ஒரு விடயம் பற்றிய உண்மைத் தன்மையினை பெற்றுக் கொள்வதற்கு ஆய்வானது துணை புரிகின்றது. அந்த வகையில் ஆய்வுகளின் வகைகளுள் பிரதானமானதொன்றாக கள ஆய்வு காணப்படுகின்றது.
Table of Contents
கள ஆய்வு என்றால் என்ன
கள ஆய்வு என்பது யாதெனில் அனுபவம், அவதானம், பரிசோதனை ஆகிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்வதன் மூலம் அந்த விடயங்கள் தொடர்பான உண்மையை முன் வைப்பதே கள ஆய்வு எனப்படும். பெரும்பாலும் விஞ்ஞான ஆய்வுகளில் இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.
கள ஆய்வொன்றை மேற் கொள்ளும் போது காணப்பட வேண்டிய அம்சங்கள்
ஆய்வு செய்பவரது நோக்கு
கள ஆய்வினை மேற்கொள்பவர் தன் ஆய்விற்குரிய களத்தினை அறிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
மேலும் மக்கள் ஒவ்வொருவரும் எத்தகையவர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு பிடித்தமானவை, பேச கூடியவை, பேச கூடாதவை ஆகியவை குறித்து அறிந்த நிலையிலேயே ஆய்வானது காணப்பட வேண்டும். ஒரு சிறந்த நோக்கத்தை உடையவராக காணப்படல் வேண்டும்.
திட்டமிடுதல்
கள ஆய்வினை மேற்கொள்பவரிற்கு அது பற்றிய திட்டமிடல் அவசியமானதாகும். கள ஆய்வினை மேற்கொள்பவர்கள் திட்டமிட்டு ஒரு செயலை செய்வதன் ஊடாக கள ஆய்வினை சிறப்பாக மேற் கொள்ள முடியும்.
களத் தொடர்புகள்
அதாவது சிறந்த களத் தொடர்புகளை மேற்கொள்வதினூடாக ஒரு விடயம் பற்றிய தெளிவான தன்மையினை புரிந்து கொள்ள முடியும். இதனூடாக கள ஆய்வானது சிறப்பானதாக அமையும்.
நேர்காணல் உத்திகள்
ஆய்வாளரானவர் ஒரு விடயம் பற்றி நேர்காணலை மேற்கொள்ளும் போது நேர்காணல் பெறுபவரை உணர்ச்சிவசப்படுத்தாமை, நேர்காணலை பதிவு செய்தல், நேர்காணல் பெறுபவரை புண்படுத்தாமல் கேள்விகளை கேட்டல், நேரான விளக்கம் போன்றவற்றினூடாக நேர்காணலை மேற்கொள்ள வேண்டும்.
கள ஆய்வு முறைமையின் பண்புகள்
இது ஆய்வகத்திற்கு வெளியே நடைபெறுகிறது
நிகழ்வு ஆய்வு செய்யப்பட வேண்டிய இடத்தில் கள ஆய்வானது மேற் கொள்ளப்படுகின்றது. அதாவது ஆய்வகத்திற்கு வெளியே அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளை கொண்ட இடத்திற்கு வெளியே இடம் பெறும்.
முதலீடு
கள ஆய்வினை மேற்கொள்ளும் போது குறிப்பிட்டளவு முதலீடு என்பது அவசியமானதாகும். கள ஆய்வினை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் அல்லது அவர்கள் பணிபுரிகின்ற அமைப்பால் முதலீடு வழங்கப்படும்.
களத்தில் தரவுகள் சேகரிக்கப்படல்
கள ஆய்வின் போது ஆய்வு நிகழ்வு இடம் பெறும் இடத்தில் தரவுகள் சேகரிக்கப்படும்.
கள ஆய்வின் நன்மைகள்
பக்கச்சார்பற்ற தரவினை பெற்றுக் கொள்ள துணைபுரிகின்றது. ஆய்வு இடம் பெற்ற தன்மையினை கொண்டமைந்ததாக காணப்படும். வாழ்க்கை முறை தொடர்பான உண்மையான தரவுகளை சேகரிக்க முடியும்.
ஆய்வினை அடிப்படையாக கொண்டு தகவல்கள் காணப்படுவதோடு மட்டுமல்லாது கிடைக்கக் கூடிய தகவல்களை விரிவாக்க உதவக் கூடியதாக காணப்படும்.
ஆய்வு செய்த நிகழ்வோடு நேரடி தொடர்பானது காணப்படும். அதாவது கள ஆய்வினை எது பற்றி மேற்கொள்கின்றோமோ அந்த விடயம் சார்ந்ததாகவே கள ஆய்வானது காணப்படும்.
கள ஆய்வு முறைமையின் தீமைகள்
கள ஆய்வானது விலை உயர்ந்ததாக காணப்படும். அதாவது ஒரு புல விசாரணையின் செலவை திட்டமிட்டால் ஏனைய ஆய்வு முறைகளை விட செலவானது அதிகரித்தே காணப்படுகின்றது. அதாவது தகவல் சேகரிப்பதற்கான உபகரணம் வாங்குதல் அல்லது வாடகைக்கு எடுத்தல் என செலவு அதிகமாகவே காணப்படும்.
தரவு பகுப்பாய்வின் போது பிழைகள் காணப்படல், நீண்ட நேரத்தினை எடுக்க கூடியதாக கள ஆய்வானது காணப்படும். அதாவது தரவுகளை சேகரிப்பதற்கும், களப்பயண நிகழ்வை படிப்பதற்கும் நீண்ட நேரம் தேவைப்படுகின்றது.
Read More: சமூகம் என்றால் என்ன