மேக வெடிப்பு என்றால் என்ன

mega vedippu endral enna

ஒரு மணி நேரத்தில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவுக்கு மழை அதாவது 10 cm மேல் மழை ஒரு மணி நேரத்தில கொட்டித் தீர்த்தால் அது “மேக வெடிப்பு” எனப்படுகிறது.

ஆங்கிலதில் இதை “cloud burst” என்றும் தூய தமிழில் “முகிற்பேழ் மழை” என்றும் கூறுவார்கள்.

மேக வெடிப்பு என்றால் என்ன

மேக வெடிப்பு என்பது விளக்கம்

சுமார் 20 – 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணிநேரத்தில் 10 சென்றி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேகவெடிப்பு (Cloud Burst) எனக் குறிப்பிடப்படுகின்றது.

வெப்பமான காற்று, தரைப் பரப்பிலிருந்து மேலே எழுந்து மேகத்திலிருந்து விழும் மழைத் துளிகளைக் கீழே விழாமல் தடுத்து, மறுபடியும் மேகத்துக்குள்ளேயே செல்லச் செய்கிறது.

இவ்வாறு கனமான தண்ணீர் துளிகள் மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்றழுத்தமே ஒரே நேரத்தில் மொத்தமாய் மழையாகக் கொட்டச் செய்யும்.

இதனால் துளித்துளியாக அல்லாமல் அருவிபோல் மழை நீர் கொட்டுவதால் அதன் வீரியமும், வேகமும் மிக அதிகமாக இருக்கும். இதனுடன் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மேலும் வீரியம் அதிகமாகும்.

சாதாரண மழைப் பொழிவு

மழைப் பொழிவானது நிலம் சூடாகும் போது நிலத்தில் இருக்கும் நீரும் சூடாகும். நீர் சூடாகி விரிவடைந்து ஆவியாகும். இதன் காரணமாக குறித்த இடத்தில் அழுத்தம் குறையும். எடை குறைவாக இருப்பதனால் நீராவி நிலத்தைவிட்டு மேலெழும். உயரம் அதிகரிக்க, அதிகரிக்க வளிமண்டலத்தில் தட்பவெப்பநிலை குறைந்துகொண்டே செல்லும். 15 கிலோமீற்றர் வரை உயரும். நீராவியானது குளிர்ந்து அங்கேயே மேகமாக மாறும். இவ்வாறு சேரும் நீர்த்திவலைகள் ஒன்றுசேர்ந்து எடை கூடும்நேரம் அந்த மேகங்களின் மீது குளிர்காற்று வீசும் போது மழையாய் பொழியும்.

மேக வெடிப்பால் ஏற்படும் பாதிப்புகள்

பொதுவாக இயற்கைப் பேரழிவுகள் உயிர் இழப்புகளுக்கும் மற்றும் பொருள் இழப்புக்களுக்கும் வழி வகுக்கின்றன.

மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு, கடும் நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான மின்னல்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் உயிர்ச்சேதங்கள், உடமைச் சேதங்கள் போன்ற பெரும் சேதங்களை ஏற்படுகின்றன.

குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக மழை பொழியும் போது ஏரிகள், அணைகளில் தண்ணீர் அதிகமாகி விடும். இதனால் நீரை திறந்து விட வேண்டியேற்படும். இதனால் வெள்ளப் பெருக்கு அதிகமாகி மேலும் சேதத்தை அதிகப்படுத்துகின்றது.

இந்தியாவில் மேக வெடிப்பு

இந்தியாவைப் பொருத்தவரையில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் பெரும்பாலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளன. மேக வெடிப்பு மலைப் பகுதிகளிலேயே அதிகம் நிகழ்கின்றது.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப் பகுதிகளிலேயே அதிகம் இடம் பெறுகின்றது.

மேக வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது புவி வெப்பமடைதல் ஆகும். இதுதவிர பனிக்கட்டி உருகுதல், பருவநிலை மாற்றங்கள் போன்றன செல்வாக்குச் செலுத்துகின்றன.

எனவே மேக வெடிப்பு நிகழாமல் இருப்பதற்கு அதிகம் மரம் வளர்க்க வேண்டும். அதிகளவான மரம் வளர்க்கப்படும் போது புவி வெப்பமடைவது கட்டுப்படுத்தப்பட்டு மேக வெடிப்பு நிகழ்வதைத் தடுக்கலாம்.

You May Also Like :
இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு
பேரிடர் மேலாண்மை கட்டுரை