மத்தி மீன் நன்மைகள்

mathi fish benefits tamil

மத்தி மீன்கள் தமிழகத்தில் அதிகளவு கிடைக்கக்கூடியவை ஆகும். இது கேரள மாநிலத்திற்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அசைவ உணவு அதிலும் கடல் உயிரினங்களை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மத்தி மீன் மிகவும் பிடித்ததாக இருக்கும்.

இந்த மத்தி மீனானது தென் மாவட்டமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மீனாகும். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் தான் அதிகம் காணப்படுகிறது.

மத்தி மீன் தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. கேரள மக்கள் சாளி என்றும் தெலுங்கு மக்கள் காவாலி என்றும் பெங்காலியில் கொய்ரா என்றும் அழைக்கப்படுகிறது.

மத்தி மீன் நன்மைகள்

#1. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை மத்திமீன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

#2. எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது மத்தி மீனில் கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

#3. மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் பி12 உடலிலுள்ள ஹோமோ சைஸ்டீன் அளவை கட்டுப்படுத்தி இதய பாதிப்பில் இருந்து காப்பாற்றி இதயத்தை பலப்படுத்த உதவுகிறது.

#4. கழுத்துக் கழலை நோய் ஏற்படுவதைத் தடுக்கும் இதிலுள்ள அயடின் கலந்த தாதுச் சத்து முன்கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவுகின்றது.

#5. கண் பார்வைக் குறைபாட்டை தடுக்கும். மத்தி மீனை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டால் பார்வைத் திறன் அதிகரித்து கண் பார்வைக் குறைபாடு நீங்கும்.

#6. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் டயட்டில் உள்ளவர்கள் போன்றோர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலை கட்டுக்கோப்பாகவும் வலுவாக்கவும் வைத்திருக்கலாம். உடல் எடையை குறைக்க உதவும். இதிலுள்ள கொழுப்பு மற்றும் புரதம் சாப்பிட்டபின் பலமணிநேரம் பசியை தூண்டாது என்பதனால் உடல் எடைப் பிரச்சினை தீரும்.

#7. மத்தி மீனில் உள்ள கல்சியமானது பற்களின் உறுதிக்கு உதவுகின்றது. 60 கிராம் மத்தி மீனில் 217 மில்லிகிராம் அளவு கல்சியம் இருப்பதால் உடலுக்குத் தேவையான அளவு நிறைவாக கிடைக்கின்றது.

#8. கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இது சிறந்த மீனாகும். இதனால் அவ்வப்போது மத்தி மீனை உணவில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#9. புற்று நோயை தடுக்கின்றது உடலில் வளரும் புற்று செல்களை எதிர்க்க உடலுக்கு வைட்டமின் டி, கால்சியம் அதிகம் தேவைப்படுகின்றது. சிலவகை புற்றுநோயை மத்தி மீனில் உள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் தடுக்கின்றது.

#10. உடலுக்கு அதிகப்படியான எதிர்ப்பாற்றலை அளிக்கின்றது. உடல் உறுப்புகளுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை மத்திமீன் நிறைவாக கொடுப்பதால் உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல ஆக்சிஜனை நிறைவாக அளிக்கின்றது.

#11. மூளையைப் புத்துணர்வாக்கும். ஆய்வு ஒன்றில் ஒமேகா3 கொழுப்பு அமிலம் மனச்சோர்வு இல்லாமல் வைக்க உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தி மீன் மன அழுத்தம் சோர்வு இல்லாமல் இருக்க உதவுகின்றது.

#12. சரும அலர்ச்சியைக் குறைப்பதோடு சர்மத்தை பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகின்றது.

You May Also Like:
தர்ப்பை புல் பயன்கள்
மக்கா வேர் பயன்கள்