உலக காடுகள் தினம் | மார்ச் 21 |
International Day of Forests | March 21 |
பூமியின் மேற்பரப்பில் 30% நிலப்பரப்பை காடுகள் கொண்டுள்ளன. காடு என்பது மரமும் செடியும், கொடிகளும் சேர்ந்த கட்டமைப்பு மட்டுமல்ல அவை உயிர்களின் ஆதாரமும் ஆகும்.
மனிதன் உட்பட கோடான கோடி உயிர்களின் வாழ்வாதாரம். உயிரினங்களுக்குத் தேவையான காற்றினையும், நீராகாரத்தினையும் கொடுப்பது காடுகள்தான். வனங்களில் பெய்யும் மழைதான் அனைத்து உயிரினங்களுக்கும் நீராகாரத்தினைப் பெற்றுத்தருகின்றன.
வளம் கொளிக்கும் ஆறுகள், அருவிகள் உள்ளிட்ட அனைத்து நீராதாரங்களுக்கும் மூலாதாரமாக இருந்து உயிரினங்களுக்கு உணவாதாரத்தையும் கொடுப்பது காடுகளே ஆகும்.
Table of Contents
உலக காடுகள் தினம் வரலாறு
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) மாநாட்டின் 16வது அமர்வு 1971 இல் “உலக வன நாள்”க்கு ஆதரவாக வாக்களித்தது. 2007 முதல் 2012 வரை, சர்வதேச வனவியல் ஆராய்ச்சி மையம் (CIFOR) ஆறு வன தினங்களை நடத்தியது. பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நவம்பர் 28, 2012 அன்று மார்ச் 21ஐ சர்வதேச காடுகள் தினமாக (IDF) அறிவித்தது.
உலக காடுகள் தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்
காடுகளின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம். காடுகளை மதிக்கவும், பாதுகாக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது.
அதேபோல் உயிரினங்களின் வாழ்வில் காடுகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.
குறிப்பாக பூமியின் வாழ்க்கைச் சுழற்சியை சமநிலைப்படுத்த காடுகளின் முக்கியத்துவம் மற்றும் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
சர்வதேச காடுகள் தினத்தில் காடுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஊக்கமளிக்கின்றன. இதற்கான நடவடிக்கையின் முக்கியமானதாக மரம் நடும் பிரச்சாரம் முன்வைக்கப்படுகின்றது.
பல்வேறு அமைப்புகள், தனியார் மற்றும் அரசு, இந்த நாளில் காடுகளைப் பற்றி மட்டுமல்ல, காடுகளுக்கு வெளியே இருக்கும் மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றியும் மக்களுக்கு அறிவூட்டுவதலைச் செய்கின்றன.
உலக காடுகள் தினம் முக்கியத்துவம்
விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்றவற்றிற்கு காடுகள் முக்கியமானவை.
காடுகள் பல பில்லியன் மக்களுக்கு உணவு, தங்குமிடம், ஆற்றல், மருந்துகள் மற்றும் வருமானத்தை வழங்குகின்றன.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட, காடுகளை நிலையான முறையில் நிர்வகிக்க வேண்டும் மற்றும் அவற்றின் வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்.
இது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் செழிப்புக்கும், நல்வாழ்விற்கும் இன்றியமையாததாகும். வறுமை ஒழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதற்கும் காடுகள் முக்கியமானவை. மனித வாழ்வில் பல்வேறு அம்சங்களுடன் காடுகள் பின்னிப் பிணைந்துள்ளன.
குடிநீர், காலநிலை சமநிலை, விண்வெளி ஆராய்ச்சி மருந்து, கட்டிடங்களை அமைத்தல், புத்தகத் தாள்களின் பயன்பாடு, எண்ணற்ற தளபாடங்கள் மற்றும் பாத்திரங்களின் உருவாக்கம் போன்ற பல விடயங்களில் காடுகள் மனிதனுக்கு பயன்படுகின்றது.
இன்று மனித குலத்தின் தேவைக்காகவும், சுயநலத்திற்காகவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும்.
ஆனால் நகரமயமாக்கள், இயற்கைச் சுரண்டல், இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் நாள்தோறும் காடுகள் ஆயிரக்கணக்கான கெக்ரெயர் வனப்பரப்புக்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. காடுகளை பாதுகாப்பதன் மூலமே மனித வாழ்க்கையும் பாதுகாக்க முடியும் என்பதையும், உலக உயிர் மூச்சுக்கள் காடுகளே என்பதனையும் அனைவரும் உணர வேண்டும்.
மில்லியன் கணக்கான மரங்களை நடுவதன் மூலமும், உலகளாவிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் பூமியை மீண்டும் பசுமையாக்க முடியும்.
Read more: காடுகளின் பயன்கள் கட்டுரை