வரலாறு என்பது மனிதனின் கடந்த காலத்தை பற்றிக் கற்பதாகும். அதாவது முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களைத் தேடி அறிந்து அவற்றை விளக்குவதே வரலாறு எனக் கொள்ளலாம்.
ஒரு காலத்தில் எழுதப்பட்ட நூல்களின் மூலமும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களில் தற்போது எஞ்சியிருப்பவைகளிலிருந்தும் வரலாற்றினை கற்றுக்கொள்ளலாம்.
வரலாறு நடைபெற்று முடிந்த விடயமாக இருந்தாலும் அதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக் கொள்கின்றோம். வரலாற்றைக் கற்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
வரலாற்றை கற்பதன் பயன்கள்
இறந்த காலத்தின் ஊடாக நிகழ்காலத்தை விளங்கி எதிர்காலத்தை கட்டியெலுப்ப முடியும்.
முற்காலத்தில் வாழ்ந்த எம்முன்னோர்கள் வெற்றி தோல்வியை அறிந்து கொள்வதன் மூலம் எம் நிகழ்கால மற்றும் எதிர்காலப் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு காண முடியும்.
நாம் வாழும் சமூகம் பற்றியும் உலகம் பற்றியும் விளங்கிக் கொள்ள உதவுகின்றது.
தற்காலத்தில் நாம் பார்க்கும், கேட்கும் விடயங்கள் பற்றி நிகழ்ந்தது எவ்வாறு என்பதனை விளங்கிக் கொள்ள வரலாறே உதவுகின்றது.
ஏனைய கலாசாரப் பண்பாடுகளை மதித்தல்.
வரலாற்றைக் கற்பதன் மூலம் பலதரப்பட்ட மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலாசார அம்சங்கள் ஆகியவற்றை அறிய முடிகின்றது. எனவே அவற்றை அறிந்து மதித்து வாழக் கூடிய பண்பை ஏற்படுத்துகின்றது.
வரலாறே நம் மூதாதையர்களின் வாழ்க்கை முறையினையும், அவர்கள் பயன்படுத்திய வாழ்க்கைக்குத் தேவையான யுக்திகளைப் பற்றி அறிய உதவும் சான்றுகள்.
நாம் பழங்காலத்தில் வாழவில்லை அதனால் நம் மூதாதையர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்களது பழக்கவழக்கம் போன்றவற்றை அறிந்திருக்கமாட்டோம். நாம் வாழும் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் உலகம் எவ்வாறு இருந்தது என்று அறிந்திருக்க மாட்டோம். எனவே இதனை வரலாறே எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
நாட்டின் தேசிய தனித்துவத்தைக் காண உதவுகின்றது.
நம் நாட்டிற்கே உரிய பழக்கவழக்கங்கள், ஆடை அணிகள், மொழி கலைகள் என்பவற்றை பற்றி அறிந்து கொள்ள வரலாறு மிக முக்கியமாகும். இவற்றை அறிவதன் மூலம் நாட்டின் தனித்துவத்தை உணர்ந்து அதனை மதித்து நடக்க வரலாறு துணை நிற்கின்றது.
வளங்களை பாதுகாப்பதை வரலாறு உணர்த்துகின்றது.
முற்கால மனிதர்கள் இயற்கையோடு ஒன்றித்து தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டனர். இயற்கையின் அவசியம் பற்றியும் முக்கியத்துவம் பற்றியும் நன்குணர்ந்து அதனைப் பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்தினர்.
இவற்றை அறிவதன் மூலம் வளங்களைக் காத்து இயற்கையுடன் இணைந்து வாழ வரலாறு உதவுகின்றது.
விவசாயத்தில் ஏற்படுகின்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வரலாறு பயன்படுகின்றது.
முற்காலத்தில் எவ்வாறு விவசாயத்தில் எத்தகைய வழிமுறைகளை மேற்கொண்டார்கள், பயிர்களை எவ்வாறு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க முடியும், எந்தப் பருவத்தில் விவசாயம் செய்தால் அதிக நன்மையைப் பெறமுடியும் போன்ற தகவல்களைப் பெற்று விவசாயத்தைச் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு வரலாறு உதவுகின்றது.
பழைய காலத்தில் பயன்படுத்திய பொருட்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தது வரலாற்றில் மிகவும் மக்கியமான விடயமாகும். நெருப்பை மனிதன் கண்டுபிடிக்காதிருந்தால் இன்று மனிதன் எந்தவொரு விடையத்தையும் செய்திருக்க முடியாது என்று கூறினால் அதுமிகையல்ல.
கடந்தகால வெற்றி தோல்விகளை அறிந்து அதன் மூலம் நிகழ்காலத் தவறுகளைத் திருத்தலாம்.
மனித வாழ்வில் வெற்றி தோல்வி சகயமானது வெற்றிகளை அடைந்தால் தலைக்கனம் கொள்ளாதும், தோல்விகளைச் சந்தித்தால் சோர்ந்துவிடாது முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் பல மன்னர்களின், மகான்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்கள் நமக்கு எடுத்துக் கூறி எம்மை வழிப்படுத்துபவையாக உள்ளன.
வானசாஸ்திரம், மருத்துவம் போன்ற பல துறைகளின் வளர்ச்சிக்கு வரலாறு உதவுகின்றது.
இன்றைய நவீன உலகம் பல வியத்தகு விந்தைகளைச் செய்தாலும் இதற்கு அடித்தளமாக இருப்பது வரலாற்றுப் பொக்கிஷங்களாக கருதப்படும் ஆவணங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுமேயாகும். இவற்றினை அடிப்படையாகக் கொண்டே பல ஆய்வுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
You May Also Like : |
---|
புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் |
விவசாயம் அழிவதற்கான காரணங்கள் |