சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

Salai Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் “சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை” பதிவை காணலாம்.

பயணங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாதாவை. நம் பயணங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
  • Salai Pathukappu Katturai In Tamil
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

குறிப்புசட்டகம்

  1. முன்னுரை
  2. சாலை பாதுகாப்பு முக்கியத்துவம்
  3. சாலை பாதுகாப்பு விதிகள்
  4. விதிகள் மீறலும் விபத்துக்களும்
  5. முடிவுரை

முன்னுரை

மனிதனது அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் அவசியமானது போக்குவரத்து ஆகும்.

அன்றாடம் தமது தேவைகளை பூர்த்தி செய்யவும் தமது தொழில் நிமித்தமும் பயணிக்கும் கணிசமானோர் சாலைகளை நோக்கி வருகின்றனர்.

மனிதனின் பயணங்கள் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து கொண்டு இருப்பதனால் சாலைகள் வாழ்வின் மகிழ்வான இடங்களை நோக்கி செல்வனவாக இருப்பது நன்று.

மாறாக பயணங்கள் விபத்துக்களையும் உயிராபத்துக்களையும் தரும் வகையில் இன்று காணப்படுவது வருத்தத்துக்குரியதாகும்.

இன்றைக்கு சாலை விதிகளை மீறுதல் மற்றும் பாதுகாப்பற்ற சாலைகளின் உருவாக்கம் போன்றவற்றினால் அதிக விபத்துக்களும் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

இக்கட்டுரையில் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகள் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

சாலைப் பாதுகாப்பு முக்கியத்துவம்

சாலைகளில் நிகழும் விபத்துக்களால் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்படுவதனால் மனிதர்களின் இயல்பான போக்குவரத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

நமது சமூகம் பாதுகாப்பாக பயணிக்கவும் விபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்ளவும் சாலைப் பாதுகாப்பு மிகவும் அவசியமாக உள்ளது.

சாலைகளில் வாகனங்களை செலுத்த மட்டுமே பலரும் அறிந்திருக்கின்றனரே அன்றி சாலைகளில் எவ்வாறு வாகனத்தை செலுத்த வேண்டும் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிகளை யாரும் அறிந்திருப்பதில்லை.

சாலைகளில் பாதுகாப்பு இல்லாத காரணங்களினால் தான் சமூகத்தில் குற்ற செயல்களும் அதிகரித்து காணப்படுகின்றன. மற்றும் அப்பாவி பாதசாரிகள் மாணவர்கள் என பலரும் விபத்துக்கு உள்ளாகின்றனர்.

தினமும் பலர் சாலை விபத்துக்களால் இறக்கின்றனர். இவ்வாறு நிலமை மோசமாகி செல்வதனால் சாலைப் பாதுகாப்பு மிக இறுக்கமாக காணப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

சாலைப் பாதுகாப்பு விதிகள்

சாலைகளில் செல்கின்ற ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என பல சாலை விதிகள் தொடர்பான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. வாகன அனுமதி பத்திரம் பெறுகின்ற ஒவ்வொருவரும் இதனை அறிந்து இதன் பிரகாரம் வாகனங்களை செலுத்த வேண்டும் என்பது சட்டமாகும்.

வீதி ஓரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சமிக்ஞை பலகைகளில் விதி முறைகள் வழங்கப்பட்டிருக்கும். வேகக்கட்டுப்பாடுகள், வீதியின் தன்மைகள், பாதசாரி கடவைகள், வளைவுகள், பாலங்கள், விலங்குகள் கடக்கும் இடங்கள், பாடசாலைகள், நீதி மன்றங்கள், வைத்தியசாலைகள் என சமிக்ஞைகள் சாலைகளின் ஓரங்களில் வழங்கப்பட்டிருக்கும்.

இவற்றினை கவனித்து வாகனங்களை செலுத்துவதன் மூலம் பெரும்பாலான விபத்துக்களை தவிர்க்க முடியும். மற்றும் உந்துருளிகளின் பாவனை அதிகமாக இன்று காணப்படுவதனால் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்யவேண்டும் என்பது விதியாகும்.

மற்றும் பிரதானமாக மதுப்பாவனையில் வாகனத்தை செலுத்த கூடாது என்பது விதியாகும். ஆனால் இன்று இடம்பெறும் அதிகமான விபத்துக்கள் மதுப்பாவனையோடு அதிகவேகத்தில் வாகனம் செலுத்துவதனால் ஏற்படுகின்றது.

இவ்வாறு அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சாலை விதிகளை பேணி வாகனங்களை செலுத்துவதனால் சாலை பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்.

விதிகள் மீறலும் விபத்துக்களும்

சாலைகள் தொடர்பான சட்டவிதிகளை மீறி வாகனம் ஒட்டுபவர்களால் அதிக விபத்துக்கள் இடம்பெறுகின்றன. மெதுவாக செலுத்த வேண்டிய மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் வேகமாக செலுத்துவதனால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காவல்துறையினரின் அசமந்த செயல்பாடுகளும் விதிகளை மீறுபவர்களை தண்டிக்காமல் லஞ்சம் பெறும் செயற்பாடுகளாலும் பலரும் குற்றமிழைக்க காரணமாக இருக்கின்றது.

மற்றும் மதுபாவனை போதை பொருள் பாவனை என்பவற்றோடு வாகனம் செலுத்துவதனால் தான் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படவும் அவர்கள் விரைவாக உயிரிழக்கவும் காரணமாக இருக்கிறது.

மக்களானாலும் சரி சாலை தொடர்பான அதிகாரிகளானாலும் சரி சாலை விதிகளை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தலும் பின்பற்றுவதனாலும் சாலை பாதுகாப்பை உயர்த்தவும் உயிராபத்துக்களை குறைக்கவும் முடியும்.

முடிவுரை

மனித உயிர்கள் மிகவும் பெறுமதியானவை அவை இன்று வீணாக சாலை விபத்துக்களால் இழப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

சாலை விபத்துக்களால் தமது வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம். கவனத்துடனும் அவதானத்துடனும் பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துவதன் மூலமாக இவற்றை தவிர்த்து கொள்ள முடியும்.

பாதுகாப்பான சாலைகள் அமைவதனால் தான் மனிதனுடைய பயணங்கள் அழகானதாக மாறும்.

எனவே சாலை விதிகளை மதிப்போம் எமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்தி கொள்வோம்.

You May Also Like :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

சிக்கனமும் சிறுசேமிப்பும் கட்டுரை