ஒவ்வாமை என்றால் என்ன

அலர்ஜி என்றால் என்ன

ஒவ்வாமை என்றால் என்ன

ஒவ்வாமை என்பது பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதாவது தாய் தந்தை இருவருக்கும் ஒவ்வாமை இருந்தால் 60% குழந்தைகளுக்கு வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் ஒவ்வாமை இருக்கின்றது என்றால் 30% அடுத்த தலைமுறையினருக்கு வர வாய்ப்புண்டு.

ஒவ்வாமை என்பது பொதுவாக மூன்று வழிகளில் ஏற்படுகின்றது. அதாவது

  1. சுவாசத்தின் வழியாக (தூசி, புகை, வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை சுவாசிப்பதால் ஒவ்வாமை வரும்)
  2. உண்பதன் மூலம் (ஒவ்வாமையானது உணவுப் பொருட்களை உண்ணும் போது ஏற்படும். சைவ உணவாக அல்லது அசைவ உணவாக இருக்கலாம்)
  3. சருமத்தின் வழியாக (தொடுதல் மூலமாக ஏற்படலாம். அணியும் உடை, செருப்பு, ஷாம்பூ, ஷோப் போன்றவை)

இவை தவிர பூச்சிக் கடியினாலும் ஒவ்வாமை ஏற்படுகின்றது.

ஒவ்வாமை என்றால் என்ன

எமது உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எதுவாக இருப்பினும் அது ஒவ்வாமையாகும். குறிப்பாக மனித உடலில் தடுப்பாற்றல் அமைப்பில் உண்டாகும் கோளாறினால் ஏற்படும் ஒரு நிலையே ஒவ்வாமையாகும்.

ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகள்

சத்தான உணவுகளை சாப்பிடுவது போல நமக்கு ஒவ்வாமையை உண்டு பண்ணும் உணவுகளை இனங்கண்டு சாப்பிடுவதே நல்லதாகும்.

உணவினால் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்குகின்றன.

பொதுவாக உணவுப் பொருட்களுக்கு கவர்ச்சிகரமான நிறத்தை கொடுப்பதற்கும், அவை நீண்டகாலம் கெடாமல் இருப்பதற்கும் சாயங்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. இவைகள்தான் நமது உடலில் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன. மேலும் புற்றுநோயையும் வரவழைக்கின்றன.

பொதுவாக நமக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட்டவுடன் உடலில் நமக்கு சில அறிகுறிகள் தோன்றுகின்றன.

குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற தொல்லைகள் உருவாகின்றன. இதனால் சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்புகள் வெளிப்படுகின்றன.

மேலும் உதடு வீங்குதல், கன்னம் சிவத்தல், கண்கள், இமைகள், காது, தொண்டை போன்ற இடங்களில் வீக்கம் உண்டாகுதல், சுவாசிக்க சிரமம் என அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு ஆஸ்துமா, தாங்க முடியாத தலைவலியும் உண்டாகலாம்.

பொதுவாக ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளாக முட்டை, பசுப்பால், கெட்டி தயிர், கடல் மீன்கள், கருவாடு, கோதுமை, மக்காச்சோளம், முந்திரி, ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தம்பழம், வாழைப்பழம், பட்டாணி, பாதாம், சோயா பீன்ஸ், சாக்லேட்டில் உள்ள கொக்கோ, சோடா போன்றவைகள் அதிகம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மீன்களில் குளத்து மீன்களை விட கடல் மீன்கள் தான் ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக கடல் மீன்களில் டைரமின் எனும் வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளதால் இவைகளை அடிக்கடி சாப்பிட்டால் நமக்கு ஒற்றைத் தலைவலி உண்டாகலாம்.

எனவே கடல் உணவுகளில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் நமக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் லட்டு, ஜாங்கிரி, கேசரி போன்ற இனிப்பு வகைகள் மற்றும் பஜ்ஜி, போண்டா போன்ற கார வகைகளில் நிறம் கொடுக்க சேர்க்கப்படும் காரிய ஒக்சைட் பலரின் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை.

சிலருக்கு இவைகள் உடனடியாக ஒவ்வாமையை உண்டாக்குகின்றன. சிலருக்கு உடலில் கட்டிகள் உருவாக இவைகள் காரணமாக உள்ளன. எனவே இவற்றை கவனித்துக்கொண்டு ஒவ்வாமை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Read more: நீரிழிவு நோய் என்றால் என்ன

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்