இந்த பதிவில் மாடுகளில் இருந்து எடுக்கப்படும் “கோரோசனை பயன்கள்” பற்றி பார்க்கலாம்.
கோரோசனை என்பது 15 வயதிற்கு மேற்பட்ட மாடுகளின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் பித்தமாகும். மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
மாடு இறக்கும் போது அதை எடுத்து நன்றாக காயவைத்து சித்த மருத்துவம் மற்றும் மாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. நாட்டு காராம் மாட்டில் இருந்து எடுக்கப்படும் கோரோசனையில் தான் அதிக சக்தி உண்டு.
அதிகம் துன்புறுத்தப்படும் மாடுகளின் அதிக கோரோசனை இருப்பதில்லை. இன்று சுத்தமான கோரோசனை கிடைப்பது அரிதாகிவிட்டது. கலப்படமில்லாத கோரோசனை தான் சிறந்தது.
Table of Contents
கோரோசனை பயன்கள்
1.சளியை குணப்படுத்தும். சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அனைத்தையும் முற்றிலும் குணப்படுத்த சிறந்ததாகும். வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து தேன் கலந்து கொடுப்பதால் இருமல் குணமாகும்.
2. சீதளம் நோயை விரைவில் குணப்படுத்தும். சீதளம் குணமாக இரண்டு துளி தும்பைப்பூ சாறுடன் தேன் சேர்த்துக் கொடுத்து வந்தால் சீதளம் நோய் குணமாகும்.
3. ஆஸ்துமா நோயைக் குணப்படுத்தும். கோரோசனை, இலவங்கம், குங்குமப்பூ 100 கிராம், வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம் சேர்த்து அரைத்து மிளகு அளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைத்து காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளிலும் ஒரு மாத்திரையை தேனுடன் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமடையும்.
4. காயங்களைக் குணப்படுத்தும் – கோரோசனை, ஓரிதழ் தாமரை முழுத் தாவரத்துடன் பச்சைக் கற்பூரம் சேர்த்து கலந்து பசையாக்கி நெய்யுடன் கலந்து காயத்தில் பூசி வந்தால் காயங்கள் குணமாகும்.
5. குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால் சிறிது கோரோசனையைத் தாய்ப்பாலில் கலந்து கொடுப்பார்கள். இதனால் நன்கு பேசவும், குரல்வளம் பெறவும் உதவுகின்றது.
6. வெற்றிலைச் சாறு, தேன், கோரோசனை கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது. இதன் மூலம் கபம், சளி குணமாகும்.
கோரோசனை ஆன்மீகம்
7. வாஸ்து குறைபாடுகளை நீக்கும், வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். வீட்டின் பூஜை அறையில் வைத்து தினமும் தெய்வத்தை வழிபடுவது போல் கோரோசனைக்குத் தூபதீபம் காட்டி வணங்கி வந்தால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.
8. காரியதடை நீங்க கோரோசனை பயன்படுத்தப்படுகின்றது. சங்குப்பூ செடி வேருடன் வெள்ளியன்று திலகமாகப் பூசத் துவங்கி தினசரி திலகமிட்டால் வசீகர சக்தி மட்டுமல்லாது காரியத்தடையும் நீங்கிப் பணவரவும் அதிகரிக்கும்.
கோரோசனை மாந்திரீகம்
9. மாந்திரீக பயன்பாட்டிற்கும் கோரோசனை பயன்படுகின்றது. யாரையாவது அன்புக்கு அடிபணியச் செய்ய பயன்படுத்தப்படுகின்றது. ரவி புஷ்ப நாள் வரும் வரை தினசரி கோரோசனையை மட்டும் நீரில் அல்லது சுத்தமான பசு நெய்யில் குழைத்து மந்திரம் கூறி விட்டு இட்டுவர கோரோசனையின் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளலாம்.
You May Also Like: