இந்த பதிவில் அப்பா கவிதை வரிகள் பதிவை காணலாம்.
மரத்தை தாங்கிப் பிடிக்கும் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை அதுபோலவே குடும்பத்தை தாங்கி பிடிக்கும் அப்பாவின் உழைப்பை பலரும் உணர்வதில்லை.
அப்பாவின் கண்டிப்பை பார்த்து அச்சமும் வெறுப்பும் கொள்ளும் குழந்தைகளுக்கு புரிவதில்லை அதுதான் நம்மை நல்வழிப்படுத்தி வாழ்க்கையின் உயரத்தை அடைய வைக்கும்.
இன்பத்தினை இருமடங்காக நம்முடன் பகிர்ந்து துன்பத்தினை மறைத்து வைத்து சிரித்திடுவார். அக்கறையும் பாதுகாப்பும் தருவதில் தந்தைக்கு நிகர் தந்தையை.
நம்மை தோளிலும் மனதிலும் தூக்கி சுமக்க கூடிய தெய்வம் ஒன்று உண்டென்றால் அது அப்பா மட்டுமே.
- அப்பா பற்றிய கவிதைகள்
- Appa Kavithai In Tamil
ஒரு வரி பொன்மொழிகள்
அப்பா கவிதை வரிகள்
பத்து மாதம் எமை சுமந்து
பெற்ற தாயை போல
எமை கருவில் சுமக்காமலே – தன்
இதயத்தில் சுமப்பவர் அப்பா
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தந்தையை விட நம்மை அன்பு செய்பவர்
இவ்வுலகில் யாருமில்லை
தந்தையின் மறு உருவம் கண்டிப்பு
கண்டிப்பால் நமை ஆழ்பவர் அப்பா
எப்போதும் விரைப்பாய் இருப்பவருள்ளே
ஆழமாய் சுரப்பது தாய்ப்பாசம்
தன் பிள்ளை சிறக்க வேண்டுமென
அல்லும் பகலும் அயராது உழைத்து
தன் வியர்வைத் துளிகளை பொருட்படுத்தாது
நமக்காக உழைப்பவர் அப்பா
கண்களில் கண்ணீர் கண்டதில்லை – அவர்
வார்த்தைகளில் வலி அறிந்தது இல்லை
தன் வேதனை வெளித் தெரியாமல்
தன் குடும்பத்திற்காய் உருகும் மெழுகுவர்த்தி அப்பா
அப்பா என்ற சொல்லிற்கு
அர்த்தங்கள் பல அகராதியில் இருந்தாலும்
என்றும் ஆழமான அவர் பாசம்
அன்பு என்பதே அவர் தாரக மந்திரம்
கை பிடித்து மெதுவாய் நடை பயின்று
இந்த உலகத்தை நமக்கு காட்டி
தான் கற்ற பாடங்களை
எமக்கு கற்று தருபவர் அப்பா
கண்டிப்புடன் கூடிய அவர் வார்த்தைகள்
நம்மை நல்வழிப்படுத்தும் ஆயுதங்கள்
அவர் அறிந்த படிப்பினைகளே – நம்
வாழ்வின் ஏற்றப்படிகள்
அவர் உழைப்பு என்றும் வெளித் தெரிவதில்லை
வாய் விட்டு தன் கவலை சொன்னதில்லை
அவரது விலை மதிக்க முடியா தியாகங்கள்
எம்மை செம்மைப்படுத்தும் கூர்ங் கற்கள்
அவமானங்கள் பல சுமந்து
தடைகள் பல கடந்து
நம் வீட்டை கட்டிக் காக்து
தன் குடும்பத்துக்காய் வாழும் ஒரு ஜீவன் அப்பா
உலகத்திலே எதற்கும் ஈடு இணையில்லாதது
ஓர் தந்தை தன்பிள்ளை மீது கொண்ட பாசம்
எதனையும் எதிர்பாரா அவர் பாசம்
ஞாலத்தில் கிடைத்தக்கரிய ஓர் பொக்கிசம்
தான் கண்ட உலகத்தை – தன்
பிள்ளை சிறப்பாய் காண வேண்டுமென
கடைசிவரை கடினமாய் உழைத்து
தன் பிள்ளைகளை ஒப்பேற்றும் தெய்வம் தந்தை
தரை மீது நம் பாதம்பட கூடாதென
தோள் மீது நமை சுமந்து
புது உலகை நமக்கு காட்டி
நம்மை புத்தம் புதிதாய் ஆக்கியவர் அப்பா
தாயை போற்றும் இவ்வுலகம்
தந்தையை போற்றி தொழ
சற்று மறந்து தான் போகின்றது – ஆனாலும்
அவர் மனம் சுணங்கி நிற்பதில்லை
இந்த உலகமே நம்மை எதிர்த்தாலும்
நமக்காக நிற்பவர் அப்பா
யாருமே புரிந்து கொள்ளா அவர் பாசம்
என்றுமே போற்றப்பட வேண்டியது
தந்தை என்றால் பாதுகாப்பு
தந்தை என்றால் துணிவு
தந்தை என்ற சொல்லே
நம் மனப் பயத்தைப் போக்கிவிடும்
உலகமே போற்றும் தாயைப் போல
நம்மை உயிராய் போற்றும் தந்தையை
எந்நாளும் உறவாய் எண்ணி
இறுதிவரை காத்திடுவோம்
You May Also Like: