இதழியல் என்றால் என்ன

இன்று இதழியானது விரைந்து வளர்ந்து வருகின்ற ஒன்றாக காணப்படுகின்றது. இன்று இதழ்களின் தாக்கத்திற்குட்படாத எந்த துறையும் இல்லை என்ற அளவிற்கு இதழ்களானது வளர்ந்து வந்துள்ளது. இதழ் என்பது பத்திரிகை, செய்தித்தாளை குறிக்கின்றது.

இதழியல் என்றால் என்ன

இதழ் என்பது ஜெர்னலிசம் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமே இதழியல் ஆகும். அதாவது அன்றாடம் நடக்கும் விடயங்களை குறிப்பிடும் ஓர் ஏடு என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அதாவது பொதுமக்கள் தொடர்புக்குரிய புதிய சாதனங்களை பயன்படுத்தி, பொதுச் செய்திகளையும் பொதுக்கருத்துக்களையும் பொது பொழுதுபோக்குகளையும் முறையாக நம்பிக்கைக்குரிய வகையில் பரப்புவதே இதழியல் ஆகும். மாத இதழ்கள் வார இதழ்கள் என பல இதழ் வகைகள் காணப்படுகின்றன.

இதழியலின் முக்கியத்துவம்

மக்களோடு தொடர்பு கொள்வதற்கும், மக்களுக்கு கருத்துக்களையும், கொள்கைகளையும் கூறுவதும் அவர்கள் எண்ணப் போக்கினை புரிந்து கொள்வதற்கும் இனிறியமையாத தேவையாக இதழியல் (செய்தித்தாள்) காணப்படுகிறது.

மக்களிடம் செய்திகளை உடனுக்குடன் உண்மையாகவும் விருப்பு வெறுப்பின்றி சிதைக்காமல் முழுமையாக வழங்க இதழியல் அவசியமாகின்றது.

வாசகர்கள் சோர்ந்து விடாமல் அவர்களை உற்சாகமூட்டி உணர்வுகளுக்கு தீனியளித்து மகிழ்விக்க கூடியதாக காணப்படுகின்றது. நகைச்சுவை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வெளியிட துணைபுரிகின்றது.

இதழ்களும் படங்களும்

இதழ்களின் வனப்பையும் செய்தியின் மதிப்பையும் கூட்டுவனவாக படங்கள் காணப்படுகின்றன. வண்ணப்படங்கள் இல்லாத இதழ்களை வாசகர்கள் கவர்வதில்லை. அச்சுக்கலை வளர்ச்சியும் புகைப்பட தொழிநுட்ப மேம்பாடும், ஓவியர்களின் நெருக்கமும் இன்றய இதழ்களின் படங்களுக்கு சிறப்பான இடத்தை தேடித்தந்துள்ளது.

இதழ்களை பார்க்கின்ற போது கண்ணை கவர்கின்ற புகைப்படங்கள், ஓவியங்கள், என பல வண்ணங்களில் இடம்பெற்றிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. படங்கள் இல்லாத இதழ்களை இன்று காணமுடியாது என்ற அளவிற்கு இதழ்களில் படங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதழியளின் மொழிநடை

ஓர் இதழிற்கு சிறப்பு சேர்ப்பவை அதனுடைய மொழிநடையாகும். இதழியல் மொழிநடையினை நோக்குவோமெயானால்

தனிநடை

இதழியல் மொழிநடையானது ஒரு தனியான மொழிநடையினை உடையதாக காணப்படுகிறது. எளிதாக வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மொழிநடை தனியானதாக காணப்படல் வேண்டும்.

பிழையற்ற மொழிநடை

இதழியல் நடையானது இலக்கிய நடையாக காணப்படல் வேண்டும் என்பதில்லை இலக்கண பிழைகள் மலிந்ததாக இருக்க கூடாது. எழுத்து பிழை மற்றும் இலக்கண பிழை இல்லாததாக காணப்படல் வேண்டும்.

சிறப்பு தேர்ச்சி

அதாவது ஒரு இதழியலாளர் தான் எழுதப் போகும் விடயம் தொடர்பாக திட்டமிட்டு இருத்தல் வேண்டும். மேலும் ஏதாவது ஒரு துறையில் தனிச்சிறப்பு பெற்று காணப்பட வேண்டும். இவ்வாறாக காணப்படுகின்ற போதே இதழியலின் மொழி நடையானது சிறந்து விளங்கும்.

சிறந்த தலைப்பு

அதாவது ஓர் செய்தித்தாளினுடைய தலைப்பு சிறந்ததாக காணப்படுகின்ற போதே வாசகர்கள் விரும்பி படிக்க கூடியவர்களாக காணப்படுவர். சிறந்த தலைப்பானது வலுவான கருத்துக்களை கொண்டமைந்ததாக காணப்படும். தலைப்பானது நீண்டதாக காணப்படக் கூடாது. இலகுவாக புரிந்து கொள்ள கூடிய வகையில் காணப்படல் வேண்டும்.

இதழ்களின் பணிகள்

அறிவுறுத்தல்: எந்தவொரு செய்தியினையும் அதன் விளைவுகளோடு வாசகர்களுக்கு தெரிவிப்பது இதழ்களின் அறிவுறுத்தல் பணியாகும்.

மகிழ்வித்தல்: இதழ்களின் மற்றுமொரு பணியாக வாசகர்களின் உணர்வுகளுக்கு ஏற்றாற் போல் அவர்களை மகிழ்வித்தலாகும். அதாவது கண்ணை கவரும் வண்ண ஓவியங்கள், சிறுகதை, கட்டுரை, புதுமை, மணம் என பல்வேறு விந்தை மிகுந்த செய்திகளை வெளியிட்டு மகிழ்விக்கின்றது.

அறிவித்தல்: இதழ்களின் முதன்மையான பணியே மக்களுக்கு செய்திகளை தருவதாகும். அதாவது உடனுக்குடன் தகவல்களை பெற்றுக் கொள்ள இதழ்கள் துணை புரிகின்றன.

வாணிபம் செய்தல்: அதாவது எந்தவொரு தொழிலும் வாணிப நோக்கத்தோடு செயல்படுகின்றன. ஓரளவு வருவாயினை தேடிக் கொள்ளும் இதழ்களால் மட்டுமே துணிச்சலாக ஒரு கருத்தை கூற முடிகிறது. சிறந்த வருவாயினை ஈட்டிக் கொள்ள துணைபுரிகின்றது.

Read More: தொடர்பாடல் திறன்கள் என்றால் என்ன

கேலிச்சித்திரம் என்றால் என்ன