விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

kalpana chawla katturai tamil

இந்த கட்டுரையில் “விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை” பதிவை காணலாம்.

சாதனைப் பெண்க்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கல்பனா சாவ்லா, அனைவாரலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படும் பெண்மணியாவார்.

விடாமுயற்சியும் கடின உழைப்பும் நம்மை உயர்த்தும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. விண்வெளியில் பெண்கள்
  3. கல்பனா சாவ்லாவின் இளமைக் காலம்
  4. கல்பனா சாவ்லாவின் விண்வெளி பயணம்
  5. கல்பனா சாவ்லா புரிந்த சாதனைகள்
  6. முடிவுரை

முன்னுரை

நாம் வாழ்கின்ற இந்த பூமியும் இன்னும் பிற கோள்களும் விண்வெளியிலே அமைந்துள்ளன. இந்த விண்வெளியானது நம் மனித மூளைக்கு அப்பாற்பட்ட பல மர்மங்களையும், அறிவியல் உண்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.

அவற்றை ஆராயும் பொருட்டு மனிதனால் பல்வேறு விண்வெளி பயணங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

உலகளவில் விண்வெளியில் பயணித்து சாதனை புரிந்தவர்களிற்கு உதாரணமாக பலரை குறிப்பிடலாம்.

இவர்களுள் நீலாம்ஸ்ரோங், கல்பனா சாவ்லா, பெக்கி வில்சன், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அலெக்ஸி லியோனோவ் போன்றோர் முக்கியமானவர்களாக உலகினால் அறியப்படுகின்றனர்.

இக்கட்டுரையில் கல்பனா சாவ்லா பற்றி பார்க்கலாம்.

விண்வெளியில் பெண்கள்

மனிதனுக்கும் விண்வெளிக்குமான தொடர்பு இன்று நேற்று உருவானதல்ல. பல்லாண்டு காலமாக விண்வெளியை ஆராய்ச்சி செய்பவனாகவே மனிதன் இருந்திருக்கின்றான். விண்வெளியில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சாதனை புரிந்துள்ளனர்.

விண்வெளியில் சாதனை படைத்த முதல் பெண்மணியாக பெக்கி வில்சன் போற்றப்படுகின்றார். அதிக நாட்களை விண்வெளியில் களித்த முதல் பெண்மணியாக கருதப்படும் இவர், 4623 முறை பூமியைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா சாதனை பெண்மணியாக கருதப்படுகின்றார்.

அதனைத் தவிர இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் இன்றைய சாதனைப் பெண்மணியாக திகழ்கின்றார்.

இவர்களுள் இந்தியாவில் பிறந்து வளர்ந்து சாதனை நட்சத்திரமாக மறைந்த கல்பனா சவ்லா மிக முக்கியமானவராவார்.

கல்பனா சாவ்லாவின் இளமைக் காலம்

உலகில் புகழ்பெற்ற விண்வெளியில் சாதனை புரிந்த பெண் விஞ்ஞானிகளில் ஒருவராக கல்பனா சாவ்லா போற்றப்படுகின்றார். விண்வெளியில் பயணித்த முதல் இந்திய பெண் விஞ்ஞானி என இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தவர்களுள் இவரும் ஒருவர்.

இவர் இந்தியாவிலுள்ள கரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் 1961ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி பிறந்தார்.

கல்பனா தன் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தாகூர் அரசுப் பள்ளியில் பெற்றுக் கொண்டார்.

பின்னர் இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பை பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை மற்றும் முனைவர் படிப்பை அமெரிக்காவிலும் கற்றார்.

சிறுவயது முதலே விமானி ஆவதிலும், விண்வெளியில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவராகக் காணப்பட்டார்.

விண்வெளிப் பயணம்

இவரது விண்வெளி பயணக் கனவு காரணமாக படிப்பை நிறைவு செய்ததும் நாசா விண்வெளி மையத்தில் பணியில் இணைந்து கொண்டார். அங்கு விமானம், மிதவை வானூர்திகளை இயக்குவதற்கான அனுமதி சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

இவரது விண்வெளிக் கனவை 1997ம் ஆண்டு தொடக்கி வைத்தார். அதே ஆண்டு கொலம்பியா விண்கலத்தில் பயணம் செய்து கிட்டத்தட்ட 372 மணிநேரம் விண்வெளியைச் சுற்றி பூமிக்கு திரும்பினார்.

விண்வெளியில் 10.6 மில்லியம் கிலோ மீற்றர்கள் பயணம் செய்து, பூமியைச் சுற்றி 252 முறை வலம் வந்து சாதனை புரிந்தார்.

விண்வெளியில் பயணித்த முதல் பெண்மணி என்ற அழியாப் புகழை இப்பயணம் இவரிற்கு பெற்றுக்கொடுத்தது.

அவரது இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003ம் ஆண்டு இடம்பெற்றது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் மேலும் ஏழு பேரை ஏற்றிக் கொண்டு விண்வெளிக்கு பயணப்பட்டது.

கிட்டத்தட்ட பதினாறு நாட்கள் விண்வெளியில் தமது ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பிய போது எதிர்பாராத விதமாக பூமிக்கு அருகில் விண்கலம் வெடித்துச் சிதறி அதிலிருந்தவர்கள் உயிரிழந்தனர்.

கல்பனா சாவ்லாவின் சாதனைகள்

பாரதி கண்ட புதுமைப் பெண்ணிற்கு உதாரணமாக விளங்குபவர் கல்பனா சாவ்லா. விண்வெளியில் பயணம் செய்வதற்கு தெரிவு செய்யப்படுதற்கு கடுமையான உழைப்பும் விடாமுயற்சியும் அவசியமாகும்.

கல்பனா சிறுவயது முதலே விண்வெளியில் பறப்பதனை தனது கனவாகக் கொண்டு கடுமையாக படித்து நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இடம் பிடித்தார்.

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையாகக் கொள்ளப்படும் இவர், தனது இறுதி விண்வெளிப் பயணத்தின் போது தன் 41வது வயதில் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவரது மறைவிற்கு பின் அவரிற்கு பல்வேறு கௌரவப் பதக்கங்கள் இந்திய அமெரிக்க அரசுகள் மற்றும் நாசா மையத்தாலும் வழங்கி வைக்கப்பட்டன.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.

மற்றும் இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.

அவரின் புகழின் உச்சகட்டமாக 2001ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முடிவுரை

சாதனைப் பெண்களுக்க எடுத்துக்காட்டாக விளங்கும் கல்பனா சாவ்லா, அனைவாரலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படும் பெண்மணியாவார்.

தடைகளை தாண்டி பெண்களும் சாதிக்கமுடியும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாகும்.

மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியம்.

You May Also Like:

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை

உழைப்பே உயர்வு தரும் கட்டுரை