ரணகள்ளி மருத்துவ பயன்கள்

Ranakalli Uses In Tamil

ரணகள்ளியானது ஓர் செடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இதன் தாவரப்பெயர் எபோர்பியா என்பதாகும். ரணகள்ளி மருத்துவ பயன்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

மருத்துவத்தில் இதன் இலை மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும் என்பதனால் கவனம் தேவை. இவை கிராமப்புறம் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் எளிதில் வளரக்கூடியது.

இலைகள் நீள்வட்ட வடிவில் காணப்படுவதுடன், நீர்ப்பற்றும் அதிகமாகக் காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவாகளாகக் காணப்படும். இலைகளின் விளிம்புகளிலிருந்து புதியதாக கன்றுகள் வளர்வதைக் காணலாம்.

ரணகள்ளித் தாவரமானது பல்வேறு மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. எனினும் ரணகள்ளி மூலிகையை மருந்தாக எடுத்துக் கொள்ளும் நாட்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறைச்சி மீன் முட்டை முதலான பொருட்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது முக்கியமாகும்.

ரணகள்ளி மருத்துவ பயன்கள்

1. எமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று தான் சிறுநீரகம். ரணகள்ளி இலையானது சிறுநீரகக் கற்களைக் கரைக்க மூலிகையாக பயன்படுகின்றது. தொடர்ந்து ஏழு நாட்கள் வரை ரணகள்ளி இலைகளைச் சாப்பிட்டு வந்தால் எவ்வளவு பெரிய சிறுநீர் கற்களாக இருந்தாலும் எளிதில் கரைந்துவிடும். சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும் இன்றி வெளியேறும்.

2. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் – தினமும் காலையில் வெறும் வயிற்றில் ரணகள்ளி இலையை மென்று தின்று வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

3. உடலில் ஏற்படுகின்ற அனைத்து வகையான புண்களையும் மற்றும் வெட்டுக் காயங்களையும் போக்குவதற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றது. இம் மூலிகை இலைகளைப் பறித்து நல்லெண்ணெயில் வதக்கி அடிபட்ட இடத்தில் வைத்து வந்தால் உடனே ரணம் ஆறிவிடும்.

அல்லது இதன் இலையை மைபோல் அரைத்து புண்ணின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் ஓரிரு வாரங்களில் காயம் முற்றிலும் மாறிவிடும். இதனால் தான் ரணகள்ளி என்று அழைக்கப்படுகின்றது.

4. காது வலியைக் குணப்படுத்தும் – ரணகள்ளி இலைச் சாற்றைப் பிழிந்து எடுத்து காதுச் சொட்டு மருந்தாக பயன்படுத்தினால் காது வலி நீங்கிவிடும்.

5. முடி வளர்ச்சி மற்றும்இ நரைமுடி பிரச்சனையை தீர்ப்பதற்கும் சிறந்த மருந்தாகும். ரணகள்ளி இலைச்சாற்றை தலையில் வைத்து குளித்தால் முடிப் பிரச்சனை தீரும்.

6. பித்த வெடிப்பைக் குணப்படுத்தக் கூடியது. ரணகள்ளிச் சாற்றை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் 7 நாட்கள் வரை தொடர்ந்து காலில் கட்டி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

7. ரணகள்ளியைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைப் பவுடர் மலச்சிக்கலைக் குணமாக்கும். செரிமானப் பிரச்சினையையும் தீர்க்கும்.

You May Also Like:

பூனைக்காலி விதை பொடி பயன்கள்
கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்