இந்த பதிவில் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சட்னி என்கின்ற போது பலவிதமான சட்னிகள் நினைவிற்கு வரும். குறிப்பாக தேங்காய் சட்னி⸴ தக்காளி சட்னி⸴ வெங்காயச் சட்னி என்பவற்றைக் கூறலாம். பொதுவாக எப்போதும் இவற்றையே செய்து உண்கின்றோம்.
ஆனால் இவற்றைவிட வேர்க்கடலை சட்னியின் சுவையோ தனி சுவை. அதுமட்டுமன்றி இதன் பயன்களும் அதிகமாகும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வேர்க்கடலையில் வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
எனவே காலை உணவுடன் வேர்க்கடலை சட்னியை செய்து சாப்பிட்டால் நல்லது. இந்த வேர்க்கடலை சட்னி எப்படி செய்யலாம் என்பதனை வாங்க பார்க்கலாம்.
Table of Contents
வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
காய்ந்த வேர்க்கடலை | 1/2 கப் |
எண்ணெய் | தேவையான அளவு |
புளி | சிறிதளவு |
வர மிளகாய் | 7 |
துருவிய தேங்காய் | 1/4 கப் |
உப்பு | தேவையான அளவு |
வேர்க்கடலை சட்னி செய்முறை
முதலில் வாணலியை சூடாக்கி அதில் காய்ந்த வேர்க்கடலையை போட்டு கை விடாமல் மிதமான (மீடியம்) தீயில் அடுப்பை வைத்து வறுத்து கொள்ள வேண்டும்.
நன்கு வறுபட்டதும் அதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும். வேர்கடலை ஆறிய பின்பு அதன் தோலை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை சிறிய நெல்லிக்காய் அளவு புளி⸴ 7வரமிளகாய் இரண்டையும் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வதங்கிய கலவையைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனோடு வறுத்து வைத்த தோல் நீக்கிய வேர்க்கடலை⸴ ¼ கப் துருவிய தேங்காய்⸴ தேவையான அளவு உப்பு சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். (அதிகம் அரைக்கவோ அதிகம் நீர் சேர்க்கவோ கூடாது)
பின்னர் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் சிறிதளவு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
பின் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்⸴ முழு வரமிளகாய் ஒன்று சேர்த்து வதக்கி அதை சட்னியுடன் சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
இப்போது சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி!!!
You May Also Like: