இந்த பூமியில் வியக்கத்தக்க பல விடயங்கள் உள்ளன. அவ்வாறான வியத்தகு விடயங்களில் ஒன்றே மேகம் ஆகும். இந்த மேகங்கள் அழகை தருவதோடு பூமியையும் பாதுகாக்கின்றது.
மேகங்கள் பல்வேறு நீர்த்துகள்களால் உருவாகியுள்ளது. காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன.
இவ்வாறு சிறப்புடைய மேகங்களை இலக்கிய படைப்பாளர்கள் இலக்கியங்களில் பலவாறாக மேகம் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர். உதாரணமாக நளவென்பாவில்,
“ஓடுகின்ற மேகங்கால் ஓடாத தேரினில் வெரும் கூடு ஒன்று வருகுதென்று கூறுங்கள்”
என்ற பாடலில் நளன் காதலியிடம் தான் ஓடாத தேரில் வருவதாக கூறி தூது அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது.
இங்கு புகழேந்திப் புலவர் மேகத்தை தூதுவனாக பயன்படுத்தி உள்ளார். இவ்வாறு இலக்கியங்களிலிலும் நடைமுறை வாழ்விலும் பயன்படும் மேகமானது பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
Table of Contents
மேகம் என்பதன் பொருள்
மே என்றால் மேல் அல்லது மேலே என்று பொருள். கம் என்றால் வெண்மை என்று பொருள் அல்லது நீர் என்று பொருள். எனவே மேகம் என்பது வானில் தென்படும் நீர் நிறை மண்டலம் என்று பொருள்படுகின்றது.
மேகம் வேறு பெயர்கள்
- முகில்
- வனமுதம்
- வானம்
- வான்
- விசும்பு
- வார்
- விண்டு
- கதம்பம்
- கந்தரம்
- கமஞ்சல்
- கார்
- கொண்டல்
- கொன்மூ
- சலதம்
- சீதல்
- செல்
- மங்குல்
- மஞ்சு
- மாகம்
- மிகிரம்
மேகங்களின் சில வேற்று பெயர்களும் அதன் பொருளும்:
கார்:- கரிய மேகம்
கொண்டால்:- நீர் கொண்டு செல்லும் மேகம் வடக்கிழக்கில் இருந்து மழையை கொண்டு வரும் மேகம் கொண்டல்.
பொங்கல்:- வெண்மேகம், நீரற்ற மேகம்.
மை என்கின்ற சொல்லும் மேகத்தை குறிக்கும்.
கனம்:- நீருடைய மேகம் கனமாக இருக்கும் எனவே மேகத்தின் இன்னொரு பெயராக கனம் அமைகின்றது.
செல்:- ஓரிடத்தில் நில்லாமல் சென்று கொண்டே இருப்பதால் செல் என்று அழைப்பர்.
இவ்வாறு மேகம் பல பெயர் பெறுகின்றதை இதன் மூலம் அறியலாம்.
You May Also Like : |
---|
சக்கரம் வேறு பெயர்கள் |
மனிதன் வேறு பெயர்கள் |