நாம் செய்யும் அல்லது ஈடுபடும் பல கெட்ட பழக்கவழக்கங்களினால் உடல் மற்றும் உடல் உறுப்புக்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இன்றைய இந்த பதிவில் நாம் மூளையைப் பாதிக்கும் காரணிகள் பற்றி பார்ப்போம்.
மூளையை பாதிக்கும் காரணிகள்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றாக தடுக்க வேண்டும். ஏனெனில் புகைப் பிடிப்பதால் மூளைக்கு செல்லும் இரத்தம் கட்டுப்படுவதோடு மட்டுமல்லாது இதய நோய்கள், பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்க கூடாது. இதனால் உடற்பருமன் அதிகரித்தல், நீரிழிவு மற்றும் மூளையின் வினைத்திறன் குறைதல் போன்றன ஏற்படுகின்றன.
தொடர்ச்சியாக தனிமையில் இருக்க கூடாது. ஏனெனில் யாரும் துணைக்கு இல்லாது தனிமையில் அதிகளவு நேரத்தை செலவிடும் போது உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு என்பவற்றோடு சேர்ந்து மூளையும் சோர்வடைந்து விடுகிறது.
அதிகளவு சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களை உண்பதால் மூளையின் செயல்பாடு மிக விரைவாக பாதிக்கப்படும். ஐஸ்கிரீம்கள், கொழுப்புக்கள், சொக்லேட்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.
ஹைபர்டென்சன், டிப்பிரஸன் போன்ற உளவியல் ரீதியிலான பிரச்சனைகளை நாம் சாதாரணமாக கவனயீனமாக விடக் கூடாது. உடல் நலனில் அக்கறை எடுத்து வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது மூளைக்கு புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் அளிக்கிறது.
போதியளவு தூக்கம் உடலுக்கு மட்டுமன்றி மூளைக்கும் ஓய்வு அளிக்கிறது. உறக்கத்திற்கு காரணமானது மூளையில் சுரக்கும் பீட்டா அமைலேடு எனப்படும் ஹோர்மோன் சுரப்பி ஆகும். இந்த சுரப்பி குறைந்தளவு சுரப்பதனால் பலரும் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். போதியளவு தூக்கமின்மையால் மூளையின் வினைத்திறன் குறைவடையும்.
பிரயாணங்கள், விளையாட்டுக்கள், போர்கள் போன்றவற்றின் போது இயலுமானவரை தலையினைப் பாதுகாக்க வேண்டும். தலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அது நேரடியாக மூளையைப் பாதிக்கும்.
அளவுக்கு மீறி மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு மூளையின் செயற்றிறன் குறைவடைகிறது. தினமும் அதிகளவில் குடிப்பவர்கள் அதிகளவில் மூளை நரம்புகளின் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அதிகளவில் உணவு உட்கொள்ளக் கூடாது. அதிகளவு உணவு உண்பதால் மூளையில் உள்ள இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைவடையும். எனவே எப்போதும் அளவோடு உண்ண வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்று எப்போதும் சுத்தமான காற்றாக இருத்தல் வேண்டும். மாசு நிறைந்த காற்றினை சுவாசிப்பதால் நமது சுவாசத்திற்கு தேவையான ஒக்சிசன் முழுமையாக கிடைக்காமல் தடைபடக் கூடும். மூளைக்கு போதியளவு ஒக்சிசன் கிடைக்காவிட்டால் மூளை விரைவாக பாதிப்படையும்.
மூளையை எப்போதும் வேலை செய்ய விடாமல் மேற்குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி மூளையின் வினைத்திறனை அதிகரிக்க செய்வோமாக!
Read more: மன அழுத்தத்தை குறைப்பது எப்படி