மொஹரம் என்றால் என்ன

muharram endral enna in tamil

அறிமுகம்

ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, தெலுங்கு வருடப்பிறப்பு, ரஷ்யப் புத்தாண்டு, சீன வருடப்பிறப்பு எனப் பல்வேறு புத்தாண்டுகள் இந்த உலகில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பொதுவாக அனைத்து புத்தாண்டுகளிலும் அவர்களது மகிழ்ச்சி சம்மந்தமான ஆரம்பமே அவர்களது வருடத் தொடக்கத்தில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆண்டு கணக்கைத் தொடங்கி இருப்பார்கள்.

ஆனால் இறைவனுக்காகவும், தியாகத்திற்கும் ஆண்டுக் கணக்கை தொடங்கியது இஸ்லாம்.

மொஹரம் என்றால் என்ன

மொஹரம் என்றால் என்ன

இஸ்லாம் மதங்களில் ரமலானுக்கு அடுத்துவரும் மாதம் மொஹரம் மாதமாகும். ஹிஜ்ரி நாட்காட்டியின் முதல் மாதம் ஆகும். இப்புனித மாதத்தில் சண்டைகளுக்கும், போர்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நாளில் நோன்பு இருந்தால் வாழ்வு வளம் பெறும். மொஹரம் நாளின் பத்தாவது நாள் அரபுமொழியில் அசுரா என்று குறிப்பிடப்படுகின்றது. இது தியாகத் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த மாதத்தில் பிறை நாள் 9 மற்றும் 10 ஆவது ஆகிய இரண்டு நாட்களிலும் நோன்பு வைக்கின்றனர். இப்பத்தாவது நாளே அசுரா ஆகும். அசுரா என்ற அரபுச் சொல்லுக்கு பத்தாவது நாள் என்று பொருளாகும்.

ஹிஜ்ரி ஆண்டு

கலீபா உமர் அவர்கள் ஆட்சியின் போது காலவரிசை குறித்த கேள்வி எழுந்தது. அப்போது கலிபா உமர் ஒரு கூட்டத்தைக் கூட்டி அக்கூட்டத்தில் எதை அடிப்படையாகக் கொண்டு காலவரிசை உருவாக்கலாம் என்று கேட்டபோது நபிகள் அவர்கள் மக்காவிலிருந்து, மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து நாளை அடிப்படையாகக் கொண்டு காலவரிசை தொடங்கலாம் என முடிவு எடுத்தனர்.

அதற்கு காரணம் இறைவன் ஒருவனே! அவனே எல்லாவற்றிற்கும் மேலானவன். இதற்காக அரும்பாடுபட்டவர் நபிகள் அவர்களாவர்.

தன் சொந்த மண்ணைவிட்டு, சொந்த பந்தங்களை விட்டு கல்லால் அடிபட்டு இஸ்லாத்திற்காக தனது இறைவனைத் தொழ வேண்டும் என்பதற்காகவும், சுவனத்தில் நுழைய வேண்டும் என்பதற்காகவும், நல்வழி கூட வேண்டும், ஏக இறைவனாகிய அனைத்தும் மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், மக்காவை விட்டு மதினாவிற்கு அகதியாக மனதில் வேதனையைச் சுமந்து கொண்டு சென்றார்கள்.

இந்த புலம்பெயர்வு தான் ஹிஜ்ரத் என்று சொல்லப்படுகின்றது. “இறைவனுக்காகப் புலம் பெயர்ந்தது” என்ற அந்த அழகிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த ஹிஜ்ரி. அதாவது இஸ்லாமிய புத்தாண்டு ஆகும்.

இஸ்லாமிய நாளீடு முற்றிலும் சந்திரனை அடிப்படையாக கொண்டுதான் 12 மாதங்களைக் கொண்டது. இவை மொஹரம், சவர், ரபி உல் அவ்வல், ரபி உல் ஆகிர், ஐமா அத்துல் அவ்வல், ஜமா அத்துல் ஆகிர், ரஐப், ஷபான், ரமலான், ஷவ்வால், துல் கதா, துல் ஹஜ் போன்றனவாகும்.

ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியை விட 11 நாட்கள் குறைவானது இஸ்லாமியர்களின் வருடம். 350 அல்லது 355 நாட்களைக் உள்ளடக்கியுள்ளது.

அல்லாஹ்வின் பார்வையில் எவர் புலம்பெயர்கின்றார்களோ அவர்கள் இப்பூமியில் ஏராளமான வசதிகளையும், புகழையும் காண்பார்கள்.

மேலும் அல்லாஹ்வின் பாதையிலும், இறைத்தூதர் வழிகாட்டிய பாதையிலும் புலம் பெயரும் போது மரணம் ஏற்படுமாயின் அவருக்கான நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

You May Also Like :
நோன்பு என்றால் என்ன
சமய நல்லிணக்கம் கட்டுரை