ஒரு நாட்டின் பொருளாதாரமானது வளரும்போது அந்நாட்டின் திறன் வளர்ச்சி அடைகின்றது. குறிப்பாக குடிமக்களுக்கு தேவையான சுகாதாரம், கல்வி, சமூகம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை பொதுச் சேவைகள் மற்றும் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு தேவையான திறன் போன்றவை வளர்ச்சி அடைகின்றது.
அதுமட்டுமன்றி வளங்களை பெறவும், கையாளவும் முடியும். மேலும் பொருளாதார வளர்ச்சியானது செல்வத்தை உருவாக்குவதற்கு இன்றியமையாததாகும்.
முதலாளிகளை உருவாக்குவதற்கும் அதன் மூலம் தொழிலாளர்களை மேம்படுத்தவும், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத்தரவும் பொருளாதார வளர்ச்சி மிகவும் அவசியமானதாக உள்ளது.
மக்கள் அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளவும், நல்வாழ்வை மேம்படுத்தவும் ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி இன்றியமையாததாகும்.
மேலும் உலக அளவில் நோக்கும்போது வறுமையைக் குறைப்பதிலும், பொருட்களுக்கான அணுக்களை அதிகரிப்பதிலும் வெற்றி கண்ட பெரும்பாலான நாடுகள் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் முன்னேற்றம் கண்டிருப்பதை காண முடிகிறது.
எனவேதான் இன்றைய உலகச் சூழ்நிலையில் நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்கின்றன. அத்துடன் நாடுகளுடன் பொருளாதார நல்லுறவுகளையும் பேணி வருகின்றன.
Table of Contents
பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன
பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் கருத்துப்படி “பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு அம்சமாகும்” என்கின்றார்.
பொருளாதாரம் வளர்ச்சி மனிதனின் பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்துகின்றது என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் ஐநா சபையின் பார்வையில் பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகும்.
பொருளாதார வளர்ச்சியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருளாதாரத்தில் வெளியிட்ட நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), மொத்த தேசிய உற்பத்தி (GNP) ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவு கோல்களாகும். இது பொருளாதாரத்தின் உண்மையான அளவை கணக்கிட உதவுகின்றது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் இரண்டுக்குமிடையிலான வேறுபாடுகள்
பொருளாதார வளர்ச்சி என்பது குறுகிய கால கருத்தாகும். ஆனால் பொருளாதார முன்னேற்றம் என்பது நீண்டகாலக் கருத்தாகும். பொருளாதார வளர்ச்சியினுடைய அணுகுமுறை இயல்பானது அளவில் இயல்பாக உள்ளது. பொருளாதாரத்தின் முன்னேற்றமானது தரத்தின் இயல்பாக உள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சியின் நோக்கம் GDP, GNP, FD, FIL போன்ற அளவுகளை அதிகரிப்பதனை நோக்காக கொண்டுள்ளது.
ஆனால் பொருளாதார முன்னேற்றமானது வாழ்க்கைத்தர முன்னேற்ற விகிதம், குழந்தைகள் எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றை நோக்காக கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியானது இயற்கையில் குறுகிய காலத்தை உடையதாக உள்ளது. அதேசமயம் பொருளாதார முன்னேற்றம் இயற்கையில் நீண்ட காலத்தை உடையதாக காணப்படுகின்றது.
வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியும், வளர்ந்த நாடுகளில் பொருளாதார முன்னேற்றமும் காணப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சி அளவிடும் நுட்பமாக நாட்டு வருமானத்தை அதிகரித்தல் காணப்படுகின்றது.
அதேவேளை பொருளாதார முன்னேற்றத்தின் வளர்ச்சி நுட்பங்களாக உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல் அதாவது தனிமனித வருமானம் போன்றவை ஆகும். பொருளாதார வளர்ச்சி ஒரு தானியங்க செயல்முறையாகும்.
எனவே அரசாங்க உதவி அல்லது ஆதரவு அல்லது தலையீடு தேவைப்பட மாட்டாது. ஆனால் பொருளாதாரம் முன்னேற்றத்தில் அரசாங்கத் தலையீட்டை மிகவும் நம்ப வேண்டியுள்ளது.
எனவே அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் பொருளாதாரம் முன்னேற்றம் சாத்தியமில்லை.
Read more: பொருளாதாரம் என்றால் என்ன