ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. கல்வி கற்கும் முறைகளில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணம். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய முன்னேற்றம்.
நம் முன்னோர்கள் தங்கள் சமுதாயத்தை நல்ல முறையில் வழிநடத்தவும், பிற்காலத்தில் அவர்கள் அறிவியல் துறையிலும் மேன்மை உடையவர்களாகவும், தம் இளம் வயதினரை பயிற்றுவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கல்வியாகும்.
ஒரு மனிதன் தன் கல்வியின் மூலம் அறிவு தெளிவடைதல், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளல், சுயமதிப்பு மரியாதை, நம்பிக்கை வளர்த்தல் மற்றும் சிறந்த பழக்க வழக்கங்களை கையாளுதல் போன்ற செயல்களே சிறந்த கல்வியாகும்.
இக்கல்வியின் கற்றலின் வழிமுறைகளாக பண்டைய காலம் தொடக்கம் நவீன காலம் வரையில் பல வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
நவீன காலத்தில் கற்பித்தல், விவாதங்கள், கதாபாத்திரங்கள், பயிற்சியளித்தல், இலக்கிய ஆய்வு, மனப்பாடம் செய்தல் போன்ற செயல்களின் மூலம் கல்வி கற்கப்படுகின்றது.
இவை முறையான மற்றும் முறைசாரா அமைப்புக்களின் ஊடாக கற்பிக்கப்படுவதை காணமுடிகின்றது.
ஆரம்ப காலத்தில் கற்பித்தலானது வாய்மொழி ஊடாகவும், தங்களை பிரதிபலிப்பது மூலமாகவும் மற்றவர்களைச் சென்றடைந்தது.
அதாவது கதை சொல்லுதல் (வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுதல்), திறமைகளை வெளிக் கொணர்தல், கற்பனைத்திறன் போன்றவற்றின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு கல்வியானது எடுத்துச்செல்லப்பட்டது.
Table of Contents
முறை வைப்பு என்றால் என்ன
உபாத்தியாயர் (ஆசிரியர்) ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதே “முறை வைப்பு” என அழைக்கப்படும்.
பண்டைய கால கல்வி முறையும் நவீன கல்வி முறையும்
பண்டைய காலத்தில் குருகுலக் கல்வியானது நடைமுறையில் இருந்தது. ஆனால் இக்காலத்தில் குருகுலக் கல்வி முறைமை முற்று முழுதாக ஒழிந்து விட்டது.
முற்காலத்தில் கலை அல்லது கல்வியைப் பயில முதலில் குருவைத் தேர்ந்தெடுத்து அவரை அணுகுவர்.
இதன்போது குறித்த மாணவனுக்கு கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளதா, கல்வி கற்பதில் தகுதி உள்ளதா போன்றவற்றை அறிவதற்கு சில சோதனைகளை வைத்து அதில் தேர்வு பெற்றால் குருகுலத்தில் சேர்ந்து கொள்வார்கள்.
குருகுலத்தில் மாணவன் தங்கி கல்வி பயில்வதனையே குருகுலக்கல்வி என்பர்.
தற்கால கல்வி முறையில் பல மாறுதல்களும் முன்னேற்றமும் அடைந்து நவீன போக்குக்கு ஏற்றவாறு பல வழிமுறைகளிலும் கல்வியை பெற்றுக் கொள்ளக்கூடிய தளங்களும் வளர்ச்சி கண்டுள்ளன.
தற்காலக் கல்வி எண்ணக்கருக்களுக்கு ஏற்ப மாணவர் என்பவர் கற்பவர் அல்லது கற்றலில் ஈடுபடுபவர் ஆவார். ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர் என்பதை விட கற்க வழிகாட்டுபவர் எனலாம்.
அறிதிறன்பேசி (Smart Phone), மடிக்கணினி (Laptop), கணினி (Computer) முதலான தொழில்நுட்பக் கருவிகள் இன்றைய காலத்தில் கல்வி கற்கத்துணை செய்கின்றது.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல வசதிகளோடு இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு Webinar, Google Meet, Zoom, Teamlink முதலான செயலிகள் உதவுகின்றன. நவீன காலத்தில் கல்வி முறையானது பல மாறுதல்களுக்கு உட்பட்ட வண்ணமே தொடர்கின்றது.
Read more: கல்வியின் பயன்கள்