காலச்சக்கரத்தின் பன்னிரண்டாவது ராசியாக இது விளங்குகின்றது. இந்த ராசி இரட்டை மீன்கள் என்பதனால் எந்த விடயமானாலும் இரட்டையாக கொடுக்கும் இயல்புடையதாக உள்ளது. புதன் இவர்களது ஆட்சிக்குரிய கிரகமாகும்.
இவர்கள் தோற்றத்தில் நடுத்தரமான உயரமும் கூர்மையான கண்களும் உடையவர்கள் பேசும் போது மெல்லிய குரலில் பேசுவார்கள். மற்றவர்களுடைய சுக துக்கங்களை தன்னுடைய சுக துக்கமாக நினைப்பார்கள்.
இரகசியங்களை மறைக்காமல் வெளிப்படையாக பேசும் இயல்பு இவர்களுக்குண்டு. நிலமைக்கு ஏற்றாற் போல் மாறி விடும் குணம் இவர்களுக்கு உண்டு ஆகையினால் துர்போதனைகளுக்கும் தவறான வழிகாட்டுதல்களுக்கும் ஆளாகி தவறான வழிகளிலும் சென்றுவிடுவார்கள்.
பயந்த சுபாவம் கொண்டவர்களாகவும் இவர்கள் காணப்படுவார்கள். தமக்கு தாமே தீமைகளை உருவாக்கி கொள்ள கூடியவர்கள் இவர்கள். வீண் விவகாரங்களில் தலையிட்டு துன்பங்களை தேடி கொள்வார்கள்.
பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். சின்ன சின்ன விடயங்களில் கூட குற்றம் கண்டு பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் சமயம் பார்த்து காலை வாரும் இயல்புடையவர்கள்.
பிறருடைய வார்த்தைகளை மதிக்க மாட்டார்கள் தான் கூறுவதையே அடுத்தவர்கள் கேட்கவேண்டும் என்று எண்ணுவார்கள்.
குடும்பத்தில் அக்கறை இருப்பதால் பொருளாதாரத்தை உயர்த்தி செல்ல கூடியவர்கள். கற்பனை திறனாக பேசுவதில் இவர்கள் வல்லவர்கள். தான் நினைத்த விடயங்களை எந்த இடத்திலும் மறைக்காமல் பேசுவதனால் மனவருத்தங்களும் வந்து சேரும்.
இவர்கள் செய்யும் வேலையை சிரத்தையோடு செய்வதனால் செய்யும் காரியங்களில் மரியாதையும் புகழும் பெற்று விளங்குவார்கள்.
மேலும் பணத்தை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர்கள். தங்களுடைய பொருளாதார நிலையை பயன்படுத்தி தங்களை முன்னுரிமைபடுத்தி கொள்பவர்களாக இருப்பார்கள்.
அடுத்தவர்களுக்கு ஒரு துன்பம் வருகின்ற பொழுது முதலில் சென்று உதவும் குணம் படைத்தவர்கள். இவர்களிடம் உதவி பெற்றவர்கள் அதனை உதாசீனப்படுத்தினாலும் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் உதவி செய்யும் நல்லெண்ணம் படைத்தவர்கள்.
இவர்கள் நகைச்சுவையாக பேசுவதில் மிகவும் வல்லவர்கள். விரைவாக முடிவெடுக்கும் திறன் உடையவர்களாகவும் விளங்குவார்கள். எதிலும் இறங்குவதற்கு முன் இருமுறை சிந்திப்பார்கள். தந்திரமாக காரியங்களை சாதிக்கவும் வல்லவர்கள்.
சுயமான சிந்தனையும் தங்கள் விருப்ப படி எதனையும் செய்யும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.
உயர்ந்த பதவிகள், கௌரவம், அந்தஸ்து என்பனவற்றை அடைந்து கொள்வார்கள். பொறுப்பு மிக்க நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். ஆராய்ச்சி திறனும் இவர்களிடத்தில் காணப்படும்.
இவர்கள் சில விடயங்களில் பேராசை உடையவர்களாகவும் சில சந்தர்பங்களில் வளைந்து கொடுத்து செல்ல கூடியவர்களாகவும் இருப்பார்கள். வாழ்வில் அதிகம் தோல்விகள் பிரச்சனைகளை சந்திப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களது பேச்சினால் மற்றவர்களை நிலைதடுமாற செய்து விடக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறான குணங்களை இவர்கள் கொண்டிருப்பார்கள்.
You May Also Like : |
---|
விருச்சிகம் ராசி குணங்கள் |
கார்த்திகை மாத சிறப்புகள் |