தமிழ் புதிர்கள் விடைகளுடன்

Tamil Puthirgal And Answers

தமிழ் புதிர்கள் விடைகளுடன் (Tamil Puthirgal And Answers): மூளையின் செயல்திறனை அதிகரிக்க வேண்டுமானால் மூளையின் சிந்தனை திறனை தூண்ட வேண்டும்.

இந்த பதிவில் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் சிறந்த தமிழ் புதிர்கள் விடைகளுடன் காணலாம்.

தமிழ் புதிர்கள் விடைகளுடன்

அடித்தாலும் உதைத்தாலும் அழமாட்டான் அவன் யார்?

விடை: பந்து

நீரிலும் வாழ்வேன் நிலத்திலும் வாழ்வேன் நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசம் இருக்கு நான் யார்?

விடை: ஆமை

கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்க முடியாது அது என்ன?

விடை: நிழல்

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது என்ன?

விடை: விக்கல்

முறையின்றி தொட்டால் ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?

விடை: மின்சாரம்

சட்டையை கழட்டினால் சத்துணவு அது என்ன?

விடை: வாழைப்பழம்

அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வர வைப்பான் அவன் யார்?

விடை: வெங்காயம்

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன?

விடை: செருப்பு

ஒரு குகை 32 வீரர்கள் ஒரு நாகம் அது என்ன?

விடை: வாய்

பாலிலே புழு நெளியுது அது என்ன?

விடை: பாயாசம்

மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கு அல்ல.. பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார்?

விடை: அணில்

கையில்லாமல் நீந்துவான் கால் இல்லாமல் ஓடுவான் அவன் யார்?

விடை: படகு

வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?

விடை: ஆறு

தாய் குப்பையில் மகள் சந்தையில் அவை என்ன?

விடை: நெல்

கூட்டில் குடியிருக்கும் கூடு கட்டத் தெரியாது.. குரலில் இனிமையுண்டு சங்கீதம் தெரியாது அது என்ன?

விடை: குயில்

உடம்பெல்லாம் துவாரம் இருந்தும் தண்ணீரை என்னுள் சேமித்து வைப்பேன் நான் யார்?

விடை: பஞ்சு

பூ பூக்கும் காய் காய்க்கும் ஆனால் பழம் பழுக்காது அது என்ன?

விடை: தேங்காய்

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி.. பாதிநாள் குறைவாள்.. பாதிநாள் வளர்வாள் அது என்ன?

விடை: நிலா

ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன?

விடை: தென்னை

கையை வெட்டுவார் கழுத்தை வெட்டுவார் ஆனாலும் நல்லவர் அவர் யார்?

விடை: தையல்காரர்

பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?

விடை: மயில்

சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

விடை: கொசு

வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?

விடை: வழுக்கை / பொக்கை

அக்கா விதைத்த முத்து அள்ள முடியாத முத்து அது என்ன?

விடை: கோலம்

இளமையில் பச்சை முதுமையில் சிகப்பு.. குணத்திலே எரிப்பு அது என்ன?

விடை: மிளகாய்

ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆராவாரம் இருக்காது அவர்கள் யார்?

விடை: எறும்புக்கூட்டம்

எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது.. அவன் இல்லாமல் உணவே இல்லை அவன் யார்?

விடை: தண்ணீர்

மேல் ஏறி செல்லும் விமானமும் இல்லை.. தண்ணீர் உண்டு குளமும் இல்லை அது என்ன?

விடை: முகில்

பல் இருக்கும் கடிக்காது அது என்ன?

விடை: சீப்பு

இதயம் போல் துடிப்பிருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?

விடை: கடிகாரம்

நாலு கால்கள் உண்டு நடக்க தெரியாது அவன் யார்?

விடை: நாட்காலி

உள்ளே இருந்தால் ஓடித்திரிவான் வெளியே வந்தால் விரைவில் மடிவான் அவன் யார்?

விடை: மீன்

மழையில் நனைவேன் வெயிலில் காய்வேன் வெளியில் விரிவேன் வீட்டில் சுருங்குவேன் நான் யார்?

விடை: குடை

தூய்மையானால் கறுப்பாவேன் அழுக்கானால் வெள்ளையாவேன் அவன் யார்?

விடை: கரும்பலகை

உனக்கு சொந்தமான பொருள் ஆனால் மற்றவர்கள் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் அது என்ன?

விடை: பெயர்

மெல்லியதாய் இருக்கும் தண்ணீர் மேலேயே மிதக்கும் ஆனால் ஆயிரம் பேர் சேர்ந்தாலும் இதை தூக்க முடியாது அது என்ன?

விடை: நீர்க்குமிழி

ஒல்லியாய் இருப்பான் ஒற்றை கண் உடையவன் உடம்பிலே பட்டால் “உஸ்” என்று கத்திடுவாய் அது என்ன?

விடை: ஊசி

செக்கச் சிவந்திருக்கும் வைக்கோல் கொடுத்தால் தின்னும்.. நெருப்பு கொடுத்தால் சாகும் அது என்ன?

விடை: நெருப்பு

கடலில் இருந்தவன் கரையில் பிரிந்தவன் கடையில் கிடக்கிறான் அவன் யார்?

விடை: உப்பு

முன்னால் போனால் எவரையும் காட்டும் முதுகை உரித்தால் எதையும் காட்டாது அது என்ன?

விடை: கண்ணாடி

விழுந்தவுடன் வேலை செய்வான்.. வேலை இல்லையேல் மூலையில் நிற்பான் அவன் யார்?

விடை: தும்பு தடி

பயந்தால் விட மாட்டான் பழகினால் மறக்க மாட்டான் அவன் யார்?

விடை: நாய்

You May Also Like :

விடுகதைகள் மற்றும் விடைகள்

விடுகதைகள் வினா விடைகள்