மனிதன் பூமியில் வாழ்வதற்கு முக்கிய காரணியாக விலங்குகள் காணப்படுகின்றது. உலகில் பல்வேறு விதமான விலங்குகள் உள்ளன. மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக விலங்கு காணப்படுகின்றது.
குறிப்பாக இறைச்சி, பால், முட்டை போன்றவை விலங்குகள் மூலம் எமக்கு கிடைக்கின்றன. தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசுவின் மூலம் பால் கிடைக்கின்றது. வீட்டை காக்க நாய் உதவுகின்றது. அழகுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றது.
விலங்குகளின் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகின்றன. அதன் தோல்கள் ஆடைகளாக பயன்படுத்தப்படுகின்றன. நாம் விலங்குளை துன்புறுத்தாது அவற்றை பாதுகாக்க வேண்டும். இதன் காரணமாக வனவிலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இதனை முதன் முதலில் 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்கு வேறு பெயர்கள்
- மிருகம்
- பிராணி
- ஐந்தறிவுயிர்
- ஜீவராசி
Read more: முதுமை வேறு சொல்