அம்மா பற்றிய கட்டுரை

Amma Katturai In Tamil

இந்த பதிவில் “அம்மா பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த உலகத்தை இயற்கையோ இறைவனோ படைத்திருந்தாலும் உயிர்களை பிரசவிக்கும் சக்தி தாய்க்கு உண்டு. அன்னையர்கள் நாம் கண்ணால் பார்க்க கூடிய தெய்வங்கள் ஆவார்கள்.

அம்மா பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தாய்மையின் தியாகம்
  3. குழந்தைகளின் வளர்ச்சியில் தாயின் பங்கு
  4. தாயின் பேரன்பு
  5. தாய்மையின் பெருமைகள்
  6. முடிவுரை

முன்னுரை

தாயிற் சிறந்த கோயில் இல்லை” என்று ஒளவையார் தாய்மையினை போற்றினார். தாய் என்பவள் இந்த பூவுலகில் இல்லையென்றால் மனிதன் என்னும் பிறப்பே இருந்திருக்காது என்றால் மிகையாகாது.

இறைவனையும் தாயையும் எப்போதும் உவமைப்படுத்தும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாயினுடைய அன்பினால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது. இக்கட்டுரையில் தாய்மையின் பெருமைகள் பற்றி நோக்கலாம்.

தாய்மையின் தியாகம்

தாய் என்ற ஒற்றை சொல்லின் பொருளாக அளவு கடந்த அன்பு மற்றும் எண்ணிலடங்காத தியாகம் என்று சொல்ல முடியும். ஒரு தாயானவள் ஒரு குழந்தையினை பெற்றெடுத்து அதனை பாராட்டி சீராட்டி பாதுகாத்து வளர்ப்பதற்காக தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

தன் உதிரத்தையே பாலாக தந்து குழந்தைகளினை வளர்க்கின்றாள். வாழ்வில் பல வலிகளை தாங்கி கொண்டு தனது குழந்தைகள் நலனுக்காக உழைக்கின்ற உயர்ந்த தியாக செயலாக இதனை கூறமுடியும்.

குழந்தையின் வளர்ச்சியில் தாயின் பங்கு

தாய் இன்றி ஒரு குழந்தை வளர்வது என்பது அத்தனை இலகுவானதல்ல. குழந்தையினை அன்போடு அரவணைத்து அதன் பசியை போக்க உணவழித்து அதன் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து அதனை ஒரு சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் வளர்த்தெடுப்பது ஒரு தாயின் முக்கிய பணியாக உள்ளது.

ஒரு மனிதன் சமூகத்தில் சிறந்த நிலைக்கு வருகின்றானே ஆனால் அது அவனது தாயின் வளர்ப்பு என்றே கூறலாம்.

தாயின் பேரன்பு

உலகத்தில் எத்தனையோ உறவுகள் பல இருந்தாலும் யாராலும் தாய்க்கு நிகராகி விட முடியாது ஏன் என்றால் தன் பிள்ளைகள் மீது எதிர்பாரப்புக்கள் ஏதுமின்றி பேரன்பினை ஒருவரால் தர முடியுமே என்றால் அது நம்மை பெற்ற தாயினால் தான் முடியும்.

தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் தன் குழந்தைகளுக்காக விட்டுக்கொடுக்கும் உன்னதமான உறவே தாய் என்று கூறலாம்.

தாய்மையின் பெருமைகள்

எம்மை பெற்ற வளர்த்து ஆளாக்கிய எமது தாயின் பெருமைகள் எண்ணில் அடங்காதவை மற்றும் ஈடு இணையற்றவை.

வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரிய உயர்ந்த ஸ்தானத்தை நாம் எமது அன்னையர்களுக்கு வழங்க வேண்டும். இந்த உலகினில் மிக உயரம் தாயின் பாசம் என்றால் அது மிகையல்ல.

முடிவுரை

நாள் முழுவதும் ஒரு பம்பரம் போலவும் ஓய்வே இல்லாமல் மொத்த குடும்பத்துக்காக ஒரு தாய் ஓடி கொண்டிருப்பார். தாயின் அன்பு முழுமையாக கிடைக்க பெற்ற குழந்தைகள் பெரும் வரம் பெற்றவர்கள்.

இன்றைய காலத்தில் சிலர் தம் தாயின் பெருமைகளை அறியாது அவர்கள் மனம் நோக நடந்து கொள்வதனை காண முடியும். இவ்வாறு ஒரு பொழுதும் நடந்து விடக்கூடாது.

இளமையில் எங்களை வளர்த்த அன்னைக்கு நன்றி கடனாக அவர்களை இறுதி வரை பாதுகாப்பது ஒவ்வொரு குழந்தைகளின் கடமையாகும்.

You May Also Like:

அன்னையர் தினம் கட்டுரை

அம்மா கவிதை வரிகள்