ஒரு வேலையை செய்து முடிப்பதற்காக மதி நுட்பத்தை பயன்படுத்துவது தந்திரம் எனப்படும். நரியானது தந்திரம் மிக்க மிருகம் என கூறப்படுகின்றது.
அதேபோல் ஒவ்வொரு மனிதனும் தந்திரம் மிக்கவனாக இருக்க வேண்டும். ஒரு அரசன் இராச்சியத்தை ஆள்வதற்கு அவனுக்கு தந்திரங்கள் அவசியம். அரசன் கையாலும் தந்திரம் ராஜதந்திரம் எனப்படும்.
மேலும் தற்காலத்தில் நாடுகளில் காணப்படும் அரசியல்வாதிகள் தந்திரத்துடனேயே செயற்படுகின்றனர். ஒரு காரியம் சித்தி அடைய வேண்டுமெனின் தந்திரத்துடன் செயற்பட்டால் இலகுவில் அக்காரியத்தில் வெற்றி கொள்ள முடியும்.
சுருங்கக்கூறின் தந்திரம் என்பது புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும்.
தந்திரம் வேறு சொல்
- உபாயம்
- உத்தி
- யுக்தி
- சாமர்த்தியம்
- மதிநுட்பம்
- ஜாலம்
- சாணக்கியம்
- பித்தலாட்டம்
Read more: அடைமொழி என்றால் என்ன