இந்த பதிவில் மலைகளின் அரசி என்றால் என்ன என்பது பற்றி விரிவாக காணலாம்.
1. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது?
- உதகமண்டலம் (ஊட்டி)
2. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது?
- கொடைக்கானல்
Table of Contents
மலைகளின் அரசி என்றால் என்ன
மலைகளின் இளவரசி, மலைகளின் அரசி பற்றிய அறிமுகம்
தமிழகத்தில் ஊட்டி ‘மலைகளின் அரசி’ என்று அழைக்கப்படுகிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானல் ஆகும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் சுற்றுலா தளங்களில் முதன்மையாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகும்.
ஊட்டி, கொடைக்கானல் இரண்டுமே மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த இரண்டும் பார்ப்பதற்கு ரம்மியமாகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் இருக்கிறது.
மலைகளின் இளவரசி
அதிக கண்ணிற்கினிய இயற்கை இடங்களைக் கொண்டுள்ளதால் கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படுகிறது. இது பழனி மலைகளின் தென்பகுதியின் உச்சியில் அமைந்துள்ளது.
கொடைக்கானலில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை நோக்குவோமானால் ப்ரயண்ட் பூங்கா, சில்வர் பால்ஸ், கொடைக்கானல் ஏரி, டால்பின் மூக்கு, தலையர் நீர்வீழ்ச்சி, குறிஞ்சி ஆண்டவர் கோயில், செண்பகனூர் அருங்காட்சியகம், குணா குகை போன்றன அவற்றுள் சிலவாகும்.
கொடைக்கானலானது குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக்கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டு முழுவதும் உலக மக்கள் அனைவரையும் மிகவும் கவருகிறது.
ஏரி, நீர்வீழ்ச்சி, புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும் மிதிவண்டியில் செல்வதும், குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களை மகிழ்ச்சிக்கு இட்டு செல்கிறது. மேலும் இங்கு அமைந்துள்ள மலைக்கிராமங்கள் பார்ப்பவர்களை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்று விடுகிறது.
வானை முட்டும் அளவிற்கு வளர்ந்திருக்கும் பைன் மரக்காடுகள் பார்ப்பதற்கு மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். சுற்றுலா பயணிகள் ஏப்ரல் முதல் ஜீலை வரை இவ்விடத்தை காண ஏற்ற காலமாகும்.
மலைகளின் அரசி
உயரமான மலைகள், அடர்ந்த காடுகள், பரந்த புல்வெளிகள், அழகான பள்ளத்தாக்குகள் காரணமாக உதகமண்டலம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இது “ஊட்டி” என்றும் அழைக்கப்படும்.
உதகமண்டலம் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாகும்.
உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் எனப் பொருள்படும். எனவே உதக மண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.
நீலகிரி மலை என்றழைக்கப்படும் நீலமலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு மலைத்தொடராகும். இம்மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது.
12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீலநிறம் கொண்ட குறிஞ்சிப் பூ இங்கு பூத்து குலுங்கும் போது மலை முழுவதும் நீலநிறமாக காட்சி அளிக்கும். நீலகிரி மலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப்பிரதேசம் நீலநிறத்தில் தோன்றுவதால் இம்மலைக்கு “நீலகிரி” எனப் பெயர் வந்தது.
ஊட்டி இந்தியாவில் உள்ள மலைவாழிடங்களில் முக்கியமான ஒன்றாகும். ஊட்டியை சுற்றியுள்ள சுற்றுலா தளங்களாவன ரோஜா தோட்டம், ஊட்டி ஏரி, பைகாரா ஏரி, பொட்டானிக் கார்டன், வென்லாக் டவுன்ஸ், பைன் காடுகள், அவலாஞ்சி ஏரி போன்றனவாகும்.
இங்கு நிலவும் அற்புதமான காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் தேயிலை மற்றும் சுற்றுலா விழா மற்றும் கோடை விழா ஆகியவற்றிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.
You May Also Like : |
---|
பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் |
நீரின்றி அமையாது உலகு கட்டுரை |