என் மொழி என் அடையாளம் கட்டுரை

en mozhi en adayaalam katturai in tamil

உலகில் வாழும் மனிதன் தன்னுடைய தொடர்பாடலினை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தும் ஓர் கருவியே மொழியாகும்.

அந்த வகையில் நாம் வாழும் உலகில் பல்வேறுபட்ட மொழிகள் காணப்பட்ட போதும் அவரவருடைய மொழியே அவரவர்களுக்கு அடையாளமாக காணப்படும். அதாவது தாய்மொழி தான் அவர்களுடைய அடையாளமாகும்.

என் மொழி என் அடையாளம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மொழி என்றால் என்ன
  • தாய்மொழி
  • மொழிப்பற்று
  • தமிழ் மொழிப்பற்று கொண்ட சான்றோர்கள்
  • முடிவுரை

முன்னுரை

உலகில் பல்வேறு மொழிகள் காணப்பட்ட போதிலும் அவரவருடைய சொந்த தாய்மொழியே அவரவர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக காணப்படும்.

அந்த வகையில் மிகவும் பழமையான எம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியே எமக்கு சிறப்புக்குரியதாகும்.

அதாவது எமக்கும் எம்முடைய தாய்க்கும் எவ்வளவு நெருக்கம் உள்ளதோ, அதேபோன்றுதான் எமக்கும் எம்முடைய சொந்த மொழிக்கும் நெருக்கமான ஒரு பந்தம் நிலவுகின்றது எனலாம்.

மொழி என்றால் என்ன

உலகில் வாழ்ந்த மனிதர்கள் ஆரம்ப காலங்களில் தங்களுடைய எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்காக தோற்றுவித்த ஒன்றே மொழியாகும்.

அதாவது ஆரம்ப காலங்களில் வாய் மொழியே தோற்றுவிக்கபட்ட போதும் பிற்பட்ட காலங்களில் தான் அது எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் நாம் பேசக்கூடிய நம்முடைய தாய் மொழியாகிய தமிழ் மொழியானது, பழமைக் காலம் முதலே நாகரீகம் நிறைந்த பேச்சு மொழியையும், எழுத்து இலக்கங்களையும், இலக்கிய மரபுகளையும் கொண்டு காணப்படுகின்றது.

எம்முடைய உள்ளத்தில் தோன்றும் உணர்வுபூர்வமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒரு கருவியே எம்முடைய மொழியாகும்.

தாய்மொழி

ஓர் மனிதன் பிறந்தது முதல் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உதவியாக இருப்பதே தாய் மொழியாகும். எத்தனை மொழிகளை அவன் கற்றாலும் அவனுடைய தாய் மொழியே அவனுக்கு உயர்வானதாக காணப்படும்.

அதாவது ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் வேறு மொழிகள் பலவற்றைக் கற்ற போதிலும் அவனுடைய அதியுயர் தேர்ச்சி தாய்மொழியிலே காணப்படும். அதுவே அவனுடைய அடையாளமாகவும் விளங்கும்.

மொழிப்பற்று

இந்த உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளமாக தொழிற்படும் அவனுடைய மொழி மீது பற்று காணப்படுதல் அவசியமாகும். அதாவது எம்முடைய தாய் மொழி மீது பற்று காணப்படுதல் வேண்டும்.

நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியானது பழமையானது, மிகவும் சிறப்பு வாய்ந்து, அதனை போற்றிப் பாதுகாப்பதே தமிழ் மொழியினை பேசக்கூடிய ஒவ்வொருவரது கடமையும் ஆகும்.

நாம் எமது உலக ஒழுங்கின் நடைமுறைகளுக்கு ஏற்றாப் போல் பல்வேறு மொழிகளை கற்ற போதிலும் எம்முடைய தாய் மொழி மீது நாம் கொண்டுள்ள பற்றினை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுத்தலாகாது.

தமிழ் மொழிப்பற்று கொண்டு சான்றோர்கள்

தன்னுடைய தாய் மொழியான தமிழ் மொழி மீது அதீத பற்று கொண்டு தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்களாக. திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், சேக்கிழார் ,கம்பர், கபிலர், பாரதிதாசன் என பல்வேறு பட்ட நபர்களை குறிப்பிடலாம்.

இவர்களுடைய தமிழ் மீது இருந்த அதீத பற்று அவர்களுடைய படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு இருப்பதனைக் காணமுடியும். இந்த வகையில் தமிழ்மொழி உலகில் வாழும் காலமெல்லாம் தமிழ் மொழியை வாழவைத்த, இந்த சான்றோர்களும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.

முடிவுரை

நாம் வாழும் உலகில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அடையாளத்தினை பதித்துக் கொள்வதற்கு மொழி உறுதுணையாகவே இருக்கின்றது. இந்த வகையில் தன்னுடைய தாய் மொழியினிலே  கல்வியினை ஆரம்பித்து நல்ல நிலைமைகளில் உயர்ந்து வாழ்வதனை காண முடியும்.

எம்முடைய அறிவினையும், திறன்களையும் விருத்தி செய்து கொள்வதற்கு சிறு வயது முதலே எமக்கு உறுதுணையாக அமைவது இந்த கல்வியாகும். எனவே ஒவ்வொருவருக்கும் தம்முடைய அடையாளத்தை தேடி தரும் அவரவர் தாய் மொழியினை போற்றுவது அவசியமானதாகும்.

You May Also Like :

தமிழ் மொழியின் வரிவடிவ வளர்ச்சி கட்டுரை

செம்மொழியான தமிழ் மொழியாம் கட்டுரை