின்றன. அவை ஒரே மொழியிலும் கூட காலந்தோறும் மாறி வருகின்றன.
அவ்வகையில் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எழுத்துக்களின் தோற்றம்
மனிதன் தனக்குப் பின் வரும் சந்ததியினருக்கு தனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகத் தன் எண்ணங்களை பாறைகளிலும்⸴ சுவர்களிலும் குறியீடுகளாகப் பதித்து வைத்தான்.
இதுவே எழுத்து வடிவினுடைய தொடக்கமானது. ஆரம்பத்தில் எழுத்து என்பது ஒளியையோ⸴ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது.
தமிழ் எழுத்துக்கள்
தமிழ் எழுத்துகளின் வரிவடிவமானது காலத்துக்குக் காலம் திரிவடைந்து வளர்ச்சி அடைந்துள்ளன. தமிழ் எழுத்துக்களின் பழைய வரிவடிவங்களைக் கோவில்களில் உள்ள கருங்கல் சுவர்களிலும்⸴ செப்பேடுகளிலும் காணமுடிகின்றது.
வரிவடிவங்கள் வட்டெழுத்து⸴ தமிழ் எழுத்து என்று வகைப்படுத்தப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கண்ணெழுத்துப்படுத்த பல்பொதி எனும் தொடரின் மூலம் கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துக்கள் எனப்பட்டமைக்குச் சான்றாகும்.
வரிவடிவ வளர்ச்சி
நாம் இன்று எழுதும் தமிழ் எழுத்துக்களைப் போல் பண்டைய காலத்தில் எழுதப்படவில்லை. இக்கால எழுத்துக்கள் காலத்துக்குக் காலம் பல உருவ வடிவங்களைப் பெற்றுத்தான் எழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளன.
இவ்வாறான எழுத்துக்களில் மாற்றம் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை⸴ அழகுணர்ச்சி போன்றவை காரணமாக அமைகின்றன.
புள்ளிகளும் எழுத்துக்களும்
எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பிய காலம் முதல் இருந்து வந்துள்ளது.
உதாரணமாக “எ்துˮ என்று எழுதப்பட்டால் எது என்றும் “எதுˮ என்று எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தன.
அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்து புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்படுகின்றன.
உருவ மாற்றம்
நெடிலைக் குறிக்கும் ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் ( ா ) பயன்படுத்தப்படுகின்றது. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டை புளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைப்புக் கொம்பு (ன) பயன்படுத்தப்படுகின்றது.
இதே போல் உயிர்மெய் குறிக்க எழுத்துக்குப் பின் இந்த இரட்டைப் புளிக்குப் பதிலாக இன்று கொம்பு கால் (ள) பயன்படுத்தப்படுகின்றது. குற்றியலுகரம்⸴ குற்றியலிகரம் எழுத்துக்களின் மேல் புள்ளி இடும் பழக்கம் இன்று இல்லை.
முடிவுரை
தமிழ் மொழியானது இன்று வரை சிறப்புப் பெற்று வருவதற்கு அதன் வரிவடிவ வளர்ச்சியும் ஓர் காரணமாகும். உலக மொழிகளில் 24ற்கு மேற்பட்ட வரிவடிவம் கொண்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும்.
உலக மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே ஓவிய எழுத்து காலம் முதல் இன்றைய காலம் வரை தொடர்ந்து அழகு மிக்க எழுத்து வடிவங்களைக் கொண்டு உள்ளன. இது தமிழ் எழுத்துக்களின் சிறப்பினைப் பறைசாற்றுகின்றது.
You May Also Like :