மனித ஆரோக்கியத்திற்கு கலோரிகள் மிகவும் அவசியமானதாகும். இதில் முக்கிய விடயம் என்னவெனில் சரியான அளவை உட்கொள்வது முக்கியமானதாகும்.
வயது, பாலினம், அளவு மற்றும் செயல்பாட்டு நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தினசரி கலோரிகளில் 11 சதவீதத்திற்கும் அதிகமான உணவை துரித உணவில் இருந்து உட்கொள்கிறார்கள் என புள்ளிவிவரம் குறிப்பிடுகின்றது.
பெரும்பாலான மக்கள் கலோரிகளை உணவு மற்றும் பானத்துடன் மட்டுமே தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் ஆற்றல் உள்ள எதிலும் கலோரிகள் உள்ளன. உதாரணமாக, 1 கிலோகிராம் நிலக்கரியில் 7,000,000 கலோரிகள் உள்ளன.
பொதுவாக கலோரி என்பது மிகச் சிறிய அளவு என்பதால் கலோரியை ஆயிரங்களில் குறிப்பிடுவது வழக்கமாகும். அதாவது கிலோ கலோரிகள் (kcal) என்பதாகும்.
சராசரி ஆணுக்கு ஒரு நாளைக்கு 2,700 கிலோகலோரியும், சராசரி பெண்ணுக்கு 2,200 கிலோகலோரியும் தேவை என்று ஆய்வுகள் கூறுகிறது.
அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரே எண்ணிக்கையிலான கலோரிகள் தேவையில்லை. மக்கள் வெவ்வேறு விகிதங்களில் ஆற்றலை எரிக்கும் வெவ்வேறு வளர்சிதை மாற்றங்களைக் கொண்டுள்ளனர். மேலும் சிலர் மற்றவர்களை விட சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பொது ஆரோக்கியம், உடல் செயல்பாடு தேவை, செக்ஸ், எடை, உயரம் உடல் வடிவம் என்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கலோரிகள் அமையும்.
Table of Contents
கலோரி என்றால் என்ன
கலோரி என்பது அளவிடுவதற்கு உபயோகப்படுத்தும் ஒரு யூனிட் ஆகும். அதாவது ஆற்றலின் ஒரு அலகு ஆகும். நாம் சாப்பிடும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு தான் கலோரி ஆகும்.
ஊட்டச்சத்தில் கலோரிகள் என்பது மக்கள் அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலிருந்து பெறும் ஆற்றலையும், உடல் செயல்பாடுகளில் அவர்கள் பயன்படுத்தும் ஆற்றலையும் குறிக்கிறது. இது “கனலி” என்றும் அழைக்கப்படுகின்றது.
கலோரிகள் மற்றும் ஆரோக்கியம்
மனித உடல் உயிர்வாழ கலோரிகள் தேவை. ஆற்றல் இல்லாமல், உடலில் உள்ள செல்கள் இறந்துவிடும். இதயம் மற்றும் நுரையீரல்கள் நின்றுவிடும். மேலும் உறுப்புகள் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை செயல்முறைகளை மேற்கொள்ள முடியாது.
மக்கள் இந்த ஆற்றலை உணவு மற்றும் பானங்களிலிருந்து எடுத்துக் கொள்கின்றார்கள். உணவுகளின் வகைகளுக்கேற்ப கலோரிகளின் எண்ணிக்கை வேறுபடும்.
ஒவ்வொரு நாளும் தேவைப்படும் கலோரிகளின் எண்ணிக்கையை சரியான அளவோடு மட்டும் உட்கொண்டால், அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள். மிகக் குறைந்த அல்லது அதிக கலோரி உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன் உள்ளவர்கள் கலோரிகளைக் குறைக்க வேண்டும். அதனால்தான் பல எடை இழப்பு திட்டங்கள் கலோரிகளின் உட்கொள்ளலைக் குறைப்பதை மையமாகக் கொண்டுள்ளன.
மிகவும் மெலிவான உடல்வாகு கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் அதிக கலோரியுள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் கலோரிகள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் உலர் திராட்சை, பதாம், வால்நட் மற்றும் முந்திரிப் பருப்புக்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
Read more: கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்