உடலானது சீரானதாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட சிறந்த போசணை அவசியமாகும். போசணை மிக்க உணவுகளை உட்கொள்வதினூடாகவே சிறந்த வாழ்க்கையினை வாழ முடியும்.
Table of Contents
போசணை என்றால் என்ன
போசணை எனப்படுவது உடற் தேவைகளுக்கேற்ப நாம் உட்கொள்கின்ற உணவின் வகை மற்றும் அளவே போசணை எனப்படும்.
அந்த வகையில் உணவானது மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் போன்ற போசணைகளை கொண்டமைந்ததாக காணப்படல் வேண்டும். உடலிற்கு தேவையான அளவு போசணை கூறுகள் கிடைக்காவிடின் உடலில் பல்வேறு போசணை குறைபாடுகள் ஏற்படும்.
போசணை மற்றும் அதன் தொழிற்பாடுகள்
மாப்பொருள்
மாப்பொருள் போசணை கூறுகளை உடைய உணவு வகைகளை உட்கொள்வதினூடாக உடலிற்கு தேவையான சக்தி கிடைக்கப் பெறும். மாப்பொருள் உணவுகளாக தானியங்கள், கோதுமை, கிழங்கு வகைகள், காய்கள் (பலாக்காய், ஈரப்பலா) போன்றவற்றை குறிப்பிடலாம்.
புரதங்கள்
புரதத்தினை உடைய உணவு வகைகளை உட்கொள்வதினூடாக உடல் வளர்ச்சி ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியானது புரத உணவு வகைகளிலேயே காணப்படுகின்றன. புரதமானது பால், மீன், இறைச்சி, முட்டை மற்றும் தாவர உணவுகளான பயறு, கடலை, போஞ்சி, அவரை, சோயா, உழுந்து போன்ற உணவுகளில் காணப்படுகின்றது.
கொழுப்புக்கள்
கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்பதினூடாக உடலிற்கு தேவையான சக்தியானது கிடைக்கப் பெறுகின்றது. இந்த உணவு வகைகளாக எண்ணெய் வகைகள், இறைச்சி, மீன், சீஸ், பட்டர், மாஜரின், தேங்காய் போன்ற உணவு வகைகளை குறிப்பிடலாம்.
விற்றமின்கள் மற்றும் கனியுப்பொருட்கள்
விற்றமின் மற்றும் கனியுப்பொருட்கள் உள்ள உணவுகளை உண்பதன் மூலம் நோய்களிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும். உடலை பாதுகாப்பதற்கான போசணை கூறாக இது காணப்படுகின்றது. இந்த வகையான உணவுகள் மரக்கறிகள், பழவகைகள், பால் பொருட்கள், ஈரல், கீரை வகைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன.
போசணை குறைபாடு என்றால் என்ன
உடலிற்கு தேவையான போசணை கிடைக்காத போது போசணை குறைபாடு ஏற்படுகின்றது. அதாவது போசணை கூறுகள் சரியான அளவில் உடலிற்கு கிடைக்கப் பெறாத போது போசணை குறைபாடு ஏற்படும்.
போசணை குறைபாட்டின் விளைவுகள்
உடலிற்கு தேவையான போசணைகள் சரியாக வழங்கப்படாதவிடத்து உடல் வளர்ச்சி குறைவடைதல், கற்றல் குறைபாடு போன்றன ஏற்படும். கல்சிய போசணை குறைபாட்டினால் எலும்பு, பல் வளர்ச்சி தடைப்படல். நோயெதிர்ப்பு சக்தி உடலில் குறைவடையும்.
விற்றமின்கள் கனியுப்பொருட்கள் போன்றவை குறையுமிடத்து தோல் நோய்கள், மாலைக் கண், குருதிச் சோகை, மலட்டுத் தன்மை, இரத்தப் பெருக்கு என பல நோய்கள் போசணை குறைபாட்டினால் ஏற்படக் கூடியதாகும்.
இன்றைய உணவு முறையும் போசணையும்
ஒரு மனிதனானவன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்க்கையை வாழ்வதற்கு போசணை மிக்க உணவானது அவசியமாகும்.
இன்று துரித உணவு பழக்கவழக்கங்களினால் பல்வேறு நோய்களும் போசணை குறைபாடுகளையும் அனைவரும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறான உணவு வகைகளில் அதிகளவு கொழுப்பு மற்றும் சீனி, உப்புக்களை கொண்டமைந்தவைகளாகவே காணப்படுகின்றன.
இதன் காரணமாக இன்று நிறை அதிகரிப்பு, நீரிழிவு, கொலஸ்ரோல், இதய நோய், புற்று நோய் என பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த வகையான உணவு வகைகளை குறைத்து ஆரோக்கியமான போசணை கூறுகளை உடைய உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் பல தரப்பட்ட கலப்புணவை உட்கொள்வதினூடாகவே நோயிலிருந்து எமது உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பச்சை காய்கறிகள் கீரை வகைகள், புரதம், காபோவைத்திரேற்று உள்ள உணவுகளை உட்கொள்ளல் வேண்டுமே தவிர துரித உணவுகளை தவிர்த்து நடப்பதன் ஊடாகவே ஆரோக்கியமாகதும் சுகாதாரமானதுமான வாழ்க்கையினை வாழ முடியும்.
Read More: நார்ச்சத்து மிக்க உணவுகள்